Tuesday, June 11, 2019

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. மட்டும் ரூ.28 ஆயிரம் கோடி செலவு

இவ்வளவு தொகை எங்கிருந்து வந்தது என்று பா.ஜ.க. தெரிவிக்குமா?

மக்களவைத் தேர்த லில் பா.ஜ.க. மட்டும் 28 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட் டுள்ளதாக தெரிய வந்துள்ளது. பா.ஜ.க.வுக்கு இவ்வளவு பெரிய பணம் எங்கிருந்து வந்தது என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியா முழுவதும் நடைபெற்ற தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு பா.ஜ.க. தனிப் பெரும்பான்மை பெற்று மத்தியில் ஆட்சி அமைத் துள்ளது.
மத்திய அரசின் பண மதிப்பிழப்பு உள்ளிட்ட கொள்கைகளில் அது வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது சிரமம் என்று கூறப்பட்ட நிலையில் இவ்வாறு 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
அதிக அளவில் பணம் செலவு செய்துதான் அந்த அளவிற்கு வெற்றியை பா.ஜ.க. பெற்றிருக்க முடியும் என்கிற எண்ணத்திற்கு ஏற்ப, தற்போது நடந்து முடிந்த மக்களவைத்தேர்தலில் அரசியல் கட்சிகள் செய்த செலவுகள் வெளியாகி உள்ளன. அதில் பா.ஜ.க.தான் அதிக செலவு செய்து தேர்தலை சந்தித்துள்ளது தெரியவந்துள்ளது.
பா.ஜ.க. தெரிவிக்குமா?
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் செய்த செலவு 60 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இதில் பா.ஜ.க. மட்டும் 28 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. இந்தத் தொகை, சுகாதாரத் துறைக்கென ஒதுக்கப் படும் நிதியில் 43 சதவிகிதமாகும். பாதுகாப்புத் துறைக்கான நிதியில் 10 சதவிகிதம். இவ்வளவு பெரிய தொகை எங்கிருந்து வந்தது என்று பா.ஜ.க. தெரிவிக்குமா என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி யுள்ளது.
டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி, பா.ஜ.க. செலவிட்ட தொகை நாட்டில் கல்விக்கு ஒதுக்கும் நிதியின் மூன்றில் ஒரு பங்கு என்று குறிப்பிட்டார். பா.ஜ.க.வின் தேர்தல் செலவுத் தொகையில் பெரும் பங்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் வந்ததா? என்றும் அபிஷேக் மனு சிங்வி கேள்வி எழுப்பினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...