Thursday, November 5, 2015

பெரியாரையும், லீ குவான் இயூ-வையும் படியுங்கள்! இளையர்களுக்கு சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் அறிவுரை


சிங்கப்பூரில் பெரியார் விழா பெரியாரையும், லீ குவான் இயூ-வையும் படியுங்கள்!
இளையர்களுக்கு சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் அறிவுரை தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்று சிறப்புரை

சிங்கப்பூர் நவ.5 சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் சிங்கப்பூரின் பொன்விழா-வையும்,  மன்றத்தின் 10 ஆம் ஆண்டு விழாவையும் கொண்டாடிடும் வகை யில் பெரியார் கண்ட வாழ்வியல் விழாவை நவம்பர் 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தியது. விழாவில்  செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. விக்ரம் நாயர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு உரையாற் றினார்.  பெரியாரை பற்றி கவிஞர் கவிமதி எழுதிய சிறப்பானதொரு கவிதையை வாசித்து விழாவை தொடங் கினார் நெறியாளர் திருமதி. இலக்கியா செல்வராஜி.
தலைமையுரை
வரவேற்று தலைமை யுரை ஆற்றிய மன்றத்தின் தலைவர் வீ.கலைச்செல் வம் அவரது தலைமையு ரையில் தமிழர்களின் மானம் காத்த தந்தை, அவரின்றி தமிழரினம் தலை நிமிர்ந்திருக்க முடி யாது. அதனால் அவர் பெயரில் ஒரு மன்றம் பதிவு செய்து மனிதநேய சிந் தனைகளை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று பதிவு செய்து பத்தாண்டு களாக நடத்தி வருகி றோம். மன்றத்தின் முக்கிய செயல்பாடுகளாக மாண வர்களுக்கு தமிழ்மொழி போட்டிகள் நடத்தி வருவதையும், தமிழுக்காக உழைத்தவர்களை பாராட்டி பெரியார் விருது வழங்கியும், பெரியா ரின் கொள்கையுடன் அந்த காலத்திலிருந்து வாழ்ந்து தொண்டு செய் தவர்களை பாராட்டி பெரியார் பெருந்தொண் டர் விருது வழங்கி கவு ரவப்படுத்தி வருகிறோம் என்று கூறினார். 
மேலும் நிறைவாக திரு.விக்ரம் நாயர் அவர்களிடம் இந் திய மரபுடைமை நிலை யத்தில் இந்த நாட்டுக்காக பாடுபட்ட தமிழவேள் கோ.சா மற்றும் அவருக்கு அடித்தளமாக இருந்து  தமிழர்களுக்கு ஊக்கம் தந்த பெரியாரின் சிலையை அங்கு வைக்க வேண்டும் என்ற  கோரிக்கையுடன் உரையை நிறைவுசெய்தார்.
சிறப்பு விருந்தினர் உரை
சிறப்பு விருந்தினர்  திரு. விக்ரம் நாயர் தன் னுடைய உரையில் திரு.லீ மற்றும் பெரியார் அவர் களுடைய சிந்தனைகளில் நிறைய ஒற்றுமைகள் (similarity) உண்டு. இந்த பெரியார் கண்ட வாழ்வி யலுக்கு சிங்கப்பூரையே எடுத்துகாட்டாக கூற லாம்..
சிங்கப்பூர் ஆங்கி லேயரிடமிருந்து விடு தலை பெரும் போது Mr. லீ-யுடைய எண்ணம் நம் முடைய சொந்த மக்கள் எல்லோருக்கும் கல்வி கிடைக்க வேண்டும். கல்வியும் படிப்பும் கிடைக் கும் போது அதன் தாய் மொழிகளும் முக்கியமாக இருக்க வேண்டும். இத னால்தான் சீனம், மலாய், தமிழ் எல்லாம் தாய் மொழிகளாக சிங்கப்பூரில் இருந்து வருகின்றன.  தொடர்ந்து இருந்து வரும். என்று கூறி யாரா வது கஷ்டமான சூழ் நிலையில் இருக்கும் போது அரசாங்கம்  உதவி கொடுக்கக் கூடிய சூழ் நிலையில் இருக்க வேண் டும். நிதி பிரச்சினைகளால் இதனை எல்லா அரசாங் கங்களும் செய்யமுடியாது. 
ஆனால் சிங்கப்பூர் அர சாங்கம் பிரச்சினை உள் ளவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத் தில் செயல்பட்டு வரு கிறது.  இனிவரும் அடுத்த 50 ஆண்டுகளும் முதல் 50 ஆண்டுகள் போல் இருக்க போதிறதோ என்று யாரும் சொல்ல முடியாது.  இங்கே உள்ள பலர் கடந்த 50 ஆண்டுகளில் இருந்தீர்கள் என்று நம் புகிறேன்.  உங்களுடைய உழைப்பினால் தான் சிங் கப்பூர் நல்ல சூழ்நிலையில் இருக்கிறது. இனி அடுத்த 50 ஆண்டுகளுக்கும் சிங் கப்பூர் இப்படி சிறப்பாக  செயல்பட வேண்டுமென் றால் அது இன்று இருக்கிற இளையர்களின் கையில் இருக்க போகிறது. அப்போது நீங்கள் பெரியாரும் திரு.லீயும் கற்றுக்கொடுத்த பாடங் களை படித்தும் அடுத்த 50 ஆண்டுகளில் எப்படி பயன்படுத்தலாம்  என்று நீங்கள் தான் வழி காட்டவேண்டும். அதற்கு இந்த விழாவும் ஒரு பயன் உள்ள session  ஆக இருக் கும் என்று அனைவருக் கும் நன்றி கூறி முடித்தார்.
"பெரியார் விருது"
"பெரியார் விருது" பெற்ற சிங்கப்பூர் மூத்த எழுத்தாளர் திரு.ஜே. எம்.சாலி அவர்கள் தன் னுடைய ஏற்புரையில் என்னுடைய அறுபது ஆண்டு மொழி இலக்கிய பணிக்கு கிடைத்த அங்கீ காரம் என்று பெருமை பாராட்டுகிறேன் என்றார். மேலும் நான் சிங்கப் பூருக்கு வந்து 51 ஆண்டுகள் ஆகிறது. தாய்நாடு என் பிறந்த நாடு என்றால் சிங்கப்பூர் என் தந்தை நாடு என்றும் தமிழ்முரசு வில் என்னை பணிக்கு அமர்த்தி வளர்த்து ஆளாக்கிய தமிழவேள் கோ.சாரங்கபாணியும், நவீன சிங்கப்பூரின் தந்தை திரு.லீ குவான் இயூவை யும் என்னுடைய  தந்தை களாக போற்றுகிறேன் என்றார்.
1957-ல் நான் மாணவ ராக கும்பகோணம் கல் லூரியில் B.A படிக்கும் போது பெரியார் அவர்கள்  கல்லூரிக்கு வந்து பேசியதைக் கேட்டிருக்கிறேன். ஆனந்த விகடன், தமிழ் முரசுவில் பணிபுரியும் போது பெரியாரை பற்றி நிறைய எழுதி இருக்கிறோம். குறிப்பாக சென்னை கடிதம் என்ற தலைப்பில் தமிழ்முரசு-வில் தொடர்ச்சியாக எழுதும் போது கோ.சா அவர்கள் பெரியாரை பற்றி எதாவது ஒரு செய்தி அதில் இடம் பெறச் செய்வார்.  பெரியார் ஸிமீஸ்ஷீறீ , குடியரசு, விடுதலை, உண்மை போன்ற பல பத்திரிக்கைகள் நடத்தியுள்ளார் அதனால் அவரை பத்திரிக்கை உலக ஆசானாகவும் பார்க்கிறேன். தமிழவேள் கோ.சா-வை பற்றியும், திரு.லீ குவான் இயூவை பற்றியும் நூல்கள் எழுதிவிட்டேன். 
தற்போது பெரியாரை பற்றி நூல் எழுதி வெளி யிட வேண்டும் என்பது என்னுடைய பேராவா. அது என்னுடைய தார்மீக கடமையாக கருதுகிறேன். அதற்கான பல செய்திகளை திரட்டி வீட்டில் வைத்துள்ளேன். இன்னும் சில மாதங்களில் பெரியாரை பற்றி நூலை வெளியிடுவேன் என்று கூறி விருது கொடுத்த பெரியார் சமூக சேவை மன்றத்திற்கு நன்றி கூறி இந்த விருது சிங்கப்பூரின் பொன்விழாவுக்கு சிறப்பு சேர்க்கும் விருது என்று கூறி ஏற்புரையை நிறைவு செய்தார்.
பெரியார் பெருந்தொண்டர் விருது
பெரியார் பெருந்தொண்டர் விருது பெற்ற திரு. க.ஆ.நாகராசன் பேசும் போது முதன் முதலில் நான் கலைஞர் அவர்களின் பேச்சை கேட்டேன் அந்த பேச்சு பெரியாரின் சுயமரியாதைக் கருத்தை ஆணிவேராக என் மனதில் பதியவைத்து விட்டது.  அன்று முதல் இன்று வரை அதே கொள்கை அள வில் தான் நான் பின்பற்றி வருகிறேன். பெரியார் பெருந்தொண்டன் சிங்கப்பூர் திராவிடர் கழகத்தினு டைய பெருந்தலைவர் காலஞ்சென்ற தமிழ் தாத்தா ச.சா.சின்னப்பனாருக்கு இந்த விருதை நான் சமர்ப் பித்து நன்றி செலுத்த கடமைப் பட்டுள்ளேன். ஏனென்றால் இந்த சாதாரண தொழிலாளியை இந்த இயக்கம் பாராட்டு கிறது என்றால் அதற்கு அடிப்படை காரணம் ஒராண்டுகளுக்கு மேலாக சுயமரியாதைக் கொள்கைகளையும், தத்துவங்களையும் எங்களுக்கு பயிற்சி யாக அளித்த என்னுடைய சொல் ஆசான் ச.சா.சின்னப்பனார் அவர்கள் தான் என்றார்.
தமிழ்மொழிப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.விக்ரம் நாயர்.
1950களில் சிங்கப்பூர் திராவிடர் கழகத்தில் உறுப்பினராக, செயலாளராக இருந்ததையும், அதன்பின்பு மக்கள் செயல் கட்சியில் சேர்ந்து சமூக பணியாற்றியதையும் குறிப்பிட்டார். தமிழ் சமுதாயம் இன்று வீறுபெற்று நிற்கிறது என்றால் அதற்கு காரணம் தந்தைபெரியார்தான் என்றார். அவரின் வருகையினாலும், அவர் கொள்கைகளை தமிழவேள் கோ.சா-லிடன் சேர்ந்து நாங்களும் முன்னெடுத்து சென்றதனால்-தான் இங்கு சிங்கப்பூரில் சாதிக் கொடுமை இல்லாமல் மாற்றம் பெற்றுள்ளது என்ற செய்தியை கூறி விருது கொடுத்த பெரியார் சமூக சேவை மன்றத்துக்கு நன்றி கூறினார். பெரியார் பெருந்தொண்டர் விருது பெற்ற கலைச்செம்மல் திரு.ச.வரதன் அவர்கள் தன்னுடைய ஏற்புரையில் பேசும் போது பதின்ம வயதில் அய்யாவின் (பெரியார்) தத்துவங்கள் என் இதயத்தில் பதிந்தது. 
அது பசு மரத்தில் அடித்த ஆணி போன்று இன்று வரையும் அப்படியே இருக் கின்றது. அதிலே நடைபோட்டு கொண்டு இருக்கிறேன். பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி, நடிகவேள் எம்.ஆர்.ராதா இவர்கள் அய்யாவின் தத்துவங்களை நாடக மேடையின் வழியாக பரப்பிக்கொண்டு இருந்தார்கள். அதே அடிப்படையில் நான் 1955ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பகுத்தறிவு நாடக மன்றம் என்று தோற்றுவித்து. அதில் பகுத்தறிவு கொள்கை உள்ள நாடகங்களை நடத்தி வந்தேன். அந்த காலகட்டத்தில் பகுத்தறிவு என்று சொன்னாலே பலர் விழித்து பார்க் கின்ற காலம்.
பகுத்தறிவு நாடக மன்றமா? என்று கேட்பார்கள். அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து    Rational Dramatic Society என்று கூறும் போது. மற்ற இனத்தவர்கள்Is this rational or National?
என்று கேட் பார்கள். நாங்கள் Rational என்று சொல்லி நாடகங்களை நடத்தி வந்திருக்கின் றோம். பல்லாண்டு நாடகம் நடத்திய ஒரு சேவைக்காக நமது அரசாங்கம் 1984 ஆம் ஆண்டு எனக்கு கலாச்சார விருது அளித்து சிறப்பித்தது. அது என்னுடைய நாடகத் தொண்டுக்கு கிடைத்த பரிசு. அன்று மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். இன்று எழுபது ஆண்டு காலமாக என் இதயத்தில் ஒட்டி கொண்டிருக்கின்ற அய்யாவின் தத்து வத்திற்கு அதன் பாதையில் நடந்து செல்வதற்கு இன்று எனக்கு "பெரியார் பெருந்தொண்டர் விருது" அளித்துள்ளார் கள் என்று கூறி நன்றி சொன்னார்.
சிறப்புரை
சிறப்புரையாற்றிய தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் பெரியார் சமூக சேவை மன்றத்தின் 10 ஆம் ஆண்டு விழாவையும், சிங்கப்பூ ரின் பொன்விழாவும் சிறப்பாக நடைபெறுவதை குறிப்பிட்டு மகிழ்ச்சி தெரிவித்து  நவீன சிங்கப்பூருக்கு அடித்தளமிட்ட திரு லீ குவான் இயூ அவர்களை போற்றி பாராட்டி தன் உரையை தொடங்கினார். மன்றத்தின் 10 ஆண்டு விழாவை குறிப்பிடும் போது, அதற்கு முன்பு இருந்த சிங்கப்பூர் முன்னோடிகள் பெரியார் தொண்டர்கள் உ.இராமசாமி (நாடார்), அ.சி.சுப்பையா, தமிழவேள் கோ.சாரங்கபாணி, நடராசன், சு.தெ. மூர்த்தி, முருகு.சீனிவாசன், தி.நாகரெத்தினம் ஆகியோர் களின் உழைப்பினால் தொண்டினால் பெரியார் பெயரில் இங்கு மன்றம் உருவாக காரணமாக இருந்துள்ளது. அவர்கள்தான் தந்தை பெரியாரை சிங்கப்பூரில் வரவேற்று பிரச்சாரம் செய்ய காரணமாக இருந்தவர்கள். அதன் பின்பு ஏற்பட்ட மாற்றங்கள் தான் தமிழர்களை சிங்கப்பூரில் நல்ல நிலைக்கு முன்னேற வழிவகுத்தது என்று கூறினார். 
அதனை சுருக்கமாக விளக்கிடும் வகையில் பெரியாரின் 1929 வருகையும் அப்போது தொழிலாளி களாக, சாதிக் கொடுமைகளுடன், மூடப்பழக்கங்களுடன் வாழ்ந்த தமிழர்களின் நிலையை மாற்றிட தொடங்கப்பட்ட தமிழர் சீர்த்திருத்த சங்கம் வரலாற்றையும் குறிப்பிட்டார். பெரியாரின் வருகைக்கு பின் தொடங் கப்பட்ட தமிழ் பள்ளிகளையும் பெரியார் பெயரிலே இயங்கிய பள்ளிகளையும் எடுத்துக்காட்டினார். மீண்டும் 1954-இல் பெரியார் சிங்கப்பூர் வரும்போது அவர் தமிழர்களிடம் கண்ட மாற்றத்தையும் முன்னேற்றத் தையும் கூறினார். குடியரசு இதழின் மூலம் ஏற்பட்ட சீர்திருத்தமும் அதன் விளைவாக பெரியாரின் சுயமரியாதைத் திருமணம் முதன் முதலில் சிங்கப்பூரில் 1928-ல் நடைபெற்றதையும் ஆதாரத் துடன் படித்து காட்டினார்.
"தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" என்ற பழமொழியை கூற காரணமே தமிழர்கள் அடிமைகளாக முதுகெலும்பு இல்லாதவராக முன்பு வாழக்கூடிய நிலையிருந்த காரணத் தால் தான் அப்படி ஒரு பழமொழியே உருவாகிற்று என்ற விளக்கம் வந்தி ருந்தவர்களை புதிய கோணத்தில் சிந் திக்க வைத்தது. அந்த காலகட்டத்தில் தான் பெரியார் தமிழர்களுக்கு முது கெலும்புடன் தலை நிமிர துணிச்சலை ஊட்டியவர், தன்மானத்தை போற் றியவர் என்று கூறினார். இறந்தபின்பு கொடுக்கும் உறுப்பு கொடையை விட  உயிருடன் இருக்கும் போதே தந்தை பெரியார் கொடுத்த முதுகெலும்பு என்ற உறுப்பு கொடை தமிழர்கள் தலை நிமிர்ந்து நடக்க காரணமாக அமைந்தது என்ற கருத்தை இக்காலத் திற்கு ஏற்ற நடையில் கூறியது சிறப்பு.  
பெரியார் என்பவர் தனிமனிதர் அல்ல அவர் ஒரு நிறுவனம், அவர் ஒரு மாமருந்து அவை உலகத்துக்கே பொருந்தும் எங்கெல்லாம் மனிதர் களுக்கு சுயமரியாதை இழுக்கு வரு கிறதோ அப்போது எல்லாம் பெரியார் என்ற மாமருந்து தேவைப்படும் என்று கூறி பெரியார் உலகுக்கே உரியார் என்று அனைவருக்கும் புரியும் வண் ணம் ரசிக்கும்படி சுமார் 50 நிமி டங்கள் பல செய்திகளுடன் உரை யாற்றினார்.  இறுதியாக பெரியார் சமூக சேவை மன்றத்தின் உறுப்பினர் ச.மனோகர் அவர்களின் நன்றியுரையுடன் விழா நிறைவுற்றது. அவசர அலுவல் காரணமாக இரா.தினகரன் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள இயலவில்லை.
மன்றத்தின் துணைத் தலைவர் சு.தெ.மதியரசன், பொருளாளர் ந.மாறன், மலையரசி, இளையமதி, சவுந்தர் ராஜ், இராஜராஜன், கவிதாமாறன், குந்தவி, வானதி, வளவன், கவுதமன்,  மற்ற உறுப்பினர்களின் உதவியுடன் செயலாளர் க.பூபாலன் விழாவை ஒருங்கிணைத்தார்.
முன்னதாக மன்றத்தின் உறுப்பினர்கள் தமிழ் செல்வியும், பழனியும் பெரியார் விருது பெற்ற ஜே.எம் சாலி பற்றிய குறிப்புகளையும், பெரியார் பெருந் தொண்டர் விருதுபெற்ற.ச.வரதன், க.ஆ.நாகராசன் பற்றிய குறிப்புகளையும் சிறப்பாக வரிசைப்படுத்தி வாசித்தார்கள்.
------------------

எங்கள் பெரியார்
மூடிமறைத்து பேச அறியார்
மூட பழக்கம் எதுவும் தெரியார்
நூலார் திமிர் அறுத்த வாளார்
நூற்றாண்டு கடந்து வாழும் வரலாறார்
நரியார் தோலுரித்த புலியார்
நால்வகை வர்ணம் கலைத்த கரியார்
எளிதாய் கடந்து செல்லும் வழியார்
ஏதிலியார்க்கு வெளிச்சம் தந்த விழியார்
தெளியார் அறிவு நெய்த தறியார்
தெளிந்தோருக்கு தெளிவான குறியார்
உலக தமிழருக்கு உரியார்
உணர்ந்தால் விளங்கும் மொழியார்
மனு வேதம் கொளுத்திய திரியார்
மாதருக்கு தெளிவான ஒலியார்
தேடி படிக்க சிறந்த நெறியார் - தூய
தாடி முளைத்த தந்தை பெரியார்.
- விழாவின் தொடக்கத்தில் கவிமதி எழுதிய கவிதையை நிகழ்ச்சி நெறியாளர் இலக்கியா செல்வராஜ் வாசித்தார்.
------------------
சிறப்பு அம்சங்கள்
  • நாடாளுமன்ற உறுப்பினர் திரு. விக்ரம்நாயர் அவர்கள் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற தமிழ் மொழிப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர் களுக்கு  பரிசளித்து பாராட்டினார்.
  • வரலாற்று செய்தி கள் கொண்ட விழா மலர் "பெரியார் பணி 2015"-யை திரு. விக்ரம்நாயர் வெளியிட்டார். வந்திருந்த அனை வரும் நன்கொடை அளித்து விழா மலரை பெற்று சென்றார்கள்.
  • பெரியார் களஞ்சியம் திருக்குறள் வள்ளுவர் நூலை சிங்கப்பூர் சிம் பல்கலைகழக பேராசிரியர் முனைவர் சுப.திண்ணப்பன் அவர்கள் வெளியிட்டார்கள்.
  • பெரியார் விருது, மற்றும் பெரியார் பெருந்தொண்டர் விருது பெற்றவர்களுக்கு குஞ்சம்மாள்  முருகு. சீனிவாசன் குடும்பத்தின் சார்பாக அன்பளிப்பினை அவர்களின் மகன் திரு.மலையமாறன், மகள்கள் திருமதி குறிஞ்சிச்செல்வி, திருமதி, மலையரசி வழங்கினார்கள்.
  • பெரியாரின் வரலாற்று புகைப்படங்களை கண் காட்சியாக வைத்திருந்ததை நிகழ்ச்சி தொடங்கும் முன்பு வந்திருந்தவர்கள் பார்த்தார்கள். விழா தொடங்கியவுடன் மாணவிகள் இனியநிலா-பவதாரணி இணைந்து  தமிழ் வாழ்த்து பாடலை சிறப்பாக பாடினார்கள்.
  • பெரியாரை பற்றியும், பெரியார் சமூக சேவை மன்றத்தின் பணிகளை பற்றியும் விழா தொடங்கும் முன்பு 10 நிமிட Presentation Slide video    காண் பிக்கப்பட்டது.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திரு.ஜெ.எம்.சாலி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார்.  சிறப்பு விருந்தினர்  திரு.விக்ரம் நாயர் பெரியார் விருது வழங்குகிறார்.
திரு.விக்ரம் நாயர் அவர்கள் க.ஆ.நாகராசனுக்கும், ச.வரதனுக்கும் பொன்னாடை அணிவித்தார். ஆசிரியர் கி.வீரமணி பெரியார் பெருந்தொண்டர் விருதை இருவருக்கும் வழங்குகிறார்.
பெரியார் பணி 2015  விழா மலரை நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் வெளியிட தமிழர் தலைவர் ஆசிரியர், தொழிலதிபர் ஜோதி மாணிக்கவாசகம் மாதவி இலக்கிய மன்றத்தின் தலைவர் என்.ஆர்.கோவிந்தன்  ஆகியோர் பெற்றுக் கொள்கிறார்கள்.
பெரியார் களஞ்சியம் திருக்குறள் - வள்ளுவர் நூலை பேராசிரியர் முனைவர்.சுப.திண்ணப்பன் வெளியிட விரிவுரையாளர் ரெத்தினக்குமார், தேசிய நூலக வாரிய அதிகாரி புஷ்பலதா, தமிழ்மொழி பண்பாட்டு கழகத்தின் தலைவர் ஹரிகிருஷ்ணன் பெற்றுக்கொள்கிறார்கள்.
- செய்தி: க.பூபாலன், சிங்கப்பூர்.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...