Monday, November 9, 2015

பிகார் தேர்தல்: நிதிஷ் - லாலு கூட்டணி வெற்றிக்கு வாழ்த்துகள் குவிகின்றன

பிகார் தேர்தல்: நிதிஷ் - லாலு கூட்டணி வெற்றிக்கு வாழ்த்துகள் குவிகின்றன
புதுடில்லி, நவ.9_  பிகார் சட்டப் பேரவைத் தேர் தலில் வெற்றி பெற்றுள்ள முதல்வர் நிதீஷ் குமாருக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள் ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள னர்.
இது தொடர்பாக சுட்டுரையில் (டுவிட்டர்) மோடி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
நிதீஷ் குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி னேன். அப்போது தேர்த லில் வெற்றி பெற்றதற்காக அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண் டேன் என்று மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நிதீஷ் குமாரும் சுட்டு ரையில் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘பிரதமரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் எனக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மோடிக்கு நன்றி’’ என்று நிதீஷ் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா
இதேபோல காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும் நிதீஷை தொலை பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரி வித்துள்ளார்.
சமூக நீதிக்குக் கிடைத்த வெற்றி: சித்தராமையா
பிகார் சட்டப்பேர வைத் தேர்தல் முடிவுகள் மதச் சார்பின்மை, சமூக நீதிக்குக் கிடைத்த வெற்றி என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறினார்.
பிகார் சட்டப்பேர வைத் தேர்தலில் நிதீஷ் குமார் தலைமையிலான மகா கூட்டணி வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக் கிறது. இது மதச் சார் பின்மை மற்றும் சமூக நீதிக்குக் கிடைத்த வெற்றி யாகும். இந்த வெற்றிக்குக் காரணமான நிதீஷ்குமார், லாலு பிரசாத், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு வாழ்த்துக் களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக கூட்டணிக்கு கிடைத் துள்ள தோல்விக்கு, பிர தமர் மோடி, பாஜக தலை வர் அமித்ஷா இருவருமே பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
பா.ஜ.க.வின் சத்ருகன் சின்ஹா
பிகார் சட்டப் பேர வைத் தேர்தலில் மக்களின் தீர்ப்புக்கு நாங்கள் தலை வணங்குகிறோம் என்று நடிகரும், நாடாளுமன்ற உறுப்பினரும், பாஜகவின்  சத்ருகன் சின்ஹா கூறியுள் ளார்.
இது குறித்து சத்ருகன் சின்ஹா தனது டுவிட் டரில், ‘‘மக்களின் தீர்ப் புக்கு நாங்கள் தலை வணங்குகிறோம். இது ஜனநயகத்துக்கும், பிகார் மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும். இந்த வெற் றியின் மூலம் ‘பிஹாரியா? (பிகாரைச் சேர்ந்தவ ருக்கா), பஹாரியா? 'வெளியில் இருந்து வந்த வருக்கா)’ என்ற பிரச் சினை தீர்க்கப்பட்டு விட் டது’’ எனக் குறிப்பிட்டுள் ளார்.
அதேபோன்று, மற் றொரு டுவிட்டர் செய்தி யில், இந்த தோல்வியில் இருந்து பாஜக பாடம் கற்றுக்கொள்ள வேண் டும் எனக் கூறியுள்ளார்.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...