Monday, June 12, 2017

"காந்தி ஒரு தந்திரக்கார வியாபாரி!" பிஜேபி தலைவர் அமித்ஷா திமிர்ப் பேச்சு



"காந்தி ஒரு தந்திரக்கார வியாபாரி!"
பிஜேபி தலைவர் அமித்ஷா திமிர்ப் பேச்சு
ராய்ப்பூர் ஜூன் 11 சத்தீஸ்கர் மாநிலத்தில் மூன்று நாள் சுற்றுப் பயணம் செய்த அமித்ஷா வெள்ளி யன்று பேசும் போது காங்கிரஸ்
கட்சி தொடர்ந்தால் நாட்டை சீர்கெடச் செய்துவிடும் என்று முன்பே அறிந்த தந்திர வியாபாரி(சதுர் பனியா) காந்தி அதைக் கலைக்கச் சொன்னார். ஆனால் அவர் சொன் னதைத் தான் இன்று காங்கிரசார் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறி காந்தியாரை கொச்சைப்படுத் தினார்.
2019-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் 400-இடங்களைப் பிடிக்க இப்போதி ருந்தே பாஜக திட்டமிட்டு செயலாற்றி வருகிறது, இந்த திட்டத்தை நிறை வேற்றும் வகையில் தொடர்ந்து 95 நாட்கள் நாட்டின் அனைத்து மாநி லங்களுக்கும் சென்று கட்சியை வலு வூட்டும் வகையில் பாஜக தொண்டர் களை சந்தித்து வருகிறார்.
இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் "காந்தியாரை தரக் குறைவாக பேசிய அமித்ஷா" என்று தலைப்பிட்டு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
தந்திரக்கார வியாபாரி
(சதுர் பனியா)
காங்கிரஸ் கட்சிக்கென்று எந்த ஒரு கொள்கை, கோட்பாடு, மக்கள் நலச் சிந்தனை என்று ஒன்றுமே இல்லை, அந்தக் கட்சி  ஓட்டுநர் இல்லாத வாகனம் போன்றது, அந்த வாகனம் சுதந்திரத்திற்காக பயன் பட்டது. காங்கிரஸ் கட்சி சுதந்திரம் பெறுவதற்காக மட்டுமே உருவாக்கப் பட்டது, அந்த சுதந்திரம் கிடைத்து விட்டது, இப்போது அந்த வாகனம், யார் கையில் சென்றாலும் சரியாக செயல்படமுடியாது, காரணம் காங் கிரஸ் எந்த ஒரு குறிப்பிட்ட நோக்கத் திற்காகவும் உருவாக்கப்பட வில்லை. இதனால்தான் காந்தி காங்கிரசை கலைக்கச் சொன்னார்.
அவர் தந்திரக்காரர் மற்றும் எதிர்காலத்தை கணித்துக்கொண்டார், இந்த காங்கிரஸ் காரர்களிடம் நாடு கிடைத்தால் நாட்டை சின்னா பின்னப்படுத்திவிடுவார்கள், ஆகவே காங்கிரசை கலைத்துவிடவேண்டும் என்று கூறினார்.
ஆனால் காங்கிரசார் அவ்வாறு செய்யவில்லை. இன்று நாட்டை மோசமான நிலைக்கு கொண்டுசென்று விட்டார்கள். அன்று காந்தி கூறி யதைப் போன்று காங்கிரஸ் கட்சியை கலைத்திருந்தால் இன்று நாடு நல்ல நிலைமைக்கு வந்திருக்கும்.
பாஜக ஒரு கொள்கையை வரை யறை செய்துஅதன் வழி நடக்கும் கட்சி, இதற்கென்று ஒரு சித்தாந்தம் உண்டு, அந்த சித்தாந்தத்தின் வழியாக சிறிதும் வழிபிறழாது நடந்து வருகி றோம், எங்களின் பார்வையில் ஒருவர் தேசவிரோத முழக்கம் எழுப்பினால் அவர் தேசவிரோதிதான், அவர் எந்தக் கொள்கையை கொண்டவராக இருந் தாலும் சரி, தேசவிரோதிதான், என்று கூறியதாக இந்தியன் எக்ஸிபிரஸ் ஆங்கில நாளிதழில் செய்தி வெளியாகி யுள்ளது.
காந்தியாரைக் கொச்சைப்படுத்திய பாஜகவினர்
அமித்ஷா மட்டுமல்ல அனைத்து பாஜகவின் பெரிய தலைவர்களும் காந்தியாரைக் கொச்சைப்படுத்திய வர்கள் தான். அரியானா மாநில உள் துறை அமைச்சரும், கல்வி அமைச்சரு மான அனில்விஜ், காந்தி காதி துணிக்கு போஸ் கொடுக்கும் ஒரு வயதான மாடலிங் என்று கூறியிருந்தார்.
சாமியார் சாக்ஷி
காஷ்மீர் தேர்தலின் போது பிரச்சினைக்குரிய சாமியாரும் மத்திய இணை அமைச்சருமான சாக்ஷி, பருக் அப்துல்லாவின் அப்பா காந்தி தான்; ஏனென்றால் காந்தி போன்ற சிந்தனை என்னுடையது என்று ஒருவர் கூறுவார் என்றால் அவரது மகன் என்று தானே கூறமுடியும் என்று கீழ்த்தரமாக பேசினார்.
கைலாஷ் சிசோடியா
மற்றுமொரு பாஜக தலைவர் கைலாஷ் சிசோடியா காந்தியார் குறித்து பேசும் போது, வயதான, நடக்கவே பெண்களின் துணைதேடும் ஒருவர் எப்படி சுதந்திரம் வாங்கிக் கொடுக்க முடியும். ஆகவே காந்தி, சுதந்திரம் வாங்கித்தந்தார் என்பதெல் லாம் காங்கிரசார் செய்துவரும் போலிப் பிரச்சாரம் என்று கூறினார்.
நிரஞ்சனா ஜோஷி
மற்றுமொரு இணையமைச்சரான பெண் சாமியார் நிரஞ்சனா ஜோஷி  காந்தியாரை பிரிட்டீஷ் காலனி அரசின் முகவர் என்று கூறியிருந்தார்.
அதே போல் மகராஷ்டிர மாநில பாஜக தலைவர்கள், இந்தியா எங்கும் காந்திக்குச் சிலை இருக்கிறது, அப்படி அவர் என்ன செய்தார் என்று தெரியவில்லை, ஆனால் மகாராட்டிர  மாநில மக்களுக்கு நன்மையைச் செய்த பால்தாக்கரே சிலையை இந்தியா முழுவதும் வைக்கவேண்டும் அப்போதுதான் காந்தியின் செயலுக் கும் பால்தாக்கரேவின் செயலுக்கும் இடையே மறைந்துள்ள உண்மையை மக்கள் புரிந்துகொள்வார்கள் என்று கூறினார்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...