Thursday, May 25, 2017

தமிழர் தலைவர் எழுப்பிய கேள்விக்குப் பதில் என்ன?

தமிழர் தலைவர் எழுப்பிய கேள்விக்குப் பதில் என்ன?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font
‘நீட்’ தேர்வில் திட்டமிட்ட ஒரு சூழ்ச்சி நடந்திருக்கிறது. 12 வருடம் படித்த பிளஸ் டூ மதிப்பெண்ணுக்கு மரியாதை இல்லை என்று கூறி குப்பையில் வீசி எறியப்பட்டு விட்டது.
‘நீட்’ என்னும் நுழைவுத் தேர்வு மூலம் இந்தியா முழுமையும் உள்ள இருபால் மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர் என்று அறிவிக்கப்பட்டது. அப்படி என்றால் இந்தியா முழுமையும் உள்ள அனைத்து இருபால் மாணவர்களுக்கும் ஒரே மாதிரி யான அளவுகோலின் (Uniformity) அடிப்படையில்தானே கேள்வித்தாள் அமையவேண்டும்? ஒவ்வொரு மாநிலத்துக்கும் வெவ்வேறு கேள்விகள் ஏன்? ஒரே மாநிலத்திற்குள்ளேயே தாய் மொழியில் எழுதுவோருக்குக் கொடுக்கப்படும் கேள்விகள் வேறு - ஆங்கிலத்தில் எழுதுவோருக்கு வேறு கேள்விகள் அடங்கிய வினாத்தாள் என்றால் - இது கடைந்தெடுத்த மோசடியல்லவா!
குஜராத் மாநிலத்தில் ‘நீட்’ தேர்வு மிகவும் எளிமையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
அது என்ன குஜராத்துக்கு மட்டும் தனிச் சலுகை? ஏனிந்த பாரபட்சம்? இதன் பின்னணியில் இருந்த சதி என்ன?
இந்த ரிக்ஷா தொழிலாளியின் மகன் கண்ணீருக்கு என்ன பதில்?
தருமபுரி மாவட்டம் ஏலகிரி என்னும் கிராமத்தைச் சேர்ந்த ரிக்ஷா ஓட்டியின் மகன் சிவராமலிங்கம் பிளஸ் டூ தேர்வில் 1144 மதிப்பெண் பெற்று இருக்கிறான். கண்ணீரும், கம்பலையுமாக தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி கொடுத்தான்.
பிளஸ் டூ தேர்வில் 1144 மதிப்பெண் பெற் றாலும் ‘நீட்’ தேர்வை என்னால் சரியாக எழு திட முடியவில்லை -சி.பி. எஸ்.இ. அடிப்படை யில் கேள்வித்தாள் இருந்த தால் எனக்கு மிகவும் கடி னமாக இருந்தது. என் மருத்துவக் கல்வி கனவு சிதைந்துவிட்டது என்று கண்ணீர் விட்டானே - அந்தக் கண்ணீருக்கு விடை எங்கே? விடை எங்கே?
சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின்படிதான் ‘நீட்’ தேர்வு என்ப தால் இனி மாணவர்கள் அந்தத் திட்டத்தின்கீழ் படிக்கத்தான் ஓடுவார்கள். சி.பி.எஸ்.இ. என்றால், இந்தியும், சமஸ்கிருதமும் படித்தாகவேண்டும்.
இதுதான் பி.ஜே.பி.யின் ஆரிய சூழ்ச்சி  என்பதைப் புரிந்துகொள்வீர்!
-திண்டுக்கல் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி, 21.5.2017
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...