குஜராத்தில் கடந்த சில மாதங்களாக
தொடர்ந்து முஸ்லீம்களுக்கு எதிரான மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன. இதன்
காரணமாக இந்துக்கள் வாழும் பகுதியில் உள்ள முஸ்லீம்கள் தங்களது வீட்டை
விற்றுவிட்டு வேறு இடங்களுக்கு இடம் பெயர ஆரம்பித்துள்ளனர்.
மத்தியில் மோடி அரசு வந்ததில் இருந்து
சிறு பான்மை இனமக்கள்மீதான தாக்குதல்களும், மிரட் டல்களும் நாடு முழுவதும்
தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கின்றன, முக்கியமாக இந்து அமைப்புகள் நேரடியாக
தெருக்களில் இறங்கி முஸ்லீம் வியாபார தலங்களைத் தாக்குவதும், முஸ்லீம்கள்
பணிபுரியும் இடங்களில் சென்று அவர்களை மிரட்டுவதும் தொடர்ந்து நடந்து
கொண்டு இருக்கின்றன.
ஆங்கில பத்திரிகையான இந்தியன் எக்ஸ்பிரஸ்
வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் கடந்த சில மாதங் களில் சுமார் 700
குடும்பங்கள் தங்களது வீடுகளை விற்றுவிட்டுச் சென்று விட்டதாகத்
தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் பாவ் நகரில் தொழிலதிபர் அலி அஸ்கர்
என்பவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பங்களா வீடு ஒன்றை வாங்கியிருந்தார்.
இந்த நிலை யில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு பிரவீன் தொகாடியா
அந்தப்பகுதிக்குச் சென்று பொதுக்கூட்ட மேடையில், இந்தப் பகுதிக்கு
முஸ்லீம்கள் வர தடைசெய்யப்பட வேண்டும். இங்கு சில முஸ்லீம்கள் பங்களாக்களை
வாங்கி, குடியிருக்கிறார்கள். இவர்கள் வேண்டுமென்றால் பாகிஸ்தானுக்குச்
சென்று பங்களா வாங்கி குடியிருக்கட்டும், இங்கே இருக்கத் தேவையில்லை,
ஆகையால் அவர்களின் வீட்டின் வெளியே காவிக்கொடி ஏற்றுங்கள், அவர்களுடன்
பேச்சுவார்த்தை வைக்க வேண்டாம், இந்துக்களின் கடைக்குச் சாமான் வாங்க
வந்தால் அவர்களை விரட்டுங்கள் என்று பேசியிருந்தார். இந்த பேச்சிற்காக
அவர்மீது முதல் குற்ற அறிக்கை தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
இந்துத்துவ சக்திகளின் தொடர் மிரட்டல்
காரண மாக அலிஅஸ்கர் தன்னுடைய பங்களாவை விற்று விட்டு வேறுபகுதிக்குச்
சென்றுவிட்டார். இவ்விவகாரம் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ்
குறிப்பிட்டுள்ளதாவது: ஜனவரி மாதம் அலி அஸ்கர் தன்னுடைய பங்களாவை விற்க
வேண்டிய நிர்ப்பந்தத் திற்கு ஆளானார், தினசரி அவரது பங்களாவின் முன்பு சமூக
விரோதிகள் கேவலமான முறையில் நடந்து கொள்கின்றனர்.
அவர் பங்களா சுவரில் தகாத வார்த் தைகளை
எழுதிச் செல்கின்றனர். மேலும் மறைமுகமாக நகராட்சி நிர்வாகத்தில் உள்ள சிலர்
அந்தப் பங்களா விற்கு செல்லும் மின்சாரம் மற்றும் தண்ணீர் போன்ற
அத்தியாவசிய தேவைகளைத் தடுத்து வருகின்றனர். இது குறித்து புகார் கொடுக்கச்
சென்றபோது பங் களாவைக் காலி செய்து விட்டு வேறு இடத்திற்கு போய் விடச்
சொல்லுங்கள் என்று நேரடியாகவே காவல்துறை யிடம் உள்ளூர் அரசு நிர்வாகமும்
கூறியதால் வேறு வழியின்றி அவர் பங்களாவை விற்கும் நிலைக்கு ஆளானார்.
இந்த நிலையில் பூமதி அசோசியேசன் என்ற
நிறுவனம் அவரது பங்களாவை வாங்கியுள்ளது. இது உள்ளூர் இந்து அமைப்பின்
தலைவர் ஒருவரின் நிறுவனமாகும், இந்தப் பங்களா மற்றும் அருகில் உள்ள பல்வேறு
முஸ்லீம்களின் வீடுகள் தொடர்ந்து விற்றுவிட்டு வேறு இடங்களுக்குச்
செல்கின்றனர். இவர்களை விரட்டுவதில் அந்த உள்ளூர் இந்து அமைப்பின் தலைவர்
முனைப்புக் காட்டி வருகிறார். அதே நேரத்தில் முஸ்லீம்களின் வீடுகளையும்
அவரே தனது பினாமி பெயரில் வாங்கிவருகிறார். என்று அந்த பத்திரிகையில்
எழுதப்பட்டுள்ளது.
இந்தியா இந்துக்களின் நாடு; இந்தியாவில்
வாழ் வோர் அனைவரும் இந்துக்களே என்று ஆர்.எஸ்.எஸ். தலைவரே கூறுகிறார்.
முஸ்லிம்கள் கிருஷ்ணனை வணங்க வேண்டும் என்றும் கிறிஸ்தவர்கள் ராமனை வணங்க
வேண்டும் என்றெல்லாம் மனம் போன போக்கில் உளறித் தள்ளுகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் வாழ்வு - கேள்விக்குறியாகி விட்டது.
முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடுகளில்
இந்தி யர்கள் வேலை வாய்ப்பைத் தேடிச் சென்று அங்கே தங்களின் வாழ்க்கைப்
படகை ஓட்டி வருகின்றனர். இந்தியாவில் முஸ்லிம்களுக்கு அழுத்தம் கொடுத்தால்,
அதன் விளைவு வெளிநாடுகளில் வாழும் இந்தியர் களின் நிலை என்னாவாகும் என்று
ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டாமா?
இந்துத்துவா வெறி இந்தியாவில் வாழும் மக்களுக்கு மட்டுமல்ல; வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கும் ஆபத்தானதே - எச்சரிக்கை!
வெறி குறிப்பிட்ட நேரத்தில் சுகமாகத்தானிருக்கும் - அதன் விளைவு பெரும் விலையைக் கொடுக்கக் கூடியதாகவே இருக்கும் என்பதுதான் வரலாறு!
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment