Wednesday, November 11, 2015

நறுக்குகள்



பி.ஜே.பி.காரர்களுக்கு மற்றவர்களை மட்டம் தட்டு வது என்றால், அவர்கள் கையாளும் ஒரு பிராணி நாய்தான்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் லாலு - நிதிஷ் என்னும் மகா கூட்டணி, சுயமரியாதைக் கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், பி.ஜே.பி.யைச் சேர்ந்த நடிகர் சத்ருகன் சின்கா, நிதிஷ்குமாரை நேரில் சந்தித்து, கட்டிப் பிடித்து வாழ்த்துகளைத் தெரிவித் துக் கொண்டுள்ளார்.
இந்தநாகரிகத்தை எல் லாம் ஏற்கக்கூடியவர்களா பி.ஜே.பி. - சங் பரிவார் வகையறாக்கள்?
பி.ஜே.பி.யின் மூத்த தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் விஜய்வர்சியா இதுபற்றி என்ன கூறியுள் ளார்?
‘‘கார் நகரும்போது அந்தக் காரின் அருகில் இருக்கும் நாயும் நகரும். அப்போது அந்த நாய், தன்னால்தான் அந்தக் கார் நகர்கிறது என்று நினைத்துக் கொள்ளும். அது போன் றதே சத்ருகன் சின்காவின் நடவடிக்கை என்று அவ ருக்கே உரித்தான ‘நாகரிகத் தோடு’ கருத்துத் தெரிவித் துள்ளார்.
நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது  குஜராத் கலவரத் தின்போது ஆயிரக்கணக் கான முசுலிம்கள் கொல்லப் பட்டபோது, அதைப்பற்றி நீங்கள் வருந்தவில்லையா? வருத்தம் தெரிவித்தீர்களா? என்று கேட்கப்பட்ட நிலையில், முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி என்ன சொன்னார் நினைவிருக் கிறதா?
நாம் காரில் செல்லும் போது, நாய் அடிபட்டுச் செத்துப் போகிறது. அதற்கு நாம் வருந்துவதில்லையா?
அதேபோல, அரியானா வில் தாழ்த்தப்பட்ட குடும் பத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் எரிக்கப்பட்ட போது, மத்திய இணைய மைச்சர் வி.கே.சிங், என்ன ‘திருவாய்’ மலர்ந்தார்?
நாய்கள்மீது கல்லெறி வதற்கெல்லாம் கருத்துச் சொல்லவேண்டுமா என்று சொல்லவில்லையா? அதே போல்தான் சத்ருகன் சின் காவையும் நாயோடு ஒப் பிட்டுச் சொல்லியிருக்கிறார் விஜய் வர்சியா மோடி வழி சீடர்கள்....
நாய் என்பது இந்து மதக் கடவுள் பைரவரின் வாகனம் என்பதால், அதன்மீது வாஞ் சையோ இந்த இந்துத்துவ வியாதிகளுக்கு?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...