Monday, April 15, 2019

மோடி ஆட்சியின் சாதனையோ சாதனை!

871 உயிர் காக்கும் மருந்துகளின் விலை உயர்வு! - அமலுக்கு வந்தது
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் வலி நிவாரண மாத்திரைகள், ஆன்டிபயாடிக் மருந்துகள் உள்ளிட்ட அத்தியா வசிய மருந்துகளின் விலை அதிகரித்துள்ளது.
மருந்து விலை கட்டுப் பாட்டுச் சட்டம் 2013-இன் படி, ஆண்டுக்கு ஒருமுறை அத்யாவ சிய மருந்துகளுக்கான அதிக பட்ச சில்லறை விலையை ((MRP)) மருந்து உற்பத்தியா ளர்கள் மாற்றி அமைத்துக் கொள்ளமுடியும். மருந்துகளின் மொத்த விற்பனை அடிப்படை யில், மருந்துகளின் விலையை அதிகரிக்கவோ, குறைக்கவோ முடியும். இதற்கு அரசின் அனுமதி தேவையில்லை.
அந்த வகையில், 2019-&2020ஆ-ம் நிதியாண்டுக்கான மருந்துகளின் விலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அத்தி யாவசிய மருந்துகளுக்கு 4 சதவிகிதமும், இதய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட் டவர்களுக்கு பொருத்தப்படும் ஸ்டென்ட்டுகளுக்கான விலை 4.26 சதவிகிதமும் அதிகரிக்கப் பட்டுள்ளது.  அதன்படி, இதய ரத்தக்குழாய்களில் அடைப்பு இருக்கும் பகுதியில் பொருத் தப்படும் மருந்து சேர்க்கப்பட்ட ஸ்டென்டின் விலை 30,080 ரூபாயும், மருந்து சேர்க்கப் படாத உலோக ஸ்டென்ட்டின் விலை 8,261 ரூபாயும் அதிகரிக் கப்பட்டுள்ளது.


இது தவிர, 871-க்கும் அதிக மான அத்தியாவசிய மருந்து களின் விலை உயர்த்தப்பட் டுள்ளது. மருந்துகள், ஸ்டென்ட் டுக்கான புதிய விலை, ஏப்ரல் 1ஆ-ம் தேதியன்று அமலுக்கு வந்தது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...