Friday, March 11, 2016

மாநிலங்களவையில் பா.ஜ.க.வுக்கு அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த மர்மமும், பின்னணியும் என்ன?

முதல்அமைச்சரின் வேண்டுகோள்களைப் புறக்கணித்துவரும்
மத்திய பிஜேபி ஆட்சிக்கு அஇஅதிமுக ஆதரவு ஏன்?
மக்களுக்கு விளக்க வேண்டும் முதல் அமைச்சர்

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
மூன்றாவது மொழி என்றபெயரால் பிஜேபி அரசில் சமஸ்கிருதம் நுழைகிறது
தமிழக அரசின் வேண்டுகோளை தொடர்ந்து புறக்கணித்து வரும் மத்திய பிஜேபி ஆட்சிக்கு குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஆதரவு தெரி வித்தது ஏன் என்பதை தமிழக முதல் அமைச்சர் நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
மத்திய அரசுக்கு மாநிலங்கள் அவையில் ஆதரவு கொடுத்து, குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் விவாத முடிவில் எதிர்க்கட்சியினர் கொடுத்த திருத்தத்தின்பேரில் நடைபெற்ற வாக்கெடுப்பு ஆளுங் கட்சி - கூட்டணிக்கு மிகப் பெரிய தோல்வியை ஏற்படுத்தியுள்ளது.
அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் ஆளும் பிஜேபிக்கு ஆதரவு தெரிவித்ததின் பின்னணி என்ன?
மாநிலங்களவையில் உள்ள அ.இ.அ.தி.மு.க.வின் 12 உறுப்பினரும் கூட ஆளும் பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்தவர்களைப் போலவே வாக்களித்தும்கூட
61 வாக்குகளைதான் பெற்றுள்ளது.
எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து எதிர்த்து வாக்களித்ததில் 94 வாக்குகள் பெற்றுள்ளன.
உள்ளாட்சித் தேர்தல்களில் ராஜஸ்தானிலும், ஹரியானாவிலும் வாக்காளர்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி நிர்ணயம் செய்திருப்பது விரும்பத்தகாதது என்று எதிர்க்கட்சியினர் வற்புறுத்தியுள்ள நிலையில் இதுபற்றி குடியரசுத் தலைவர் உரையில் ஏதும் குறிப்பிடப்படவில்லையே என்று எதிர்க்கட்சியினர் திருத்தம் தந்தனர். எதிர்க் கட்சியினரின் திருத்தம் நிறை வேறியுள்ளது 94 வாக்கு வெற்றி மூலம்!
எந்த அடிப்படையில் ஆதரவு? விளக்க வேண்டும்
எந்த அடிப்படையில் அ.இ.அ.தி.மு.க.வினர் மோடி தலைமையில் உள்ள அரசுக்கு ஆதரவாக இப்படி நேற்று வாக்களித்தார்கள் என்பதை அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரான முதல் அமைச்சர் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்கக் கடமைப்பட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் கடிதங்களுக்கு
என்ன மரியாதை?
தமிழ்நாடு முதலமைச்சர் கடிதங்களுக்குமேல் கடிதங்கள் எழுதிக் கொண்டுள்ள பல்வேறு முக்கிய பிரச் சினைகளை ஆளும் மத்திய அரசு கூட்டணி, சுமூகமாகத் தீர்த்திருக்கிறதா?
1.     தமிழக மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல்,
2.     ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 24 ஆண்டுகளாக சிறையில் மனிதாபிமானமின்றி  வதியும் ஏழு பேர் விடுதலைக்கு மத்திய அரசின் பதில்,
3.     பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற முதல்வரின் கோரிக்கை.
4.     காவிரி நதி நீர் மேலாண்மை  வாரியம் அமைக்க காலங் கடத்துவதுபற்றிய கோரிக்கை
போன்ற தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரம், பெரு விருப்பம், விழைவு - எதிலாவது ஆளும் அரசு சாதகமான பதிலைத் தந்துள்ளதா? இல்லையே!
பின் எப்படி, எதற்காக இந்த ‘திடீர் ஆதரவு?’ வேறு எதற்காகவோ? அது என்ன, நாடறிய வேண்டாமா? வெளிப் படையாக சொல்லா விட்டாலும், விவரம் அறிந்தவர் களுக்குப் புரியாதா என்ன?
மத்திய அரசு, மாநில அரசுகள் விவசாயிகளிடம் எப்படி நடந்து கொள்ளுகின்றன?
விஜய்மல்லையாவுக்கு ஒரு நீதி -
விவசாயிக்கு வேறொரு நீதியா?
ரூ.9000 கோடி வாங்கிய வங்கிக் கடன்களுக்கு பட்டை நாமம் சாத்தி விட்டு வெளிநாட்டுக்குத் தப்பி ஓடி விட்டார் விஜய்மல்லய்யா என்ற சாராயத் தொழிலதிபர்!
மத்திய அரசு வழக்குரைஞர் உச்சநீதிமன்றத்தில் நேற்று பரிதாபமாக கைபிசைந்து இதனைக் கூறுகிறார்!
தமிழ்நாட்டில், தஞ்சை மாவட்டம் பாப்பாநாடு பகுதியில் சோழகன் குடிகாடு விவசாயி பாலன் - (50) என்பவர் 2011இல் தஞ்சையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.3.80 லட்சம் கடன் வாங்கி, டிராக்டர் வாங்கியுள்ளார். இந்தக் கடனை அடைக்க தலா ரூபாய் 64 ஆயிரம் வீதம் 6 முறை (தவணைகள்) செலுத்தினார்.
நெல் அறுவடை முடிந்தவுடன் அடுத்த தவணை கட்டுவதாகச் சொன்ன அவரை காவல்துறையும், நிதி நிறுவன ஆட்களும் டிராக்டரிலிருந்து கீழே தள்ளி அடித்து இழுத்துச் சென்று டிராக்டரையும் பறிமுதல் செய்துள்ள கொடுமை நிகழ்ந்ததுபற்றி தஞ்சை விவசாயிகள் குமுறி கொந்தளித்துள்ளனர்!
“விவசாயிகள் வருமானத்தை வரும் 5 ஆண்டுகளுக்குள் இரட்டிப்பு  மடங்காக்குவோம் என்று பட்ஜெட்டில் பறைசாற்றும் அரசுகள் ஒருபுறம்!
விவசாயி ஒரு தவணை செலுத்த சற்று தாமதமானால் அடித்து இழுத்துச் செல்லும் மனிதாபிமானமற்ற கொடுமை இந்த அம்மையார் ஆட்சியில் இன்னொருபுறம்!
இருவரும் மத்தியில் கைகோத்துள்ளனர்!
ஊனமுற்றோர் போராட்டத்தில் காவல்துறை அடித்து இழுத்துச் செல்வதெல்லாம்தான் இவ்வாட்சியின் அணுகுமுறையா?
எதிர்க்கட்சிகளையும், ஊடகங்களையும்
ஆட்சிகள் பழி வாங்கலாமா?
எதிர்க்கட்சியினரையெல்லாம் ‘தேச விரோத’ முத்திரை குத்தி, பழிதூற்றி வழக்குப் போடுவது போன்ற செயல்கள் மூலம் கருத்து சுதந்திரத்தைப்  பறித்து வருவது கண்கூடு! எதிர்க்கட்சித் தலைவர்கள்மீதும், ஏடுகள் மீதும், ஊடகங்கள்மீதும் எண்ணற்ற அவதூறு வழக்குகள் போடுவது; அதே நேரத்தில் பா.ஜ.க.வைச் சேர்ந்த பூணூல்கள் கொலைவெறிப் பேச்சுப் பேசினாலும்  மதிக்கத்தக்க நாடு போற்றும் தலைவர்களை இழித்தும், பழித்தும் பேசினாலும் அவர்கள்மீது எவ்வித நடவடிக்கையும் பாயாது - சட்டம் மவுனம் சாதிப்பதும் மாநில அரசின்  தனித் தன்மையாகும்!
நம் நாட்டு ஜனநாயகத்தின் பரிதாப நிலையைப் பாரீர்!
முன்பெல்லாம் இப்படி நடந்தால் ஆளுங் கட்சி பதவி விலகுவது ஜனநாயக நடைமுறை! இப்போது நிச்சயமாக எதிர் பார்க்கவே முடியாது.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
10.3.2016


.
 2

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

 
 
 
தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  
1000 எழுத்துகள் மீதமுள்ளன

 
Security code
Refresh

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...