Friday, June 9, 2017

பிளாஸ்டிக் அரிசி விற்பனை: பொதுமக்கள் புகார்

அய்தராபாத், ஜூன் 8 அய்தராபாத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.இதனையடுத்து அந்த அரிசி ஆய்வுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் அய்தராபாத் தில் பல பகுதிகளில் உள்ள சந்தையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப் படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.
அய்தராபாத்தில் உள்ள நந்தவனம் பகுதியைச் சேர்ந்த அசோக் என்பவர் நேற்றுமுன்தினம்கடையில்அரிசி வாங்கி சமைத்தார். அந்த சாதத்தை சாப் பிட்டபோது, வாயில் ஒட்டிக்கொண்ட தாகவும், வித்தியாசமான சுவையில் இருந்ததாகவும் தெரிகிறது. எனவே, இது பிளாஸ்டிக் அரிசியாக இருக்கலாம் என்று கூறி அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்
இதேபோல் தனியார் விடுதி ஒன்றில் வழங்கப்பட்ட உணவில் பிளாஸ்டிக் அரிசி பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அய்தராபாத்தில் பல பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக புகார் தெரிவித்ததால், அதனை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.
ஆய்வு முடிவுகள் இன்று கிடைக்கும். அதன்பிறகே அவை பிளாஸ்டிக் அரி சியா? என்பது தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே தெலங்கானா மாநி லத்தில் உள்ள ஒரு பகுதியில் பிளாஸ்டிக் அரிசியில் பிரியாணி தயார் செய்ததாகக் கூறி, கடைக்காரரை பொதுமக்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
காயம் அடைந்த கடைக்காரரை காவல்துறையினர் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...