Friday, July 12, 2019

விண்ணப்பித்த 11 நாள்களில் கடவுச்சீட்டு பெறலாம்: வெளியுறவு அமைச்சகம் தகவல்

விண்ணப்பித்த 11 நாள்களில் மக்களுக்கு தற்போது கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) அளிக்கப்படுவதாக இந்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வீ. முரளிதரன் தெரிவித்துள் ளார்.

இதுகுறித்து மக்களவையில் கேள்வி நேரத்தின்போது எழுப்பப் பட்ட கேள்விக்கு, அவர் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்ப தாவது: சாதாரண சூழ்நிலைகளில் விண்ணப்பிக்கும் மக்களுக்கு பாஸ்போர்ட் அளிக்கப்படுவதற்கான கால அவகாசம் தற்போது குறைந்துள்ளது.  அதாவது, வெறும் 11 நாள்களில் கடவுச்சீட்டு வழங்கப்பட்டு விடுகிறது. தட்கல் அடிப்படையில் கடவுச்சீட்டு கேட்டு விண்ணப்பிக்கும் மக்களுக்கு ஓரிரு நாள்களில் கடவுச்சீட்டு வழங்கப்படுகிறது.

கடவுச்சீட்டு கேட்டு விண்ணப்பிக்கும் மக்களின் விவரங்களை சரி பார்ப்பதற்கு, நாடு முழுவதும் 731 காவல் மாவட்டங்களில் செயலி தொடங்கப்பட்டுள்ளது.
இதனால் தகவலை உறுதிப்படுத்தும் பணியில் ஏற்படும் காலதாமதம், ஊழல் ஆகியவை தற்போது தவிர்க்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...