கடந்த 5 மாதங்களாக கேம்பர் பஞ்சு ஏற்றுமதி
அதிகரிப்பால் உள்நாட்டில் விசைத்தறி துணி உற்பத்திக்குப்
பயன்படுத்தப்படும் நூலுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு அதன் விலை கடுமையாக
உயர்ந் தது. மேலும் மக்களவைத் தேர்தல் மற்றும் தேர்தல் நடத்தை விதி
முறைகளால் பணப்புழக்கம் குறைந்தது. வட மாநிலங்களில் தண்ணீர்
பற்றாக்குறையால் சலவை பணி பாதிப்படைந்துள்ளது.
பன்னாட்டு அளவில் டாலர் மதிப்பு வீழ்ச்சி
உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் துணி விற்பனை சந்தையில் மந்த நிலை ஏற்பட்டது.
ஒரு மீட்டர் துணி உற்பத்திக்கு ரூ. 35 முதல் ரூ. 40 வரை செலவு ஆன நிலையில்
துணி வர்த்தகர்கள் ஒரு மீட்டர் துணியை ரூ.30 முதல் ரூ.32-க்கு கொள்முதல்
செய்ய முன்வந்தனர். உற்பத்தி செலவுக்கேற்ப துணி விற்பனை விலை இல்லாததால்
துணி உற்பத்தி குறைந்தது.
இதன் காரணமாக பல்லடம் பகுதி துணி
உற்பத்தியாளர்களின் கிடங்கில் ரூ. 1,000 கோடி மதிப்பி லான துணி ரகங்கள்
தேக்கமடைந் துள்ளன. விலையில் மாற்றம் ஏற்படாவிட்டால் துணி உற்பத் தியை
மேலும் குறைக்க வேண் டிய நிலை உள்ளது.
இதுகுறித்து பல்லடம் துணி உற்பத்தியாளர் எஸ்.முருகேசன் கூறியதாவது:
கேம்பர் பஞ்சு விலை உயர்வு, வட
மாநிலங்களில் தண்ணீர் பற் றாக்குறையால் டையிங் ஆலை களில் துணி சலவை செய்ய
முடி யாத நிலை, பன்னாட்டு அளவில் டாலர் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால்
துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
பல்லடம் பகுதியில் ரூ. 1,000 கோடி
மதிப்பிலான உற்பத்தி செய்யப்பட்ட 20 கோடி முதல் 25 கோடி மீட்டர் துணி
விற்பனையா காமல் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் துணி உற்பத்தி குறைந்
துள்ளது. வாரத்தில் இரண்டு நாள் கள் கட்டாய விடுமுறை அளிக்க வேண்டிய நிலை
உள்ளது. இதனால் தொழிலாளர்களுக்கும் வருமானம் குறைந்துள்ளது.
பல்லடம் பகுதியின் பொரு ளாதாரம்
பாதிக்கப்பட்டுள்ளது. வங்கதேசம், சீனா ஆகிய நாடு கள் விலை குறைவாக துணியைத்
தருவதால் நம்நாட்டு ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்றும தியை அதிகரிக்க
மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். விசைத்தறி தொழில் நலிவ டைந்த
நிலையில் இருப்பதால் வங்கிக் கடனை திரும்ப செலுத்த கால அவகாசம் மற்றும்
வட்டி சலுகை அளிக்க வேண்டும்.
No comments:
Post a Comment