Tuesday, June 4, 2019

பள்ளிக் கல்வி காவியாகிறதா?


தமிழ்நாட்டில் பன்னிரெண் டாம் வகுப்பு பொதுத் தமிழ் புத்தகத்தின் அட்டைப் பக்கத்தில், பாரதியாரின் தலைப்பாகை காவி நிறத்தில் அச்சிடப்பட்டுள்ளது.
பாரதியார் என்றாலே  அனைவரின் நினைவுக்கு வருவது அவரின் முண்டாசு தான். வெள்ளை நிறை தலைப்பாகையும், முறுக்கு மீசையும், கருநிற உடையும்  பாரதி யாரின் உருவத்தை  கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகின்றன. இந்நிலையில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தமிழ் புத்தகத்தின் அட்டைப் பக்கத்தில், பாரதி யாரின் தலைப்பாகை காவி நிறத்தில் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. வழக்கமாக எல்லா இடங்களிலும் பாரதியாரின் தலைப்பாகை வெள்ளை நிறத்தில் இருக்கும் நிலையில், காவியுடன் பாரதியாரின் தலைப்பாகை இருப் பது ஏன் என பலரையும் கேள்வி எழுப்ப வைத்துள்ளது.
இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறும்போது,  "நான் நீண்ட காலமாக தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். ஆனால் பாரதியாரின் தலைப்பாகை காவி நிறத்தில் இருப்பதை இப் போது தான் பார்க்கிறேன். வழக்க மாக தலைப்பாகை வெள்ளை நிறத்தில்தான் இருக்கும்" எனத் தெரிவித்தார்.
பாரதியாரை காவி நிற தலைப்பாகையோடு யாராவது பார்த்திருக்கிறீர்களா..?' என திமுக எம்எல்ஏவும், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பி யுள்ளார்.
மாணவர்கள் மத்தியில் பாரதி யாரின் தோற்றத்தை மாற்றிக் காட்டுவதற்கான முயற்சி இது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தமிழ்நாடு பாட நூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவரான வளர்மதி இதுகுறித்து கூறும்போது,
"மாநில அரசால் வழங்கப்பட்ட பாடப்புத்தகம் இது. கல்வியைப் பொறுத்தவரை அதில் அரசியல் மற்றும் மதம் போன்ற கேள்விக்கே இடமில்லை. இது தெரியாமல் நடந்திருக்கும் ஒரு தவறாகத் தான் இருக்க முடியும். அப்படியாக இருந்தால் அது ஆராயப்பட்டு சரிசெய்யப்படும்" என தெரிவித்தார்.
பிஜேபியுடன் கூட்டணி வைத் துக் கொண்டதற்காக அண்ணா திமுக ஆட்சி அகன்று ஆர்.எஸ்.எஸ். ஆட்சியாக மாறி விடுமோ என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...