Thursday, November 26, 2015

உலகத்தில் எங்கேனும் கேட்டதுண்டா?



- குடந்தை கருணா
தலைவர் தொண்டர்களைப் பார்த்து சொல்கிறார்: நான் சிறைப்படுத்தப்பட்டு விட்டேன் என்பதாலேயோ, அல்லது பொதுமக்கள் என்கிற எண்ணத்தால் அதைத் தடுக்க அரசாங்கத்தார் ஏராள மான மக்களைக் கைதுசெய்து விட்டார் கள் என்ற எண்ணத்தாலேயோ, புதிய சட்டத்தின்படி நீண்ட நாள் தண்டிக்க நேரிடும் என்ற அச்சத்தினாலேயோ  யாரும் அதாவது கொளுத்தவேண்டி யது அவசியம்தான் என்று கருதுகிறவர் கள், எந்தவிதமான தயக்கமும் இல்லா மல், அரசமைப்புச் சட்டத்திலிருந்து பொறுக்கி எடுத்துப் போட்டிருக்கிற, நமக்குக் கேடான நாலைந்து பிரிவு களைக்கொண்ட பிரசுரத் தொகுப்பைக் கொளுத்தியே தீர வேண்டியது முக் கியமான காரியம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆகவே, இஷ்டப்பட்டவர்கள் தஞ்சை மாநாட்டுத் தீர்மானத்தை நிறை வேற்ற பெயர் கொடுங்கள், என்கிறார்.
சட்டத்தை எரித்தால் மூன்றாண்டு கடுங்காவல் என தெரிந்தும் பத்தாயிரத் திற்கும் மேல் பெயர் கொடுக்கிறார்கள். சட்டத்தை எரித்து, மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் கடும் சிறைவாசம் மூன்றாண்டுவரை அனுபவிக்கிறார்கள்.
யார் அந்த தலைவர்? அவர்தான் சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியார்.
அவரின் பேச்சை, கட்டளையாக ஏற்று, பெரியார் இயக்கத்தினர் சட்ட எரிப்புப் போராட்டத்தில் கைதாகி தங் களை கடும் கஷ்டத்திற்கு ஆட்படுத்திக் கொள்கிறார்கள்.
சரி. எதற்காக இந்தப் போராட்டம்? சுதந்திர இந்தியாவின் அரசியல் அமைப் புச் சட்டம் 26.1.1950 இல் நடைமுறைக்கு வருகிறது. இந்த சட்டத்தை பலரும் புகழ்பாடிக் கொண்டிருக்கையில், ஒரே ஒரு குரல் அதற்கு எதிர்ப்பு தெரிவிக் கிறது.
அரசமைப்புச் சட்டத்தை உருவாக் கிய ஆறு பேர்களில் நான்கு பேர் பார்ப்பனர்கள். இதை நிறைவேற்றிய அரசியல் நிர்ணயசபை என்பது வயது வந்தோரின் வாக்குரிமை பெறாதவர் களைக் கொண்டதாகும்.
இந்த சட்டத்தில் ஹிந்து மதத்திற்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது; ஹிந்து மதத்தில் ஜாதிக்குப் பாதுகாப்பு இருக்கிறது; ஜாதியைக் காப்பாற்றத்தான் இடமிருக்கிறது. இதை எளிதில் திருத்தி யமைப்பதற்கும் ஜாதி ஒழிப்புக்காரருக்கு வசதியில்லை; வாய்ப்பும் இல்லை.
ஆதலால், ஜாதியை ஒழிக்க விரும்பு கிறவர்கள், இதை எரிப்பதன் மூலம் நம் எதிர்ப்பைக் காட்டிக்கொள்வதைத் தவிர, வேறு வழி என்ன? என பொட்டில் அடித்தாற்போல் மக்களைப் பார்த்துக் கேட்டார் பெரியார். பெரும்பான்மை மக்களை இழிவுபடுத்தும் இந்தப் பிரிவுகளை அரசு நீக்க வேண்டும் என பதினைந்து நாள் கெடுவும் கொடுத்தார் பெரியார்.
விளைவு. ஆயிரக்கணக்கில் மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியை வலியுறுத்தும் பிரிவை நீக்க வேண்டும் எனக் கூறி எரித்தனர்.
இந்தியாவில் எங்கேயும் நடைபெற் றிராத இத்தகைய போராட்டத்தை எந்த ஆண்டு, எந்த தேதியில் பெரியார் நடத்தினார். அவர் தேர்ந்தெடுத்த தேதி 1957 இல் நவம்பர் 26.
அது என்ன? நவம்பர் 26. ஆம். அன்று தான், அதாவது 26.11.1949 அன்று தான்,  பாபா சாகிப் அம்பேத்கர் தலை மையில் உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தை அரசியல் நிர்ணய சபை ஏற்றுக் கொண்டது. பின்னர் 26.1.1950 முதல் நாட்டில் நடைமுறைப்படுத்தப் பட்டது.
ஆக, எந்த நாளில் அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதோ, அதே நாளை தேர்ந்தெடுத்து, அந்த நாளில் மக்களை இழிவுபடுத்தும் பிரிவை மக்களைக் கொண்டு கொளுத் தும் நிலையை உருவாக்கினார்.
இன்று மறியல் செய்யும் கட்சியினர், அன்று மதியமோ அல்லது அதிகபட்சம் மாலையோ உறுதியாக விடுதலை கிடைத்துவிடும் என்ற ஒரே நம்பிக் கையில் கலந்து கொள்ளும் நிலையில், பெரியார் விடுத்த வேண்டுகோளை ஏற்று மூவாயிரத்துக்கும் அதிகமானோர் உச்சபட்சமாக மூன்றாண்டு கடும் தண்டனை விதிக்கப்பட்டனர். ஒருவர் கூட பிணையில் வரவில்லையே.
மாறாக, தண்டனையை நீதிமன்றம் கூறும் வேளையில், இவர்கள் கூற வேண்டியது என்ன தெரியுமா?
நான் ஜாதி ஒழிப்புக்காரன். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதிக்கும், அதை உண்டாக்கிய மதத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அரசமைப்புச் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்படவுமில்லை; அச்சட்டத்தைத் திருத்தக்கூடிய வசதி தமிழர்களுக்கு இல்லை. ஆதலால், என் எதிர்ப்பைக் காட்டிக்கொள்ளும் அறிகுறியாக இச் சட்டத்தை கொளுத்தினேன். இப்படிக் கொளுத்துவதற்கு எனக்கு உரிமை உண்டு. இதனால் எந்த உயிருக்கும், எந்தப் பொருளுக்கும் சேதமில்லை. ஆதலால், நான் குற்றவாளி அல்ல. இந்த நீதிமன்ற நடவடிக்கைகளில் நான் கலந்து கொள்ள விரும்பவில்லை. நான் எதிர் வழக்காட விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கருதப்பட்டால், அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சி யுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.
இப்படி ஓர் அறிக்கையை தண்ட னைப் பெற்ற அனைவரும் நீதிமன்றத் தில் கூறினர். தண்டனை பெற்றனர். சிலர் சிறையில் இறந்தனர்.
ஜாதி ஒழிப்புக்காக இந்திய வரலாற் றில் பெரியாரும் அவர்தம் இயக்கமும் நடத்திய போராட்டத்தைப் போல் எவரும் நடத்திடவும் இல்லை; இத்த கைய எண்ணிக்கையில் சிறைத் தண் டனை பெற்றதும் இல்லை; நீதிமன்றத் தில் துணிவுடன் அறிக்கை கொடுத்ததும் இல்லை.
இந்த பெருமை பெரியார் இயக்கத் திற்கு மட்டும்தான் உண்டு, தோழர்களே.
இதைப் படித்த சிலர் நினைக்கலாம். பாபாசாகிப் அம்பேத்கர் உருவாக்கிய சட்டத்தை பெரியார் எதிர்த்தாரே என்று. அவர்களுக்கு ஓர் நற்செய்தி. ஆந்திர மாநில மசோதா பற்றிய விவாதம் மாநி லங்களவையில் நடைபெறுகிறது. 3.9.1953 அன்று அந்த விவாதத்தின் போது டாக்டர் அம்பேத்கர் கூறுகிறார்: சிலர் நான்தான் இந்த சட்டத்தை ஏற்படுத்தினேன் என்று சொல்கிறார்கள். நான்தான் அதை நெருப்பிலிட்டுப் பொசுக்குவதற்கும் முதன்மையானவனாக இருப்பேன்.  நான் அதை முற்றிலும் வெறுக்கிறேன், என்று கூறியவர் அம்பேத்கர்.
அம்பேத்கர் கூறியதை, நடை முறைப்படுத்தியவர் பெரியார்.
ஜாதி ஒழிப்புக்காக நடைபெற்ற போராட்டமும், அதில் தண்டனைப் பெற்றவர்களும் வரலாறாக இன்று இருக்கிறார்கள். அவர்களின் போராட் டத்திற்கான காரணம் இன்றும் உள்ளது. ஜாதி ஒழிப்புக்கான சட்ட மாற்றத்தை வென்றெடுக்க நாம் இந்த நவம்பர் 26 இல் சூளுரைப்போம். ஜாதி இழிவுதான் என்பதை உரக்கச் சொல்லுவோம்.

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...