லக்னோ,
ஜூலை 17- உத்தரப்பிர தேச மாநிலம் பிரயாக்ராஜ்
நகரில் தற்காலிக மாட்டுக்கொட் டகைகளில் அடைக்கப்பட்டி ருந்த 35 மாடுகள் உணவு, தண்
ணீரின்றி உயிரிழந்துள்ளன.
மத்தியில்
ஆட்சிக்கு வந்த மோடி அரசு,
பசுக்களைப் பாது காப்பதற்காக ராஷ்ட்ரிய
கோகுல் மிஷன் என்றஅமைப்பை உரு
வாக்கி, ஆண்டுதோறும் பல நூறுகோடி ரூபாய்களை
அள்ளி இறைத்து வருகிறது. 2017-18 இல்
ரூ.301 கோடி ஒதுக் கப்பட்ட
நிலையில், இது 2019-20ஆம் ஆண்டிற்கு ரூ.
750 கோடி ரூபாயாக உயர்த்தப்பட் டது.
உத்தரப்பிரதேச
மாநில பாஜக அரசு மட்டுமே
மாடு களுக்காக ரூ. 160கோடி நிதி
ஒதுக்கீடு செய்து, மாநிலம் முழு
வதும் 750 மாட்டுக் கொட்டங் கள்அமைத்தது. காவல்
நிலை யம், காவலர் குடியிருப்பு,
அரசு ஊழியர்கள் குடியிருப்புகள் மட்டுமன்றி, சிறைச் சாலையி லும்
கூட, கொட்டம் அமைத்து மாடுகளைப்
பராமரிக்க வேண் டும் என்று
உத்தரவு போட் டது.இந்நிலையில்தான்,
பிரயாக்ராஜ் (அலகாபாத்) பகு தியில் உள்ள
கந்தி கிராம் மாட் டுக்
கொட்டத்தில் 35 மாடுகள் உயிரிழந்துள்ளன. மின்னல்
தாக்கியதாலேயே மாடுகள் உயி ரிழந்ததாக
மாவட்ட ஆட்சியர் அரசுக்கு அறிக்கை அனுப்பி யுள்ளார்.
ஆனால், ஆட்சியர் பொய் சொல்வதாகவும், மின்
னல் எதுவும் வெட்டவில்லை என்றும்
உள்ளூர் கிராமவாசிகள் கூறியுள்ளனர். மேலும், கொட் டத்தில்
அடைக்கப்பட்டிருந்த மாடுகளுக்கு அண்மைக்கால மாக சரிவர உணவு,
தண்ணீர் என்று எதுவும் வழங்கப்பட
வில்லை; இதனாலேயே மாடு கள் இறந்துள்ளன
என்றும் உள் ளூர் மக்கள்
குற்றம் சாட்டி யுள்ளனர்.
No comments:
Post a Comment