Total Pageviews

Monday, March 14, 2016

ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கும் அய்.எஸ் தீவிரவாத அமைப்பிற்கும் வேறுபாடு இல்லை குலாம்நபி ஆசாத் எம்.பி. தாக்கு!


டில்லி மார்ச் 13 ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கும் மத்திய கிழக்கு நாடு களை அச்சுறுத்தி வரும் அய்.எஸ் என்ற அமைப் பிற்குமிடையே அதிக வேறுபாடு இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான குலாம்நபி ஆசாத் கூறினார்.
டில்லியில் நடந்த ஜாமியாத் உலமா ஏ ஹிந்த் என்ற இஸ்லாமிய கலாச்சாரக் கல்வி அமைப்பு ஏற்பாடு செய் திருந்த கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொண்ட குலாம்நபி ஆசாத் பேசிய தாவது: “தீவிரவாத செயல்களுக்கும் மதத் திற்கும் தொடர்பில்லை, நாம் அய்.எஸ் அமைப் பின் தீவிரவாதிச் செயல் களையும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சமூகச் சீரழிவை ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும் கடுமையாக எதிர்க்கவேண் டும். அய்.எஸ் தீவிரவாத அமைப்பு ஆயுதம் மூலம் மக்களை மிரட்டி வருகின்றனர். ஆனால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அப்படி அல்ல பெரும் பான்மை மக்களை கொள்கை ரீதியாக உள்ளத்தளவில் மாற்றம் ஏற்படுத்தி மதத்தின் பெயரால் பிரிக்கிறது, பிறகு வேற்று மதத்தவர் மீதான வன்மத்தை மக்களிடையே திணிக்கிறது, அதன் பிறகு மக்கள் வேற்று மதத்தினரை பகைவராக பார்க்கவைக்கும் அளவிற்கு விஷமப் பிரச்சாரம் செய்து சமூகத்தில் ஒற்றுமையை சிதைக்கிறது,  ஆகவே  ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மற்றும் அய்.எஸ் அமைப்பிற்கு எந்த ஒரு வேறுபாடுமில்லை.
மதவாதத்தை வீழ்த்துவோம்!
மதவாதத்தைத் தூண்டுவோர் ஹிந்துக் களாக இருந்தாலும், சரி முசுலிம்களாக இருந் தாலும் சரி, அவர்களின் மதவாதத்தை வீழ்த்த மதச் சார்பற்ற சக்திகள் ஒருங்கிணைந்து போராட முன்வர வேண்டும் இந் தியா ஒரு மதத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல. அனைத்து மதத்தினருக்கும் உரியது என்றார் குலாம் நபி ஆசாத்.
ஆர்.எஸ்.எஸ். கண்டனம்
குலாம்நபி ஆசாத்தின் இந்த உரைக்கு  ஆர்.எஸ்.எஸ். கண்டனம் தெரிவித் துள்ளது. அவர் உரைக்கு எதிராக சட்டப்படியானநடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆர்.எஸ்.எஸ். செய்தித் தொடர்பாளர் சிறீகாந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
குலாம் நபி ஆசாத் கூறியதில் என்ன தவறு?
குலாம்நபி ஆசாத் கூறியதில் என்ன தவறு இருக்கிறது? ஆர்.எஸ்.எஸின் மதவெறி நடவடிக்கைகளுக்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளை சொல்லிக் கொண்டே போகலாம். இதோ ஒரு எடுத்துக்காட்டு.
குஜராத் மாநிலம் பாவ் நகரில் மேகானி சர்க்கிள் பகுதியில் உள்ள வீட்டை முஸ்லிம் வியாபாரி ஒருவர் வாங்கியுள்ளார். இந்துக்கள் அதிகம் வாழும் அந்த பகுதியில் முஸ்லிம் ஒருவர் எப்படி வீடு வாங்கலாம் என்று விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தளம் அமைப்பினர் போராட்டம் நடத்தி னார்கள்.
போராட்டத்தின் போது விசுவ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா பேசுகையில், இந்த வீட்டை வாங்கி குடியேறியுள்ள முஸ்லிம், அடுத்த 48 மணி நேரத் துக்குள் வீட்டை காலி செய்ய வேண்டும். இல்லை யெனில் வீட்டை முற்றுகையிடுவோம் என்றார்.
அதன் பிறகு இரவோடு இரவாக அந்த வீட்டின் சுவரில் காவி வண்ணம் அடிக்கப்பட்டது, மேலும் அந்தப் பகுதி முழுவதும் காவிக்கொடிகள் ஏற்றப்பட்டன. அந்த வீட்டின் முன்புறமிருந்த மரத்தில் பெரிய காவிக்கொடி ஏற்றப்பட்டு, அந்த தெருவில் இது இந்துக்களுக்கு சொந்தமான இடம் என்று எழுதப்பட்ட பலகை வைக்கப்பட்டது.  இவ்வளவு நடந்தும் காவல்துறையினர் யாரும் அந்தப்பகுதிக்குச் செல்லவில்லை, அந்த முஸ்லீம் வீட்டிற்குப் பாதுகாப்பு ஏற்பாடும் செய்யவில்லை.
இறுதியில் சுமார் 3 கோடி மதிப்புள்ள அந்த வீட்டை வெறும் 4 லட்சத்திற்கு அந்தப் பகுதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ் நிலத்தரகருக்கு விற்றுவிட்டுச் சென்றார். ஆனால் பத்திரத்தில் 49 லட்சத்திற்கு வீடு விற்கப்பட்டதாக எழுதப்பட்டுள்ளது. அந்த நில விவகாரம் தொடர்பாக வீட்டு உரிமையாளரான முஸ்லீமும் அவரது குடும்பத்தினரும் இதுவரை எந்த ஊடகத்திற்கும் பேட்டியளிக்கவில்லை, மேலும் அவர்கள் எங்கு சென்றார்கள் என்ற விபரமும் உள்ளூர் ஊடகம் வெளியிடவில்லை, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கட்டளையில் இயங்கும் மத்திய மாநில அரசுகள் ஊடகங்களை எந்த அளவு மிரட்டி வைத்துள்ளன என்பது இந்த விவகாரத்தின் மூலம் தெரியவரும்.
கடந்த ஞாயிறு அன்று சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூரில்  கிறிஸ்தவ தேவாலயத்தை அடித்து நொறுக்கியுள்ளனர்.
அவர்கள் அந்த இடத்தில் இருந்து எழுப்பிய முழக்கத்தில் ‘ஜெய் சிறீ ராம், ஜெய் சிறீ ராம் இந்து நாடு இங்கே, அந்நியனுக்கு வேலை இல்லை, இருந்தால் இந்துவாக இரு இல்லை யென்றால் ஓடு அல்லது செத்துத்தொலை’ என்று முழக்கமிட்டனர்.; இதில் கொடுமை என்னவென்றால் அந்த தேவாலயம் நடத்தி வரும் குழந்தை விளையாட்டுப் பள்ளியில் உள்ள பொம்மைகளை தீயிட்டு கொளுத்தியுள்ளனர். மேலும் தேவாலயத்திற்குள் நுழைந்தவர்கள் சிலைகள் மற்றும் பீடங்களை உடைத்தனர். ஞாயிற்றுக்கிழமையாதலால் பாடல்கள் இசைத்துக்கொண்டிருந்தவர்களின் மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்த இசைக்கருவிகளையும் சிதைத்தனர். அய்.எஸ். நடவடிக்கைக்கும், ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கைக்கும் அடிப்படையில் என்ன வேறுபாடு இருக்கிறதாம்?


.
 

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

0 comments: