Wednesday, February 10, 2016

பத்மசிறீ விருதுகள் தேர்தல் காலங்களில் விருதுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு : ஆய்வில் தகவல்


புதுடில்லி, பிப்.9 தேர்தல் காலங்களில் பத்மசிறீ விருதுகளின் எண்ணிக்கை 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள் ளது.
மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதுகளில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது பத்மசிறீ விருது. இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் மற்ற ஆண்டுகளை காட்டிலும் தேர்தல் காலங்களில் பத்மசிறீ விருதுகளின் எண்ணிக்கை சுமார் 30 சதவீதம் அதிகரித்துள்ளது என தெரியவந்துள்ளது. 
கடந்த 16 ஆண்டுகளில் வழங்கப்பட்ட பத்மசிறீ விருது குறித்து நடத்தப்பட்ட சர்வேயில் 7 மாநிலங்கள் மொத்தமாக 63 சதவீத விருதுகளை கைப்பற்றியுள்ளன. அதே நேரத்தில் தேர்தல் நேரத்தில் இவற்றின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. தேர்தலில் ஏற்பட்ட வெற்றி தோல்விக்கும் இதற்கும் நேரடியாக எந்த தொடர்பும் இல்லாத போதும், 
அரசியலின் செல்வாக்கு பத்மசிறீ விருதுகளை வழங்குவதில் இருந்து வந்துள்ளது. 2004ம் ஆண்டு மத்தியில் பாஜ ஆட்சிக்கு வந்த போது 74 பேருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது. ஆனால் அதற்கு முந்தைய 4 ஆண்டுகளில் அந்த விருது பெற்றவர்களின் சராசரி எண்ணிக்கை 57.
அதே போல் 2009இல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த போது 93 பேருக்கு வழங்கப்பட்டது. அதே நேரத்தில் கடந்த 4 ஆண்டுகளில் சராசரியாக 66 பேருக்கு மட்டுமே பத்மசிறீ வழங்கப்பட்டது. அதே போல் 2014இல் மீண்டும் காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்த போது 101 பேருக்கு வழங்கப்பட்டது. 
அதற்கு முந்தைய நான் காண்டுகளில் சராசரியாக விருது பெற்றவர்களின் எண்ணிக்கை வெறும் 80. தேர்தல் அல்லாத ஆண்டுகளை காட்டிலும் 2004,2009, 2014 ஆகிய ஆண்டுகளில் 30 சதவீதம் அதிகமாக விருது எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
மாநிலங்களைப் பொறுத்த அளவில் டில் லியும், மகாராஷ்டிராவும் அதிகமான எண்ணிக் கையை கைப்பற்றியுள்ளன. கடந்த 16 ஆண்டுகளில் மொத்தம் 1200க்கு பத்மசிறீ வழங்கப்பட்டுள்ளது. இதில் மூன்றில் ஒரு பங்கு விருதுகளை இந்த இரண்டு மாநிலங்களும் பகிர்ந்து கொண்டுள்ளன. 
அடுத்தபடியாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகியவை பாதிக்கும் அதிகமான விருதுகளை பெற்றுள்ளன. ஆந்திரா வும், உ.பி.யும் தலா 6 சதவீதம். பீகார் உள்ள திலேயே மிகவும் குறைவாக 2 சதவீதம் என்ற அளவில் 20 பேருக்கு மட்டுமே பெற்றுள்ளது என்று அதில் தெரியவந்துள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...