மாண்டேக் சிங் அலுவாலியா விமர்சனம்!
வெளிநாடுகளில் கடன் பத்திரங்கள் விற்பனை
செய்யும் திட்டத்தால், நன்மையை விட கேடு களே அதிகம் என்று பொருளாதார
வல்லுநரும், திட்டக் குழு முன்னாள் துணைத் தலைவருமான மாண்டேக் சிங்
அலுவாலியா கூறியுள்ளார்.
நாட்டின் நிதிப் பற்றாக்குறை யைக்
குறைக்க உள்நாட்டு நிதி சார்ந்த நடவடிக்கைகளை மட்டுமே நம்பி இருக்காமல்,
வெளிநாடு களில் இருந்து நிதி திரட்டும் வகையில் கடன் பத்திரங்களை வெளியிட
மோடி அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ரூ. 70 ஆயிரம் கோடி நிதி
திரட்ட இலக்கும் நிர்ணயிக்கப்பட் டுள்ளது.
இந்நிலையிலேயே, மோடி அரசின் இந்த முடிவு சரியானது அல்ல என்று அலுவாலியா கூறியுள்ளார்.
முன்பே இதுபற்றி பலமுறை தீவிரமாக
ஆலோசிக்கப்பட்டதாக வும், ஆனால், இதில் நன்மைகளை விட கேடுகளே அதிகம்
என்பதால் கை விடப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ''நிதியை,
அந்நியச் செலாவணியில் திரட்ட விரும்பினால், வெளிநாட்டு முதலீட்டாளர்களை,
இந்தியாவில் விற்கப்படும் கடன் பத்திரங்களை வாங்க வைப்பது குறித்து திட்ட
மிடலாம்.
அதற்காக கடன் பத்திரங்களை அந்நிய செலாவணி
மதிப்பில் வெளி நாடுகளில் விற்பனை செய்வது சரியான முடிவல்ல. கடன்
பத்திரங்கள் இந்திய ரூபாய் அடிப் படையில் இருப்பதுதான் அரசுக்கு நல்லது.
மாறாக, அரசு தற்போது எடுத்துள்ள முடிவால், பிற நாடு களைச் சேர்ந்த வணிக
வங்கிகள் மட்டுமே பெரிய அளவில் லாபம் ஈட்டும். மாறாக அரசுக்கு பலன்கள் மிக
மிகக் குறைவு என்று பாதகங் களை அலுவாலியா அடுக்கியுள் ளார்.
மாண்டேக் சிங் அலுவாலியா, ஆக்ஸ்போர்டு
பல்கலைக் கழகத் தில் படித்தவர். மிக இளம் வயதிலே யே உலக வங்கியில்
பணியாற்றியவர். அய்.எம்.எப்.-பிலும் அதிகாரியாக பணி யாற்றினார்.
இந்தியாவில் புதிய பொரு ளாதாரக் கொள்கையை அமல்படுத் துவதில், மன்மோகன்
சிங்கிற்கு அடுத்த படியாக முன்னின்று செயல்பட்டவர்.
No comments:
Post a Comment