Friday, February 12, 2016

இந்திய வரலாற்றுச் சின்னங்கள் பராமரிப்பை தனியாரிடம் விட ஆலோசனையாம்

இந்திய வரலாற்றுச் சின்னங்கள் பராமரிப்பை தனியாரிடம் விட ஆலோசனையாம்
புதுடில்லி, பிப்.11_ இந்திய வரலாற்றுச் சின்னங்களின் பராமரிப்பை தனியாரிடம் அளிக்க ஆலோசனை செய்து வருவதாக மத்திய கலாச் சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித் துள்ளார். இந்திய தொல் பொருள் ஆய்வகத்தில் உள்ள அலுவலர் பற்றாக் குறையை சமாளிக்க இந்த முயற்சி எடுக்கப்பட்டுள் ளது.
மத்திய அரசின் கீழ் தன்னாட்சி பெற்ற அமைப் பாக செயல்பட்டு வருவது இந்திய தொல்பொருள் ஆய்வகம்(ஏ.எஸ்.அய்). இது, ஆக்ராவின் தாஜ்மகால், டில்லியின் செங் கோட்டை உட்பட நாட் டிலுள்ள அனைத்து வர லாற்றுச் சின்னங்களை புதுப்பிப்பதுடன், பாது காத்தும், பராமரித்தும் வருகிறது.
இங்கு பணியில் இருக்கும் பாதுகாப்புப் படைகளும் ஏ.எஸ்.அய். யால் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது. எனினும், ஏ.எஸ்.அய்.யிடம் உள்ள அலுவ லர் பற்றாக்குறை அதிக மாக உள்ளது. இதை அதி கரிக்க அரசிற்கு ஆர்வம் இல்லை என்பதால் நாட் டின் சில வரலாற்றுச் சின் னங்களை பராமரிப்பு மற் றும் பாதுகாப்பிற்காக தனி யாரிடம் ஒப்படைக்க மத் திய கலாச்சாரத்துறை அவ் வப்போது யோசிப்பது வழக்கமாக உள்ளது.
ஏனெனில், முறையான பராமரிப்பு இன்றி இந்திய வரலாற்றுச் சின்னங்களில் பல அழிந்து போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள் ளன. இதற்கு ஏ.எஸ்.அய்.யிடம் இருக்கும் நிதிப்பற் றாக்குறையும் ஒரு முக்கியக் காரணம் ஆகும்.
இவற்றை தனியாரிடம் ஒப்படைக்க ஒவ்வொரு முறையும் வர லாற்றாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடமிருந் தும் கடும் எதிர்ப்புகள் கிளம்புவதும் வழக்கமாக உள்ளது. ஆனால், இந்த முறை மத்திய கலாச்சாரத் துறையின் சார்பில் வர லாற்றுச் சின்னங்களை தனி யாரிடம் ஒப்படைக்க தீவிரமாக ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து மகேஷ் சர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில், இதற்கான யோசனை, சில துறையினர் மற்றும் சுற்றுலா தலப் பகுதிகளில் இருந்து வந் துள்ளது. டில்லியின் செங் கோட்டை, குதுப்மினார் ஆகியவற்றின் உட்புற பரா மரிப்பை தனியார் அளிக்க யோசித்து வருகிறோம்.
இவை சுத்தப்படுத்துதல், கழிவறைகளை சுத்தமாக்கு தல், பாதுகாப்பு, நூலகம், பசுமைப் பராமரிப்பு, சிற் றுண்டி போன்றவை ஆகும். இதன் மீதான கருத்துகளை பிரபல தனியார் நிறுவனங் களிடம் இருந்து பெற விரும்புகிறோம். எனத் தெரிவித்தார்.
இந்தத் தகவலை அமைச்சர், நேற்றுமுன் தினம் டில்லியில் சுற்றுலா தகவலகம் துவக்கி வைத்த போது தெரிவித்தார்.

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...