சென்னை, ஜூலை 14 செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்தில் அலுவலக முத்திரையில் இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே உள் ளது. தமிழ் புறக்கணிக்கப் பட்டுள்ளதாக சட்டப்பேர வையில் எதிர்க் கட்சி தலை வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
சட்டப் பேரவையில் நேற்று (13.7.2017) கேள்வி நேரம் முடிந்ததும், நேரம் இல்லா நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சென்னையில் உள்ள செம் மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத் தினுடைய அலுவலக முத்திரை, இந்தி மற்றும் ஆங்கில எழுத்துக்களில் மட்டுமே இருக்கிறதென்று இன்று (நேற்று) காலையில் எல்லா பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் செய்தியாக வந்திருக்கிறது. செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திலேயே தமிழுக்கு முக்கியத்துவம் இல்லை என்பது அதிர்ச்சியளிக்கக்கூடிய செய்தியாக அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழுக்கு இப் படியொரு நிலை வந்திருப்பது வேதனையான நிலை. செம் மொழி தமிழாய்வு மத்திய நிறு வனத்தின் தலைவர் நம்முடைய முதலமைச்சர்தான்.
எனவே, நான் அவரை கேட்டுக்கொள்ள விரும்புவது, அலுவலக முத்திரை இந்தி யில் இருப்பது முதலமைச்சருக்கு தெரியுமா, செம்மொழி ஆய்வு நிறுவனத்தில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு இருப்பதை முதலமைச்சர் அறிவாரா, தமிழ் முத்திரை இடம்பெறுவதற்கு முதல மைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பாரா?
இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்: செம்மொழி தமி ழாய்வு மத்திய நிறுவனம் முழுமையும் மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்டது. செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவ னத்தின் கல்விக்குழு, நிதிக்குழு, ஆளு கைக் குழுவில் தமிழ்நாடு அரசின் சார்பில் பங்கேற்கும் உலக தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்குநர் ஆகியோர் மூலம் செம்மொழி மத்திய நிறுவனத்தின் நிர்வாக அலுவல்கள் தமிழகத்தை பொறுத்தவரையில் தமிழில் மட்டுமே அமைதல் வேண்டும் என்று அவ்வப்போது வலியுறுத்தப்பட்டு வரு கிறது. இதுகுறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டுச்சென்று தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங் கோட்டையன்: செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனத்தின் அலுவலக முத்திரையில் இந்தி மற்றும் ஆங்கில மொழி மட்டும் இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தரமணியில் உள்ள செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவன அதிகாரியிடம் நான் தொலைபேசியில் பேசினேன். தமிழில் உள்ள அலுவலக முத்திரையை அவர் எனக்கு அனுப்பி வைப்பதாக கூறியுள்ளார். இவ் வாறு விவாதம் நடைபெற்றது.
No comments:
Post a Comment