Thursday, October 15, 2015

மதச்சார்பின்மை நோயாம் கூறுகிறது ஆர்.எஸ்.எஸ்


புதுடில்லி, அக்.14- மதச்சார்பின்மை என்னும் நோயால் பாதிக்கப்பட்ட எழுத்தாளர்களே விருது களை திரும்ப அளிப்பதாக பா.ஜ.க.வின் சித்தாந்த வழிகாட்டியான ஆர். எஸ்.எஸ் தெரிவித்துள்ளது.
மாட்டிறைச்சி தடை செய்யப்பட்ட உத்தரப் பிரதேச மாநிலத்தின் தாத்ரி கிராமத்தில், மாட் டிறைச்சி வைத்திருப்பதாக வதந்தி பரவியதால் அக் லாக் என்பவர் அவரது வீட்டில் இருந்த தையல் இயந்திரத்தால் தாக்கப் பட்டு ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட் டார். கடந்த ஒரு வருடத்திற்குள்ளாகவே தபோல்கர், பன்சாரே, கல்புர்கி என்று சிந்தனை யாளர்கள், பகுத்தறிவாளர் கள் படுகொலை செய்யப் பட்டுள்ளனர்.
 இது போன்ற, கருத்து சுதந்திரத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் எதிரான தொடர் அச்சுறுத் தல்களுக்கு, எதிர்ப்பு தெரி விக்கும் விதமாக நயந்தாரா சேகல் தொடங்கி இது வரை 23 எழுத்தாளர்கள் தங்கள் சாகித்ய அகாடமி விருதுகளை சாகித்ய அகா டமிக்கு திருப்பியளிப்பதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் விருதை திருப்பி அனுப்பும் இவர் களுக்கெல்லாம் மதச் சார்பின்மை என்னும் நோய் பிடித்து விட்டதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அதன் பஞ்சன்யா பத்திரிக் கையின் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் இவர்களுக்கு விருதளித்த காங்கிரஸ் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் பங்கு கொண்டது என்பதை சுட் டிக்காட்டிய ஆர்.எஸ்.எஸ் இந்த பேனா கலைஞர்கள் நமது இந்து ராஜ்ஜியத் திற்கு எதிரானவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...