Wednesday, July 1, 2015

பாஜக ஆட்சிக்கு எதிராக 8 மாதங்களில் பதவி விலகிய 4 கல்வியாளர்கள்

இந்திய வரலாற்று ஆய்வுக்குழுவின் உறுப்பினர் செயலாளர், மூத்த வரலாற்றாசிரியர் கோபிநாத் ரவீந்திரன் கடந்த வாரத்தில் பதவி விலகி உள்ளார். இதற்கு முன்பாக மத்திய அரசின் உயர்பதவிகளிலிருந்து மூவர் பதவி விலகியுள்ள நிலையில் நான்காவதாக வரலாற்றுப்பேராசிரியர் கோபிநாத் ரவீந்திரன் விலகியுள்ளார்.
கோபிநாத் ரவீந்திரன்
இந்திய வர லாற்று ஆய்வுக்குழு வின் தலைவராக ஒய்.சுதர்சன ராவ் மற்றும் ஆய்வுக் குழுவின் உறுப் பினர்கள் காவிமயச் சிந்தனையுடன் உள்ளவர்களாக இருப்பதாக கோபிநாத் ரவீந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த வாரத்தில் ஆய்வுக்குழுவின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தின் பதி வேட்டில் கோபிநாத் ரவீந்திரன் தம் முடைய கருத்தைப் பதிவு செய்யாததைக் கண்டித்து பதவி விலகி உள்ளார். பதவி விலகிய மற்றவர்களில் இருவர் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச் சகத்தைக் குறை கூறியுள்ளனர். மற்றும் ஒருவர் தம்முடைய பதவி விலகலுக்கு காரணமாக எதையும் குறிப்பிடவில்லை.
கோபிநாத் ரவீந்திரன் இந்திய வரலாற்று ஆய்வுக்குழுவின் உறுப்பினர் செயலாளர் பொறுப்பிலிருந்து கடந்த வாரத்தில் விலகியுள்ளார். இவர் கடந்த அய்க்கிய முற்போக்குக்கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் 2013ஆம் ஆண்டில் இந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டவர். பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றபிறகு இந்திய வரலாற்று ஆய்வுக்குழுவுக்குத் தலைவர் பொறுப்பில் ஆந்திரப்பிரதேசத் தைச் சேர்ந்த ஒய்.சுதர்சன ராவ் எனும் பிரகலத எல்லப்ப சுதர்சன ராவ் என்ப வரை நியமித்தது.  அவர் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்ட உடன் தம்முடைய இணையப்பக்கத்தில் (பிளாக்கில்) பழமையான இந்திய ஜாதீய முறையைப் புகழ்ந்து எழுதினார். அதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக பல்வேறு வகையிலான முரண்பாடுகள் அவரிடம் காணப்பட்டன.
இந்திய வரலாற்று ஆய்வுக்கழகம் நிறுவிய நாள் விழாவில் மார்ச்சில் உரையாற்றியபோது இந்துத்துவாவாதி யும், வேத விற்பன்னருமான டேவிட் பிராலி என்பவரின் கருத்தில் மாற்றுக் கருத்துக் கூறியமையால் பார்வையாளர் வரிசையில் இருந்தவர்களால்  இடை யூறு ஏற்படுத்தப்பட்டு தொடர்ந்து பேசமுடியாமல் தடுக்கப்பட்டார்.
அதேபோல், இந்தியாவின் வரலாற் றாசிரியர்களின் பெருமைமிகு பத்திரிகை யான இந்திய வரலாற்றியல் ஆய்வு இதழின் ஆசிரியர் குழு மற்றும் ஆலோ சனைக்குழுவை மாற்றி அமைப் பதற்கான இந்திய வரலாற்று ஆய்வுக் குழுவின் முடிவை கோபிநாத் ரவீந் திரன் ஏற்காமல் எதிர்த்தார். ரொமீலா தாப்பர், இர்பான் ஹபீப், சத்தீஷ் சந்திரா, ரிச்சர்ட் ஈட்டன் மற்றும் பி.ஆர்.தாம்லின்சன் ஆகிய வரலாற்றா சிரியர்கள் ஆசிரியர் குழுவின் உறுப் பினர்களாக இருக்கிறார்கள். சுதர்சன ராவுடன் மாறுபட்டுள்ள கோபிநாத் ரவீந்திரன் இந்திய வரலாற்று ஆய்வுக் குழுவில் காவிமயம் பெருமளவில் இழையோடிக்கொண்டு இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார். அவருடைய பதவி விலகலுக்கு மத்திய மனிதவளத் துறை அமைச்சகம் இதுவரை எந்தவிதக் கருத்தும் தெரிவிக்காமல் உள்ளது.
பர்வீன் சின்கிளார்
என்சிஇஆர்டி பர்வீன் சின்கிளார் இயக்குநர் பொறுப் பிலிருந்து கடந்த ஆண்டு (2014) அக் டோபர் மாதத்தில் விலகிவிட்டார்.
மத்திய மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சரான ஸ்மிரிதி இரானியின் நேரடிப் பார்வையில் இருக்கின்ற உயர் பதவியில் இருந்தவரான பர்வீன் சின்கிளார்தான் முதல்முறையாக பணியிலிருந்து விலகியவர் ஆவார். 2012ஆம் ஆண்டில் அந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்ட அவருக்கு அய்ந்து ஆண்டுகள் பணிக்காலம் இருந்த போதி லும், பாஜக தலைமையிலான ஆட்சி மாற்றத்தின் காரணமாக கல்வித் துறையில் வெகுவாக முறைகேடுகள் தலைதூக்கத் தொடங்கின. துறையின் நிர்வாக நடைமுறைகளில்  பாடப் புத்த கங்கள் அச்சடிப்பதற்கான பொருள் களை வாங்குவது உள்ளிட்ட எதிலும் எவ்வித நடைமுறைகளையும் பின்பற் றாமல், அதற்கான விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தது. இதுகுறித்து அவர் கூறும்போது, என்சிஇஆர்டியில் எதைச் செய்யக் கூடாதோ, அதையெல்லாம் செய்வதற் காக அமைச்சகத்தின் சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டுவந்தது. எதிர்ப்புகள் வரும்வகையிலேயே அமைச்சகத்தின் செயல்பாடுகள் அமைந்துவருகின்ற நிலை உள்ளது. எதற்கெல்லாம் முக்கி யத்துவம் தேவைப்படுகிறதோ, எதற் கெல்லாம் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமோ அவைகளுக்கான அனு மதியை அளிக்க மறுத்து வருகிறது அமைச்சகம் என்றார்.
பர்வீன் சின்கிளார் பதவி விலகலால் என்சிஇஆர்டி ஆய்வுக்குழு மற்றும் தேர்வுக்குழுவுக்கு புதிதாக இயக்குநரை நியமிக்க வேண்டிய நிலையில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை தள்ளப் பட்டுள்ளது. பர்வீன் கிளாமர் 2014 அக்டோபரில் பதவி விலகியதுமுதல் இன்றுவரையிலும் அந்த இடத்தை நிரப்பாமல்தான் உள்ளது.
ரகுநாத் கே. ஷெவ்காங்கர்
டில்லியில் உள்ள அய்.அய்.டி. நிறுவனத்தின் இயக்குநர் ரகுநாத் கே. ஷெவ்காங்கர், அந்தப் பொறுப் பிலிருந்து கடந்த ஆண்டு டிசம்பரில் விலகியுள்ளார். அவர் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் இருக்கும்போதே பதவியிலிருந்து விலகி உள்ளார். பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியம் சாமி என்பவர் 1972ஆம் ஆண்டு முதல் 1991ஆம் ஆண்டு வரை டில்லி அய்.அய்.டி.யின் பேராசிரியராகப் பணியாற்றியதாகக் கூறிஅவருக்கு அளிக் கப்பட வேண்டிய ஊதியப் பாக்கித் தொகை 70 இலட்சம் ரூபாய் என்றும் அதை உடனே வழங்கிட வேண்டும் என்றும் அதிகமான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாலேயே, அந்தத் தொகையை அளிக்க வேண்டும் இல்லையென்றால் பதவியிலிருந்து விலகிட வேண்டும் என அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாலேயே ஷெவ்காங்கர் தம்முடைய பணியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே பதவி விலக நேரிட்டுள்ளது. அதேநேரத்தில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் அமைச்சகமோ சுப்பிரமணிய சாமியின் கோரிக்கையை ஏற்க மறுத் துள்ளது. அய்.அய்.டி. டில்லி சார்பில் அந்த குறிப்பிட்ட காலத்தில் சுப்பிர மணிய சாமியின் வருவாய்குறித்த எவ் வித தகவலையும் அவர் அளிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி அவருக்கு ஊதியப் பாக்கி இருப்பதாகக் கூறப் படுவதை அளிக்க மறுத்துவிட்டது.
மொஷியஸ் நாட்டில் அமைக் கப்பட்டுள்ள பன்னாட்டு தொழில் நுட்ப ஆராய்ச்சி கல்வி நிறுவனத்துடன் புரிந்துணர்வு போடப்பட்ட விவகாரத் தில் அய்.அய்.டி.யின் விதிகளுக்குப் புறம்பாக நடந்துகொண்டதாகவும் ஷெவ்காங்கர்மீது குற்றச்சாற்றை அய்.அய்.டி.டில்லி சுமத்தி உள்ளது. இதில் அய்.அய்.டி. டில்லி நிர்வாகம் எவ்வித தவறையும் இழைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
இறுதியாக ஷெவ்காங்கர் 11.6.2015 அன்று பணியிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் பதவி விலகலுக்கு அவர் எந்த காரணத்தையும் வெளிப்படையாகக் கூறவில்லை. அவரைத் தொடர்ந்து அவர் வகித்த பதவியில் இன்று வரை வேறு எவரும் நியமிக்கப்படவில்லை. அவருடைய பதவி விலகல்குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் குறிப்பிடுகையில், சுப்பிரமணிய சாமியின் வேண்டுகோளை அய்.அய்.டி. டில்லிக்கு அனுப்பவும் இல்லை, அவர் கோரியுள்ள ஊதியப் பாக்கித் தொகை என்பதை அளிக்க வேண்டும் என்றும் எவ்வித உத்தரவையும் அளிக்கவே இல்லை, அந்தக் கோரிக்கையை நிதித் துறை அமைச்சகம் மற்றும்  கணக்குத் துறையினரே கவனிக்கவேண்டியதாகும் என்றும் அமைச்சகத்தின் சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனில் ககோட்கர்
அய்.அய்.டி. மும்பையின் ஆட்சி மன்றக் குழுத்தலை வரான அனில் ககோட்கா அய். அய்.டி.யின் நிலைக் குழு மற்றும் தேர் வுக்குழுத் தலைவ ராகவும் பொறுப்பில் இருந்து வந்தவர்.
கடந்த மார்ச்சு மாதத்தில் மும் பையில் உள்ள அய்.அய்.டி.யின் இயக்குநர் பதவி நியமனம் தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துடன் ஏற்பட்ட முரண் பாடுகளால் தாம் வகித்த அனைத்து பதவியிலிருந்தும் விலகினார். மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச் சர் ஸ்மிரிதி இரானி அவரின் பதவி விலகலைத் திரும்பபப் பெறுமாறு கேட்டுக்கொண்டார். அவருடைய பதவிக்காலம் மே மாதம்வரை இருந்த போதிலும் மார்ச் மாதத்திலேயே விலகினார். அய்.அய்.டி.ரோபூர் இயக்குநர் நியமனத்தின்போது 22.3.2015 அன்று நடைபெற்ற நேர்காணலில் 37 பேர் பங்கேற்றனர். அந்த நேர்காணல் முடிவுகள் நீக்கப்பட்டது. அதனால் தேர்வுக்குழு எந்த முடிவையும் எடுக்க முடியாமல் போனது. இதுகுறித்து அனில் ககோட்கர் கூறுகையில்   முக்கியமான செயல்களில் மிகவும் அலட்சியமாக அமைச்சகம் செயல் பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார். தற்பொழுது அய்.அய்.டி. இயக்குநர் களைத் தேர்வு செய்வது என்பது 6 மணி முதல் 7 மணிநேரத்தில் லாட் டரியை நடத்துவதுபோல் இயக்குநர்கள் தேர்வு செய்யப்படும் நிலை உள்ளது என்று குறிப்பிட்டார்.
அவர் பதவி விலகலுக்குப்பின்னர் அவருடைய பணியிடம் இன்றுவரை நிரப்பப்படாமல் உள்ளது.
அமைச்சகத்தின் சார்பில் கடந்த ஏப்ரலில் அமைச்சர் ஸ்மிரிதி இரானி இதுகுறித்து குறிப்பிடும்போது, ககோட் கர் கண்ட நேர்காணல் குழு உரையா டல்கள் வீடியோப்பதிவுகள் என்னிடம் உள்ளன. அந்த நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும் அடுத்த சுற்றில் தேர்வு செய்யப்படு வார்கள். தவறான அறிக்கை ஏதும் அச்சாகிவிடக்கூடாது என அமைச்சரே வீடியோ பதிவுடன் ஆதாரத்துடன் இருப்பதை எண்ணிப்பாருங்கள் என்று ஸ்மிரிதி இரானி குறிப்பிட்டார்.
_ இந்தியன் எக்ஸ்பிரஸ் 24.6.2015

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...