Monday, November 16, 2015

தமிழ்நாடு மாட்டிறைச்சித் திருவிழாவின் முன்னோடி மாநிலம்


- இளங்கோவன் ராஜசேகரன்
தமிழ்நாடு: இங்கு மாட்டிறைச்சியை கலாச்சார உணவாக மட்டும் பார்க்கவில்லை, சமூக உரிமைக்கான போராட்டத்தின் உணவாகவும் பார்க்கப்படுகிறது. ஜனசங்க காலத்தில் இருந்தே மதவெறியர்களை எதிர்க்க மதநல்லிணக்க ஆர்வலர்களும், பகுத்தறிவுவாதிகளும் கையில் எடுத்த போராட்ட வடிவங்களுள் ஒன்றுதான் மாட்டிறைச்சி உணவுத் திருவிழாவாகும்.
சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்த தந்தை பெரியார் மாட்டிறைச்சி உண்பதை ஆதரித்தார். அவர் காலத்திலேயே மாட்டி றைச்சித் திருவிழா பெரிய வரவேற்பைப் பெற்றது.  அம்பேத்கர் பிறந்த நாள் அன்று (2015 ஏப்ரல் 14) பெரியார் திடலில் தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சியும், அத னைத் தொடர்ந்து மாட்டிறைச்சி விருந் திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஜெயலலிதா தலைமை யில் ஆளும் அண்ணா திராவிட முன் னேற்றக் கழக அரசு சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி அதைத் தொடர்ந்து மாட்டிறைச்சி விருந்தைத் தடை செய்தது. ஆனால், திராவிடர் கழகம் இந்த தடைக்கு எதிராக நீதிமன்றம் சென்று விழா நடத்த அனுமதி பெற்றது. இந்த நிலையில் ஏப்ரல் 14-ஆம் தேதி காலை தாலிஅகற்றிக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது, அதே நேரத்தில் தமிழக அரசு இரவோடு இரவாக நீதி மன்றத்தை நாடி தடைஉத்தரவு பெற்றது தடை உத்தரவு வருவதற்குள் தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி நடந்தே முடிந்துவிட்டது, பிறகு நடைபெறவிருந்த மாட்டிறைச்சி விருந்து ரத்து செய்யப்பட்டது.
தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் தாலி பற்றிய விவாதத்தின்போது இந்துத்துவ சக்திகள் வன்முறையில் ஈடுபட்டதன் மூலம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது, இந்த நிலையில் அன்றிரவு நாட்டு வெடிகுண்டுகளும் வீசப்பட் டன, இதைக் கண்டிக்கும் வகையில் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக கிளம்பிய இந்துத்துவ சக்திகளுக்கு சவால் விடும் வகையில் தாலிய கற்றிக்கொள்ளும் நிகழ்ச்சியை திராவிடர் கழகம் நிகழ்த்திக் காட்டியது, அதே நேரத்தில் மார்ச் மாதம் மகாராஷ்டிராவில் மாட்டிறைச் சிக்கு முழுமையாக தடை விதித்ததை எதிர்த்து தமிழகத்தில் மாட்டி றைச்சி விருந்தை ஏற்பாடு செய்திருந்தது.  தாலியகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி பெண்ணடிமைச் சின்னமாக பார்க்கப்பட்டு பெரியார் காலத்தில் இருந்தே தொடர்ந்து தாலியகற்றும் நிகழ்வு நடைபெற்று வந்தன. அதே போல் மாட்டிறைச்சி விருந்தும் திரா விடர் கழகப் போராட்டத்தின் ஒரு வடிவமாகவே மேற்கொள்ளப்பட்டது.
பெரியார் அய்ரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்த போது மாட்டிறைச்சியின் மகத்துவத்தை உணர்ந்தார். இதனை அடுத்து அவர் இந்தியாவில் மாட்டிறைச்சி உழைக்கும் மக்களின் உணவாக வேண்டும் என்று அறை கூவல் விடுத்தார். உழைக்கும் மக்களின் உடலுழைப்பிற்குத் தேவையான ஆற்றல் மாட்டிறைச்சியில் இருப்பதால் அது உழைக்கும் மக்களுக் குத் தேவையான உணவு ஆகும் என்று கூறினார். ஆனால் இந்தியாவில் இன்றளவும் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களை தீண்டத் தகாதவர்களாகப் பார்க்கும் நிலை உள்ளது.
ஆங்கிலேயரின் உணவான மாட்டிறைச்சியை பார்ப்பன சமையற்காரர்கள் சமைக்க மறுத்தனர். இருப்பினும் ஆங்கிலேயர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதை நிறுத்த வில்லை. மாட்டிறைச்சி விருந்து தொடர்பாக பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அளித்த பேட்டியில் கூறியதாவதுதெற்கில் பெரியாரின் மாட்டிறைச்சிக் கொள்கையை அம்பேத் கரும் ஆதரித்தார், அதே நேரத்தில் மாட்டிறைச்சி தொடர்பாக வேதத்தில் உள்ள பல உண்மைகளை அம்பேத்கர் வெளிக் கொணர்ந்தார். வேத காலத்தில் நூற்றுக்கணக்கான பசுக்களை யாகம் என்ற பெயரில் தீயில் இட்டு பொசுக் கியதையும் அதை யாகம் செய்யும் பார்ப்பனர்கள் பங்கிட்டு உண்டதையும் ஆதாரங் களுடன் குறிப்பிட்டுள்ளார். திடீரென்று அம்பேத்கர் மீது அக்கறை கொண்டு இருக்கும் இந்துத்துவ சக்திகள் அம்பேத்கர் மாட்டிறைச்சியை உண்ணவேண்டாம் என்று கூறியதாக ஒரு புரளியைக் கிளப்பிவிட்டு வருகின்றனர்.
இது மிகவும் தவறான ஒன்றாகும், அம்பேத்கர் தனது தீண்டத்தகாதவர்கள் என்ற நூலில் தாழ்த்தப்பட்ட வர்களைப் பார்த்து நீங்கள் இறந்துபோன மாட்டின் இறைச்சியை சாப்பிடவேண்டாம் என்று தான் குறிப்பிட் டுள்ளாரே தவிர மாட்டிறைச்சியை உண்ணவே வேண் டாம் என்று ஒருபோதும் குறிப்பிடவில்லை. (வடமாநிலங் களில் மாடு இறந்துவிட்டால் பல மணிநேரம் கழித்து தாழ்த்தப்பட்டவர்களை அழைத்து இறந்துபோன மாட்டின் தோலை எடுக்க ஒப்படைப்பார்கள், அதற்கான பணத்தையும் வாங்கிக்கொள்வார்கள்)
மாட்டிறைச்சி பற்றி பெரியாரின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை வீரமணி அவர்கள் குறிப்பிடும்போது 1926 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 காரைக்குடிக்கு அருகில் உள்ள சிராவயல் என்ற கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் உரையாற்றும்போது பெரியார் கூறியதாவது: “நீங்கள் மாட்டிறைச்சி உண்பதற்காக உங்களை தீண்டத்தகாதவர்கள் என்று அழைக்கிறார்கள், அதுபற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம், நம்மை ஆளும் ஆங்கிலேயனின் முக்கிய உணவே மாட்டிறைச்சிதான், ஆகவே உங்கள் உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தரும் மாட்டிறைச்சியைச் சாப்பிடுவதை தவறாக எண்ண வேண்டாம்” என்றார்.

சில மாநிலங்களில் மாட்டிறைச்சித்தடை காரணமாக தற்போது திராவிடர் கழகம் மாட்டிறைச்சி விருந்தை ஏற்பாடு செய்யவில்லை. 1979 ஆம் ஆண்டு இதே போன்று ஒரு பிரச்சினை  நம் நாட்டின் பல பாகங்களில் எழுந்தபோது திராவிடர்கழகம் மக்களை ஒன்று திரட்டி தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் மாட்டிறைச்சித் திருவிழாவை நடத்திக் காட்டியது என்று கூறினார்.
திராவிடர் கலாச்சாரமாகத் திகழும் தமிழக மண்ணில் காவிக்கூட்டங்கள் தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த பல்வேறு வகையில் திட்டங்கள் மேற்கொண்டன.. 2002 ஆம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த ஜெ.ஜெயலலிதா மிருகவதைதடுப்புச் சட்டத்தை மய்யமாக வைத்து தமிழ்நாட்டில் கோவில்களில் கோழி, ஆடு, பன்றி மாடு போன்றவற்றைப் பலியிடக்கூடாது என்று சட்டமியற்றினார்.
ஏழைகள் தம் குடும்பத்தாருடன் இறைச்சி சமைத்து உண்பதற்கு கோவில் விழாக்கள் என்ற பெயரில் கிடைத்த வாய்ப்பையும் இந்தச் சட்டம் தட்டிப்பறித்தது, இதற்கு எதிராக திராவிடர் கழகம் போராட்டம் நடத்தியது, இறுதியில் தேர்தலையொட்டி ஜெயலலிதா அந்தச் சட்டத்தை திரும்பப் பெற்றுக்கொண்டார்.
தமிழ் நாட்டில் விலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் (1959)படி பசு, கன்று, காளை,எருமை போன்றவற்றை தகுந்த சான்றுகள் பெற்று இறைச்சிக்காக வெட்டலாம் என்ற விதி இருந்தது. இந்த நிலையில் 1976ஆம் ஆண்டு பசுவதை தடுப்புச் சட்டம் தமிழகத்தில் இயற்றப்பட்டது. இருப்பினும் தமிழகத்தில் மாட்டிறைச்சி எவ்வித தடையுமின்றி தாராளமாக்க் கிடைக்கிறது.
1966-ஆம் ஆண்டு மத்தியில் இந்திராகாந்தியின் ஆட்சிக்காலத்தில் காமராஜர் காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்தபோது பசுவதைதடைச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்றக்கோரி டில்லியில் போராட்டம் நடைபெற்றுக்கொண்டு இருந்தது, காமராஜர் இந்தப் போராட்டத்திற்கு பணிந்துபோகக் கூடாது என்று கூறினார். இதனால் அம்மணச்சாமியார்களும் இந்து அமைப்பைச்சேர்ந்த சமூகவிரோதிகளும் திரிசூலம்,வேல் போன்ற ஆயுதங்களுடன் டில்லியை வலம் வந்தனர். காமராஜரின் இருப்பிடம் வந்தபோது அவர்கள் பெட்ரோல்குண்டுகளை வீசி, காமராஜரைக் கொலை செய்ய முயன்றனர். இந்த நிலையில் காமராஜர் தனது வீட்டின் பின்புறத்தில் இருந்து வெளியேறி உயிர்தப்பினார். இந்த தகவல் அறிந்ததும் பெரியார் இந்து மதவெறியர்களின் இந்தக் கொலைவெறியாட்டத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் உள்ள தமிழர்கள் சீக்கியர்கள் சமதர்மக்கொள்கைகளை வலியுறுத்தி கத்தியை வைத்துக் கொள்வதைப் போல், தமிழர்கள் தடியை வைத்துக் கொள்ள வேண்டும் இந்தத் தடி வர்ணஸ்ரம கொள்கைக்கு எதிராக கிளம்பவேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். அதே நேரத்தில் மாட்டிறைச்சியை மாநிலத்தின் அனைத்து நகரங்ளிலும் கூடி விருந்து படைக்க வேண்டும் என்று கூறினார். இதை தனது நாளிதழான விடுதலையில் தலையங்கமாகவே தீட்டினார். இதன் விளைவாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மாட்டிறைச்சி விருந்து பரிமாறப்பட்டது.
பாபாசாகிப் அம்பேத்கர் அரசமைப்புச் சட்டத்தை இயற்றியபோது பசுவதைத்தடையை தனிப்பிரிவாகச் சேர்க்கவேண்டும் என்று பார்ப்பனர்கள் அழுத்தம் கொடுத்தனர். இது குறித்து அம்பேத்கர் கூறியதாவது சில பார்ப்பன உறுப்பினர்கள் அரசியல் சாசனத்தில் பசுவதையை தடைசெய்யவேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தினர் இதன் காரணமாக பிரிவு 48-இல் பசுவதை குறித்து எழுதவேண்டி இருந்தது, மேலும் அந்தஅந்த மாநிலங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு பசுவதைதடைச் சட்டத்தைக் கொண்டுவரலாம் என்றும் குறிப்பிடவேண்டிய தாயிற்று என்று கூறினார்.
இந்த வசதியைப் பயன்படுத்தி பாஜக ஆட்சி புரியும் மாநிலங்களில் மாட்டிறைச்சியை முழுமையாகத் தடைசெய்யும் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளனர். மாட்டிறைச்சியைச் சிறுபான்மையினர் உணவாக உருவகப் படுத்தி வருகின்றனர்.
முக்கியமாக முஸ்லிம் மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் அறிக்கை விடுவதும், மாட்டிறைச்சி தொடர்பில் முஸ்லீம்களை முன்னிலைப்படுத்துவதும் பாஜக ஆளும் மாநிலங்களிலும் அதிகமாகி வருகிறது.
பாஜக மற்றும் இந்துத்துவ இயக்கங்களின் இந்தப்போக்கு மிகவும் ஆபத்தானதாகும், இந்தியா போன்ற பல்வேறு கலாச்சார மற்றும் உணவு பழக்க வழக்கங்கள் கொண்ட ஒரு நாட்டில் ஒருவரின் தனிப்பட்ட உணவு விவகாரத்தில் கைவைக்கும்போது இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டிற்கே பேராபத்தை விளைவிக்கும், இதன் மூலம் உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் இந்தியாவிற்கு அவப்பெயரை ஏற்படுத்தி நாட்டின் வளர்ச்சியை தடைசெய்துவிடும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினார்.
‘ஃப்ரொண்ட்லைன்’ இதழ் 20 அக்டோபர் 2015  
தமிழில்: சரவணா இராசேந்திரன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...