பிகார் தோல்விக்கு மோடி, அமித் ஷா, ஜேட்லிதான் காரணம்: அருண்ஷோரி
லக்னோ, நவ.9_ பிகார் சட்டப்பேரவைத் தேர்த லில் பாஜக தோல்வி அடைந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, மத் திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் தான் காரணம் என்று முன் னாள் மத்திய அமைச்ச ரும், மூத்த பத்திரிகையா ளருமான அருண் ஷோரி குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து அவர் டில்லியில் செய்தியாளர்க ளிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
கடந்த காலத்தில் அளித்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றாத தால், மோடியை மய்யப் படுத்திய பிரச்சாரம் நம் பகத்தன்மையை இழந்து விட்டது. மோடிக்கு எதி ராக மற்ற எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைவதற்கு அமித் ஷா, ஜேட்லி ஆகி யோரின் பேச்சுக்கள்தான் காரணமாக அமைந்தன. கட்சியின் தோல்விக்கு இவர்கள் மூன்று பேர் தவிர வேறு யாரும் கார ணம் இல்லை.
மோடியை மய்யப் படுத்திய, வகுப்புவாத, பொறுப்பற்ற பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் கட்சியை தோல்விப் பாதைக்கு அழைத்துச் சென்றன. தான் ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் பதுக் கப்பட்டுள்ள கருப்புப் பணம் மீட்கப்பட்டு, இந் தியர்கள் அனைவரின் வங்கிக் கணக்குகளிலும் தலா ரூ.15 லட்சம் செலுத் தப்படும் என்று கடந்த மக்களவைத் தேர்தலில் மோடி பிரச்சாரம் செய் தார்.
ஆனால், அது தேர் தல் பிரச்சாரத்தில் உணர்ச் சிவசப்பட்டு பேசிய சொல் என்று அமித் ஷா பிகாரில் பிரச்சாரம் செய் தார். அதனால், பாஜக புதிய வாக்குறுதிகளை அளிக்கும்போது பிகார் மக்கள் அவற்றுக்கு மதிப் பளிக்கவில்லை என்றார் அருண்ஷோரி.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- பிரம்மோஸ் ஏவுகணைச் சோதனை வெற்றி
- பெண் காவலர்களுக்கு கண்ணிவெடி செயலிழப்புப் பயிற்சி
- டில்லியில் இறைச்சிக்காக மாட்டைக் கொல்லவோ, மாட்டுக்கறிக்கோ தடை கிடையாது
- சகிப்பின்மைக்கு காரணமான பா.ஜ.க. அரசை கண்டித்து அருந்ததிராய் தேசிய விருதை திருப்பி அளிக்க முடிவு
- மோடியின் காஷ்மீர் பயணம்: காஷ்மீர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் 300க்கும் மேற்பட்டவர்கள் கைது
No comments:
Post a Comment