Wednesday, April 10, 2019

இளைஞர்களே சிந்திப்பீர்!

2017 ஆம் ஆண்டில் வேலை வாய்ப்புத் தேடியோர் எண்ணிக்கை 140 இலட்சமாக இருந்தது; 2018 அக்டோபரில் அது 295 இலட்சமாக உயர்ந்துள்ளது. ஆண்டு ஒன்றுக்கு 2 கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்பு என்று வாய் நீளம் பேசிய  மோடியை வீட்டுக்கு அனுப்பி நாட்டுக்கு நல்லதே செய்வீர்!
--------------------------------------------------------------------------------------------------------------------------

மோடி வருகையை எதிர்த்து, ‘கோ பேக் மோடி!’ ஹேஷ்டேக் டிரண்டிங்கில் முதலிடம்..!


கோவை,ஏப்.10 கோவைக்கு நேற்று பிரதமர் மோடி பிரச்சாரத்திற்காக வருகை தந்த நிலையில், அவரது வருகையை எதிர்க்கும் கோ பேக் மோடி ஹாஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.
கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று (9.4.2019) மாலை 6 மணியளவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். தனி விமானம் மூலம் கோவை வந்த பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர்  வரவேற்று பொதுக்கூட்டத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதனிடையே பிரதமர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் கோவை, திருப்பூர், ஈரோடு ,நீலகிரி உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 3,000 மேற்பட்ட  காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பிரதமர் மோடியின் வருகையை எதிர்க்கும் கோ பேக் மோடி ஹாஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இணையதளங்களில் ஹேஷ்டேக்குகள் குவிந்து வருகின்றன.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...