Friday, July 10, 2015

ஆர்.எஸ்.எஸ்.இன் சமஸ்கிருத அரசியல்



- குடந்தை கருணா

பாரதீய சிக்சன் மண்டல் எனும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உள் பிரிவு, சமஸ்கிருதம் கட்டாயம் கற்க வேண்டும் அல்லதுபிற செம் மொழிகளான அராபிக், பர்சியன், லத்தீன், கிரேக்கம் ஆகிய ஒரு மொழியைக் கற்கவேண்டும். இதற் கான மொழிக் கொள்கை உரு வாக்கப்பட வேண்டும் என அர சுக்கு வேண்டுகோள் விடுத்துள் ளது. ஆர்.எஸ்.எஸ். மொழியில் வேண்டுகோள் என்பது கட்டளை என்பதாக புரிந்து கொள்ள வேண்டும். இந்திய நாட்டில் வழக்கில் இல்லாத ஒரு மொழி சமஸ்கிருதம். எந்த மாநிலத்திலும் பேசப்படாத ஒரு மொழியை, இந்த நாட்டில் உள்ள 125 கோடி மக்களும் கற்கவேண்டும். அப்போது தான் நமது கலாச்சாரம் பாதுகாக் கப்படும் என்கிறது ஆர்.எஸ்.எஸ். இதில் சமஸ்கிருதத்தோடு சேர்த்து பேசப்படும் பிற செம் மொழிகளான அராபிக், லத்தீன், கிரேக்க, பர்சியன் மொழியை கற்க வேண்டும் என்கிறார்கள். இதையும் இந்த நாட்டில் எத்தனை பேர் பேசுகிறார்கள்;

 எந்தெந்த மாநிலத் தில் பேசுகிறார்கள் என்று தெரிய வில்லை. இது நாளும் ஹிந்திதான் தேசிய மொழி என்று கூறி வந்த பார்ப்பனக் கூட்டம், இப்போது, ஹிந்தி மொழி படிக்கவேண்டிய கட்டாயம் இல்லை என்கிறது. ஹிந்தி கற் காததால் நாங்கள் பாதிக்கப்பட் டோம் என இங்கே கூறும் அரை வேக்காடுகள், ஆர்.எஸ்.எஸ்.இன் இந்த கருத்துக்கு என்ன விளக்கம் வைத்துள்ளார்கள் எனத் தெரிய வில்லை. இதெல்லாம் கிடக்கட்டும். தமிழ் மொழியை செம்மொழி என அறிவித்து பல ஆண்டுகள் ஆயிற்று. ஏழு கோடிக்கும் மேல் இந்தியாவில் தமிழ்மொழியை பேசுகிறார்கள். சமஸ்கிருதம் அல்லது பிற செம்மொழிகள் என்று பட்டியல் இட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, தமிழ் மொழியை பற்றி ஒன்றும் சொல்ல வில்லையே? அதுவும் செம் மொழிதானே? ஹிந்தித் திணிப்பை எதிர்த்து பெரியார் போராடியபோது, ஹிந்தியை வெறும் ஒரு மொழித் திணிப்பாக மட்டும் பார்க்க வில்லை; மாறாக, ஆரிய மொழி யான சமஸ்கிருதத்தை நுழைப் பதற்கு விடப்படும் முன்னோட்டம் என்பதாகத்தான், ஹிந்தித் திணிப்பை கடுமையாக எதிர்த்தார்.

இப்போதும் கூட, ஆர்.எஸ்.எஸ். ஆரிய மொழியான சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்படவேண்டும் என்று கூறும் அதே நேரத்தில், அதற்கு மாற்றாக, அரசியல் அமைப்பில் கூறப்பட்டுள்ள எந்த இந்திய மொழியையும் கூறாமல், அராபிக், பர்சியன், லத்தீன் போன்ற பிற அன்னிய  நாட்டு மொழி களைத் தான் துணைக்குச் சேர்க் கிறது. லண்டனில் 1746- இல் பிறந்து, சட்டம் பயின்று, கல் கத்தாவின் அன்றைய உச்சநீதிமன்ற நீதிபதியாக 1784- இல் பதவி ஏற்ற சர் வில்லியம் ஜோன்ஸ், சட்டம் மட்டுமல்லாது, லத்தீன், கிரேக்கம், ஹீப்ரூ, அராபிக், பர்சியன் போன்ற பல மொழிகளைக் கற்றவர். இந் தியாவில் சமஸ்கிருத மொழியைக் கற்று ஆராய்ச்சி செய்தவர். அவர் 1794 இ-ல் மறைவதற்கு முன், சீன மொழி உள்பட 28 மொழிகளைக் கற்றவர். கல்கத்தாவில், 1784- இல் ஏசி யாட்டிக் சொசைட்டி ஆப் பெங்கால் எனும் அமைப்பை தோற்றுவித்தவர்: மனுஸ்மிருதி, காளிதாசனின் படைப்புகளை மேலை நாடுகள் தெரிந்து கொள்ள மொழி பெயர்த்தவர். இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரம் பற்றிய பல ஆராய்ச்சி கட்டுரை கள், அவர் மறைவுக்குப் பின் 1807- இல் அய்ரோப்பாவில் பதிமூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டது. அய்ரோப்பிய செம்மொழிகளான லத்தீன், கிரேக்கம், பர்சியன் ஆகிய மொழிகள் எதன் அடிப்படையில் உருவானதோ, அந்த ஆதாரத்தைக் கொண்டு உருவான மொழிதான் சமஸ்கிருதம் என்ற கருத்தை, 1786- இல் தனது மொழி பற்றிய ஆராய்ச்சி குறித்து பேசுகையில், சர் வில்லியம் ஜோன்ஸ் சொல்கிறார். இப்போது புரிகிறதா? செம் மொழிகள் பட்டியலில் உள்ள சமஸ்கிருதத்தைப் படி; இல்லை யேல் பிற செம்மொழிகளான லத்தீன், கிரேக்கம், பர்சியன் போன்ற மொழிகளைப் படி என்று கூறும் ஆர்.எஸ்.எஸ்., நம் திராவிட மொழியான செம்மொழி தமிழைப் பற்றி ஏன் குறிப்பிடவில்லை எனப் புரிகிறதா?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...