இஸ்ரோ நிறுவனத்தால் ‘சந்திராயன்-2'
விண்கலம் நேற்று காலையில் ஏவப்படுவதாகத் திட்டமிட்டிருந்தது. திருப்பதி
ஏழுமலையான் பாதார விந்தத்தில் வழக்கம்போலவே இயக்குநர் சிவன் ‘சந்திராயன்-2'
திட்ட நகலை வைத்து வழிபட்டு வந்தார்.
கடைசி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விண்ணில் ஏவுதல் நிறுத்தப்பட்டது!
ஆனால், ‘‘அவுட்டுத்திரி'' பார்ப்பன
‘தினமலரின்' அவசர அவசரத்தைப் பாருங்கள். நேற்று காலை வெளிவந்த (15.7.2019)
‘தினமலர்' முதல் பக்க தலைப்புச் செய்தி என்ன தெரியுமா?
‘‘விண்ணில் ஏவப்பட்டது
சந்திராயன்-2''
என்பதாகும்.
என்ன அவசரம்! திருப்பதி ஏழுமலையான்
அருளால் விண்கலம் ஏவப்பட்டது - வெற்றியுடன் நடந்தது என்று காட்டவேண்டும்;
பா.ஜ.க. ஆட்சியின் சாதனைப் பட்டியலிலும் வைக்கவேண்டும். முந்தி செய்தி
தரும் ஒரே ஏடு ‘தினமலர்' என்று காட்டி வியாபாரத்தைப் பெருக்கிக் கல்லாப்
பெட்டியை நிரப்பவேண்டும் - இதுதானே இதன் நோக்கம்.
சரி, தவறான செய்தி வெளியிட்ட ‘தினமலர்'
மறுநாள் (இன்று) தவறுக்கு வருந்துகிறோம் என்று குறைந்தபட்ச பத்திரிகா
தர்மத்தையாவது கடைப்பிடிக்க வேண்டாமா? அவாள் தர்மம் எல்லாம் ஒரு
குலத்துக்கொரு நீதிதானே!
வாசகர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
முந்திரிக்கொட்டைப் பத்திரிகை - மோசடியாக
செய்திகளை வெளியிடும் ‘‘அவுட்டுத்திரி'' பத்திரிகை - பத்திரிகா தருமத்தைக்
கடைப்பிடிக்காப் பத்திரிகை என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும், அவ்வளவுதான்!
ஹி....! ஹி....!!
No comments:
Post a Comment