இந்தியாவில் பெண்களின் நிலைமையை தோலுரித்
துக் காட்டிய சர்வதேச அறிக்கை, பாகிஸ்தான், நேபாளம் வங்கதேசத்தைவிட,
இந்தியா மோசம் என்று கூறுகிறது.
2017 ஆம் ஆண்டுக்கான சர்வதேச பாலின
இடைவெளி அறிக்கையை உலக பொருளாதார கூட்டமைப்பு சமீபத்தில் வெளியிட்டது.
இதில், இந்தியா 21 இடங்கள் பின்தள்ளி 108 ஆவது இடத்துக்குத்
தள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அண்டை நாடுகளான பாகிஸ்தான்,
வங்கதேசத்தைவிட பின் தங்கிய நிலையில் இந்தியா உள்ளது என அந்த அறிக்கை
குறிப்பிடுகிறது. பொருளாதாரத்தில் பெண் களின் பங்கு மற்றும் பெண்
ஊழியர்களுக்கு வழங் கப்படும் குறைந்த ஊதியமே இதற்குக் காரணம் எனவும் அந்த
அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
சமூகம், பொருளாதாரம், அறிவுடைமை,
கலாச்சாரம் ஆகியவற்றில் தன் தேவைகளை நிறைவேற்றுவதில், ஆண்களுக்கும்,
பெண்களுக்கும் இடையே நிலவும் இடைவெளியே பாலின இடைவெளி எனப்படுகிறது.
இதற்காக, 144 நாடுகள் ஆராய்ச்சிக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. சுகாதாரம்,
கல்வி, பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றில் இந்த நாடுகளில் சமநிலை
எந்தளவுக்கு எட்டப்பட்டுள்ளது என்பது குறித்து, உலக பொருளாதார கூட்டமைப்பு
ஆய்வு மேற்கொண்டது.
இந்த ஆய்வில்தான் 2017 ஆம் ஆண்டில் 21
இடங்கள் பின்தங்கி 108 ஆவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இதன்மூலம்,
பாலின சமநிலையை இந்தியா 67 சதவீதம் அடைந்திருப்பதாக அந்த அமைப்பு
கூறுகிறது. ஆனால், இது அண்டை நாடு களான வங்க தேசத்தை (47 ஆவது இடம்), விட
குறை வான விகிதத்தையே பெற்றிருப்பதாக அந்த ஆய் வறிக்கை தெரிவிக்கிறது.
பெண்களின் பொருளாதார பங்களிப்பு மற்றும்
பெண்களுக்கான வாய்ப்புகள் ஆகியவற்றில், இந்தியா 139 ஆவது இடத்தில் உள்ளது.
‘‘இந்தியாவில், சராசரியாக 66 சதவீத பெண்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம்
தரப்படுவதில்லை. இதனை ஒப்பிடுகையில், ஆண் களுக்கு இந்த விகிதம், 12
சதவீதமாக உள்ளது’’ என அறிக்கை கூறுகிறது.
அதேபோல், சுகாதாரம் மற்றும்
உயிர்வாழ்வதற்கான காரணிகளிலும் இந்தியா மோசமான நிலைமையில் உள்ளது. இந்த
காரணிகளில், இந்தியா 141 ஆவது இடத்தில் உள்ளது. அதாவது, உலகளவில் 4 ஆவது
இடத்தைப் பிடித்துள்ளது.
அரசியல் அதிகாரத்துவம், ஆயுட்காலம், அடிப்
படைக் கல்வி ஆகியவற்றில் இந்தியாவின் பாலின இடைவெளி மிகவும் மோசமான
இடத்தைப் பிடித் துள்ளது. சோமாலியா, சியாராலியோன், கானா போன்ற ஆப்பிரிக்க
நாடுகள் தீவிரவாதம், பொருளாதாரச் சீரழிவு, இயற்கைப் பேரழிவு ஆகிய
காரணங்களால் மனிதர்கள் வாழத்தகுதியற்ற நாடுகளாக மாறிக்கொண்டு வருகின்றன,
அனைத்து வசதிகளும் இந்தியாவில் இருக்கும் போதே சோமாலியா, சியாராலியோன்,
கானா நாடுகளுக்கு அடுத்து இந்தியா வந்திருப்பது இந்தியாவில் அரசியல் சூழல்
மிகவும் மோசமாகியுள்ளதைக் காட்டு கிறது.
நாட்டுக்குத் தாய்நாடு என்று பெயர்
இருக்கும்; மொழிக்குத் தாய் மொழி என்று பெயர் இருக்கும்; பாரத மாதா,
புண்ணிய பூமி என்ற பெருமையெல்லாம் இருக்கும்.
ஆண் கடவுள்களில் மும்மூர்த்திகள் என்று இருப்பதுபோல, பெண் கடவுளச்சிகளிலும் முத்தேவிகள் உண்டு.
எல்லாமிருந்தும் பெண்கள் இந்து மதத் தத்துவத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கீழானவர்கள்.
இந்த இந்து மனப்பான்மையும் இந்தியாவில் பெண்களின் பொருளாதாரம் உள்படத் தாழ்நிலைக்கு அடிப்படையான காரணமாகும்.
தமிழ்நாட்டில் திராவிடர் இயக்கம்,
சுயமரியாதை இயக்கம் - தந்தை பெரியாரின் அயராப் பணிகளினால் பெண்கள்
மத்தியில் முற்போக்குச் சிந்தனைகள் குறிப்பிடத்தக்க வகையில் தலைநிமிர்ந்து
நிற்கும். ஆனால், மற்ற மற்ற மாநிலங்களில் பரிதாப நிலைதான்; பெண் கல்வி
மிகவும் பின்தங்கிய நிலைதான்.
இந்தியாவில் ஆண்கள் மனப்பான்மை எப்படி
இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு நாடாளு மன்றத்தில் பெண்களின்
எண்ணிக்கை 11 சதவிகித்தைத் தாண்டுவதில்லையே!
பெண்கள் தங்களுக்கான உரிமைகளை, தேவை களை
வலியுறுத்தக் கூடிய இடம் சட்டமன்றங்களும், நாடாளுமன்றமும்தானே? அந்த
இடத்திலேயே அவர் களுக்குரிய பிரதிநிதித்துவம் போதிய அளவில் இல்லா
திருந்தால், உலகளவில் பெண்கள் இந்தியாவில் பின் தங்கி இருப்பதில் ஆச்சரியம்
என்ன இருக்க முடியும்?
No comments:
Post a Comment