Friday, August 25, 2017

'நீட்': சமூக நீதியின் தலையில் விழுந்த பேரிடி! வாரி சுருட்டினர் பார்ப்பனர்கள்


சென்னை, ஆக. 24- 'நீட்' தேர்வு காரணமாக மாநிலக் கல்வி வழி பயின்ற ஒடுக்கப்பட்ட மக்களும், கிராமப்புற மாணவர்களும் வஞ் சிக்கப்பட்டுள்ளனர். சிபிஎஸ்இ முறையில் படித்தவர்கள், பார்ப்ப னர்கள் இடங்களை வாரி சுருட்டிக் கொண்டு விட்டனர்.
நீட் தேர்விற்கு முன்பு இருந்த நிலையும், நீதிமன்றம், மத்திய அரசு, அதிமுக அரசு மூன்றும் சேர்ந்து தமிழகத்திற்கு இழைத்த தீங்கின் விளைவும் பட்டியலிடப் பட்டுள்ளது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத் திற்கு விலக்கு அளிக்கப்படாது என்றும்,  மாணவர்களுக்கிடையே பாரபட்சம் காட்டக்கூடாது என் றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறி உள்ளனர்.
பல்வேறு தீர்ப்புகளில் சமூக நீதி காக்கப்படும் என்று கூறிய உச்சநீதி மன்றம் இந்த விஷயத்தில் தமிழகத்திற்கு நீதி வழங்கி உள் ளதா? என்பது கேள்விக்குறியே!
நாட்டின் அடிப்படை தேவை யான கல்வியில்கூட, நாடு முழுவ தும் ஒரே வகையான கல்வித் திட் டத்தை கொண்டுவர முடியாத மத் திய அரசும், நீதிமன்றமும் தமிழ கத்திற்கு எதிராகவே செயல்பட்டு உள்ளன.
காவிரி வழக்கில், உச்சநீதி மன் றத்தின் எத்தனையோ தீர்ப்புகளை மதிக்காத கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கிய மத்தியஅரசும், உச்சநீதி மன்றமும் இன்று தமிழகத்திற்கு எதிரான ஒரு தீர்ப்பை கொடுத்து, அதை அமல் படுத்த சொல்லியிருப்பதும், அதை சிரமேற் கொண்டு தமிழக அரசு நிறைவேற்றி வருவதும் தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோ கமாகும்.
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு காரணமாக யாருக்கு லாபம்...? மத்திய அரசின் பாடத்திட்டங்களின் மூலம் படித்த மாணவர்களுக்கு மட்டுமே!
இந்த கல்வித்திட்டத்தில் ஏழை எளிய மக்கள் படிக்க முடியுமா? அதற்கான கல்வி கட்டணம் என்ன? அதை ஏழை எளிய மக்கள் செலுத்த முடியுமா என எதையுமே கவனத்தில் கொள்ளப்படவில்லை.
இந்தத் தீர்ப்பு காரணமாக  தமிழகபாடத் திட்டம் மூலம் நீட் தேர்வெழுதிய 75000 தமிழக மாண வர்களுக்கு 300 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. ஆனால், சிபிஎஸ் இ-ன் மத்திய பாடத்திட்டத்தின் மூலம்  தேர்வெழுதிய 9000 மாண வர்களில் 4500 மாணவர்களுக்கு  மருத்துவ இடங்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக 80 சதவிகிதம் தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர்!
“நீட்"டின் கொள்ளை
கடந்த ஆண்டில்
சிபிஎஸ்இ மாணவர்கள்
பெற்ற இடம்: 30,
இவ்வாண்டு 1310
கடந்த கல்வியாண்டில் சிபி எஸ்இ உள்ளிட்ட பிற மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் 30 பேர் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
ஆனால் இந்தாண்டு தமிழகத் தில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப் படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதால், மொத்த முள்ள 3,534 இடங்களில் சுமார் 1,310 இடங்களை சிபிஎஸ்இ உள்ளிட்ட பிற மாநிலப் பாடத் திட்ட மாணவர்கள் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த கல்வியாண்டில் அவசரச் சட்டம் இயற்றப்பட்டு ஓராண் டுக்கு மட்டும் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக் கப்பட்டது.
அதன்படி, அரசு மருத்துவக் கல்லூரி இடங்கள் மற்றும் தனி யார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவை பிளஸ் 2 கட் - ஆஃப் மதிப் பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக் கப்பட்டு, கலந்தாய்வு நடத்தி நிரப்பப்பட்டன.
இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறு கையில், கடந்த ஆண்டு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படை யில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட் டதால் சுமார் 30 இடங்கள் மட்டும் சிபிஎஸ்இ உள்ளிட்ட பிறபாடத் திட்ட மாணவர்களால் பெற முடிந் தது. மீதி இடங்களை மாநிலப் பாடத்திட்ட மாணவர்களே பெற் றனர்.

இந்த ஆண்டு நீட் தேர்வின் காரணமாக மாநிலப் பாடத்திட்ட மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து, பிற பாடத்திட்ட மாண வர்களின் எண்ணிக்கை அதிகரித் துள்ளது என்று தெரிவித்தனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...