Thursday, May 25, 2017

மின்னணுப் புரட்சி தரும் ‘மிரட்சி' இதோ! (1)

இது மின்னணுயுகம். மின்னணுவியலின் வியக்கத்தக்க வளர்ச்சி, அரிய பலன்களை, நோய் தீர்க்கும் விரைவு முறைகளையும், அறுவை சிகிச்சைகளில்கூட துல்லியமான இடத்தில் மட்டுமே செய்து, இரத்த இழப்பு மிகக் குறைவாக ஏற்படுவ தோடு, சிகிச்சை எளிதாகி, குணமடை வதும் குறைந்த காலத்தில் நட பெறுகிறது!
‘டிஜிட்டல் புரட்சி’ மிகவும் அற்பு தமானது! ரோபோக்கள் மூலம் அறுவை சிகிச்சைகள் நடைமுறைக்கு வந்துவிட்டன!
‘சிப்ஸ்’ (Chips) என்ற ஒரு குறிப்பிட்ட சிறு கருவியை (Gadget) டையின் பின்பக்கத்திலோ, காலில் உள்ள பூட்ஸ் பாகத்திலோ இணைத்து விட்டால், நமது குடும்ப மருத்து வருக்கோ அல்லது நமக்குப் பழக்க மான மருத்துவமனைக்கோ அதுவே - ஏற்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு காரணமாக, இரத்த அழுத்தம் குறைந் தாலோ அல்லது வேறு ஏதாவது உடலில் பெரிய கவலைப்படும் மாற்றங்கள் ஏற்பட்டாலோ அது மருத்து வருக்கு தகவல் கொடுத்து, நோய் தடுப்புக்கு ஆயத்தமான ஏற்பாடுகள் செய்யச் சொல்லி அறிவுறுத்தும் வாய்ப்புகள் பெருகி வருகின்றன!
‘செல்போன்’ என்ற கைப்பேசி தான் எத்தகைய அறிவுப்புரட்சியை, பல்வேறு கருவிகளை கையில் கொண்டு போக வேண்டியதே இல்லை. ஒரு கைப்பேசியில் பல வித வசதியான கருவிகள் இருப்பதாக அமைக்கப் பட்டு, நாளும் அது ‘மனோ வேகத் தோடு’ போட்டியிடும் அளவுக்கு, பல கருவிகளின் தொழிற்சாலைகளையே மூடிவிடும் நிலைமை உருவாகி விட்டது!
இவை எல்லாம் பெருமைப்படத் தக்க அறிவியல் - மின்னணுவியல் யுகத்தின் அரிய சாதனைகள்தான்.
என்றாலும், நல்ல மருந்துகளை எடுத்துக்கொண்ட பிறகு சில பக்க விளைவுகள் (Side Effects) ஏற்படு கின்றனவே,  அதுபோல அவற்றை  நாம் எதிர்கொண்டு ஏற்றுக்கொள்ளு வதைத் தவிர வேறு வழியே இல்லை!
இந்த கைப்பேசியை இளம் பிஞ்சு களுக்கும், மாணவ இளைய தலை முறைக்கும் தந்துவிடுவதால் சதா சர்வகாலமும் உடனேயே தங்களது நண்பர்களுக்குSMS என்ற குறுஞ்செய்தி - படங்கள் எடுப்பது  - உட னுக்குடன் அனுப்புவது -  காலத்தைத் தவறாகச் செலவழித்து வீணடித்தல் போன்றவை நடந்துகொண்டுள்ளன. பல நேரங்களில் குழந்தைகள் எதைப் பார்க்கிறார்கள், எப்படி பாடங்களைப் பற்றியோ அல்லது பயனுறு தகவல் களையோ பரிமாறிக் கற்றுக் கொள் வதைவிட பெருந்தீமை - விரும்பத் தகாத விளைவு - வேறு என்ன இருக்க முடியும்?
‘‘தொடர்ந்து கைப்பேசி - மொபைல் போன் சாதனங்களைப் பயன்படுத் தினால்,  கையில் உள்ள நரம்பு, தசைகள், தசை நார்கள் பாதிக்கப்பட்டு, ‘Carpal Tunnel Syndrome’    என்ற நோய் - பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு’’ என்று வல்லுநர்கள் எச்சரிக் கிறார்கள்!
இந்த சாதனங்களை உற்று நோக்கிக் கொண்டே அதிக நேரம் இருந்தால், வலிப்பு நோய் வர வாய்ப்பு அதிக மாகும் அபாயம் உள்ளது என்றும் கூறுகிறார்கள்.
முன்பு வாய்ப்பாடுமூலம் மூளைக்கு - நினைவாற்றல் பயிற்சி தருவது நடைபெற்றது. ஆனால், இப்போது எல்லாம் ‘‘கால்குலேட்டர்’’ மூலம்... நல்ல விரைவு விடை கிடைக்கிறது; ஆனால், அதற்கு நாம் கொடுத்துள்ள விலையோ மிகமிக அதிகம். நினைவாற்றல் வெகுவேகமாக விடை பெற்றுக் கொள்ளுகிறதே!
நம் வீட்டுத் தொலைப்பேசி எண் நமக்கு தெரியாமல் மறந்துவிடுகிறது; காரணம், கைப்பேசியில் ஒரு பொத்தானை அழுத்தினால் உடனே தொடர்பு என்பதால் இந்நிலை!
அதிராம்பட்டணம் - பட்டுக்கோட்டையில் ஒரு இஸ்லாமிய நண்பர் - வயதானவர் எல்லா தலை வர்கள் பிறந்த நாள், முக்கிய நிகழ்வுகள் எல்லாம் எந்தெந்த தேதி என்று கேட்டால், விரல் முனையில் வைத்து, நாக்கு முனையில் வெளிப்படுத்துபவர்; விடை கூறுவார்; இவரை ‘‘டைரி’’ என்றே அழைப்பார்கள்!
இப்படிப்பட்ட அபார நினை வாற்றல் உள்ள நமது பல நண்பர்கள் பிறந்த நாள்; பல தொலைப்பேசி எண்களை உடனடியாக நினைவில் கொண்டு ‘டக்‘கென்று கூறுவர்!
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. ‘எதையும் தொடர்ந்து பயன் படுத்தாவிட்டால் அதை நீங்கள் இழந்தவராகிறீர்கள்’ If you don’t use it; you will lose it)  நம் மூளையே அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது!
உடல் சோம்பலினும் கொடுமை - மூளைக்கு வேலை கொடுக்காத - பயிற்சிகளை புறந்தள்ளும் வாய்ப்புக் கேடான மூளைச்சோம்பல் - தவிர்க்கப்படல் வேண்டும்.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...