பெண்களில்
முதல் அய்.எப்.எஸ். அதிகாரி இந்தியாவின் வெளியுறவுத் துறை செயலாளராகவும்
இருந்தவர். அதுவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் (கருநாடகம்)
என்றால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம் - இந்தத் தகவல் சிலருக்குப்
புதிதாகக் கூட இருக்கக் கூடும்.
அவர்
பெயர் சி.பி. முத்தம்மா (1924-2009) 1949இல் இந்தியாவின் வெளியுறவுத் துறை
செயலாளராக இருந்த போது அவர் சந்தித்த சவால்கள் சாதாரணமான வையல்ல!
திருமணம்
செய்து கொள்ள வேண்டும் என்று அவர் நினைத்தபோது, சட்ட விதிகள் சல்லடம்
கட்டி எதிர் நிலையில் நின்றன. திரு மணம் செய்து கொள்ள வேண்டும் என்றால்
வெளி யுறவுத்துறை செயலாளர் பதவியில் இருக்கக் கூடா தாம்! பாரத மாதாவின்
மடியில் குடி கொண்டிருந்த விதிகளைப் பார்த்தீர்களா? அய்.எப்.எஸ். படித்து
வெளியுறவுத்துறை செயலாளராகவும் ஒளி விட்டவர் அல்லவா? விடுவாரா?
உச்சநீதிமன்றம் சென்றார்; நல்ல வாய்ப்பாக அந்த வழக்கை விசாரித்தவர் வி.ஆர்.
கிருஷ்ணஅய்யர்.
விதி எண் 8(2) தடைச் சுவர் எழுப்புவதைக் கண்ட நீதிபதி ஏளனமாகச் சிரித்தார்.
தனது
சிந்தனைக் கூட்டி லிருந்து சில அம்புகளை எடுத்து வீசினார். ஒரு பெண்
அதிகாரி திருமணத்துக்கு முன்னர் அரசின் அனு மதியைப் பெற வேண்டு மென்றால்,
ஓர் ஆண் அதிகாரியும் அத்தகைய அனுமதியைப் பெற வேண்டாமா!? தமது குடும்பப்
பொறுப்பு காரணமாக ஒரு பெண் தன் அலுவலகப் பணிகளைச் சரி வர செய்யாத நிலை
என்றால், அதே காரணம் ஓர் ஆணுக் கும் பொருந்த வேண்டாமா? என்று வினா தொடுத்த
நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய் யர் - அரசமைப்புச் சட்டத் தின் முரண்பாட்டையும்
ஒரு மொத்து மொத்தினார்.
இந்த விதி அரசியல் சாசனத்தின் 16ஆம் பிரிவுக்கு முரணானது என்பதையும் சுட்டிக் காட்டினார்.
பெண்கள்
பலவீனமான வர்கள் என்ற மனோ நிலை கொண்ட ஆணாதிக்கக் கலாச்சாரத்தின் தொடர்ச்சி
தான் இந்த பாகுபாடு சுதந்திரமும், நீதியும் - ஆணுக்கும் பெண்ணுக்கும்
பொதுவானதே! அரசியல் சாசனம் கூறும் சம நீதித் தத்துவத்திற்கு இந்த விதி
முறைகள் எதிரானவை என்றும் இடித்துக் கூறினார் நீதிபதி.
35 ஆண்டுகள் அரசு பணியில் சிறப்பாகப் பணி யாற்றி முத்திரை பொறித்தார் முத்தம்மா.
நீதிபதி
வி.ஆர். கிருஷ்ணய்யர் முன்னிலையில் இந்தவழக்குச் செல்லாமல், உச்சநீதிமன்ற
தலைமை நீதிபதியாகவி ருந்த ரெங்கநாத் மிஸ்ரா போன்றவர்களிடம் சென்றி ருந்தால்
என்னாகும்?
பெண்கள்
வீட்டு வேலை செய்வதில்தான் திறமையானவர்கள்; ஆண்களோடு போட்டிப் போட்டுக்
கொண்டு அரசுப் பணிகளுக்கு வர ஆசைப்படக் கூடாது என்று பிரம்ம குமாரிகள்
மாநாட்டில் பேசிய துண்டே! (8.11.1996)
- மயிலாடன்
குறிப்பு : முத்தம்மா அவர் களின் பிறந்த நாள் இந்நாள் (1924)
No comments:
Post a Comment