Tuesday, August 2, 2016

தமிழக முதலமைச்சருக்கு முக்கிய வேண்டுகோள்!

அமெரிக்க ஹார்வேட் பல்கலைக் கழகத்தில் தமிழுக்கு இருக்கை!

தமிழக அரசு சார்பில்  உதவிடவேண்டும்!
கி.வீரமணி, veeramani

அமெரிக்காவில் உள்ள ஹார்வேட் பல்கலைக் கழகத்தில் தமிழுக்கு தனி இருக்கை அமைப்ப தற்கான வாய்ப்பினை மருத்துவர்கள் திருஞான சம்பந்தம், ஜானகிராமன் ஆகியோர் ஏற்படுத்தியுள் ளனர். அதனை தமிழக முதலமைச்சர் அவர்கள் அவ்விருக்கை அமைவதற்கான தொகையை தமிழக அரசின் சார்பில் அறிவித்து வரலாறு படைத் திட வேண்டும் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு:-
அமெரிக்காவில் உள்ள பிரபல ஹார்வேட் பல் கலைக் கழகத்தில் (Harvard University  செம்மொழி யான நம் மொழி தமிழுக்கு, தனி இருக்கை (பிற மொழிகளுக்கு அங்கே அமைப்பதற்கு அந்தந்த மொழியாளர்கள் எடுத்த அரும்பெரும் முயற்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், நம் செம்மொழி தமிழுக்கும் தனி இருக்கை உலக அளவில் ஆய்வு) ஏற்படுத்த அருமையான தருணம் தமிழ்நாட்டு அரசுக்கும், அனைத்துக் கட்சிகளுக்கும் இப்போது ஏற்பட்டுள்ளது!
அமெரிக்காவாழ் இரு டாக்டர்களின் முயற்சி!
அமெரிக்காவாழ் பிரபல மருத்துவர்கள் திருவாளர் கள் டாக்டர் திருஞான சம்பந்தம் அவர்களும், டாக்டர் ஜானகிராமன் அவர்களும் இதற்கென பெருமுயற்சி எடுத்து, தங்களது வருவாயில் கணிசமான பெருந் தொகை ஒன்றையும் கொடுத்து அப்பல்கலைக் கழகத்தின் நிர்வாகத்தினரை, இத்திட்டத்தை ஏற் படுத்திட ஒப்புக் கொள்ளுமாறு செய்தனர்.
அதற்குரிய நிதியம் ஏற்பாடு செய்யப்பட்டால்தான் அவர்கள் எடுத்த முயற்சி வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்படும்.
முதலமைச்சருக்கு
வேண்டுகோள்!
நமது தமிழ்நாட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதனை ஏற்று சட்டமன்றத்திலேயே அறிவிக்க இது சரியான நேரம் ஆகும்.
இதை அன்பான வேண்டுகோளாக தமிழ் கூறும் நல்லுலகம் சார்பில் வைக்கிறோம்.
தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய சட்டமன்றத்திற்குள் உள்ள எதிர்க்கட்சிகளும், குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் மானமிகு திரு.மு.க.ஸ்டாலின்  அவர்களும், மற்ற தலைவர்களும் வரவேற்பது நிச்சயம்!
ஆளும் கட்சி, எதிர்கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் மொழிப் போர் தியாகிகள் நாளினை ஆண்டுதோறும் நடத்தும் கட்சிகளாகும்.
சட்டமன்றத்தின் உள்ளே உள்ள கட்சிகள் மட்டு மல்ல, வெளியில் உள்ள மற்ற கட்சிகளும், சமூக அமைப்புகளும், அனைத்துத் தமிழ் ஆர்வலர்களும் நிச்சயம் இதனை வரவேற்பார்கள் என்பது உறுதி.
அரசு சார்பில் நிதி உதவி
எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதுபற்றி இணக்கமாகச் சிந்தித்து, அவ்விருக்கை அமைவதற்குரிய தொகையை சட்டமன்றத்திலேயே அறிவிக்கலாம். (தமிழ்நாட்டின் வரவு - செலவு திட்டத்தில் அது ஒரு பகுதி - தமிழ் மொழி வளர்ச்சிக் கென செலவிடப்படும் தொகையாகவும் கருதலாம்). ஹார்வேட் பல்கலைக் கழகத்திற்கு (Harvard University) அனுப்பி, ஒரு வரலாறு படைத்திட வேண்டும் என்று தமிழ்கூறும் நல்லுலகத்தின் சார்பில் இவ்வேண்டுகோளை விடுக்கின்றோம்!

உடனடியாக சிந்தித்து செயலாற்றிட முன்வருக!

கி.வீரமணி 
தலைவர்,   திராவிடர் கழகம்.


சென்னை
1.8.2016


.
 

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...