நிதி நெருக்கடியில் திண்டாடும் மத்திய அரசு கோயில் நிதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாமே!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
நிதி நெருக்கடி என்று கூறி, பல முக்கியத் துறைகளுக்கான நிதியை வெட்டும் மத்திய அரசு, கோயில்களில் குவிந்து கிடக்கும் நிதியை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தலாம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
பிரதமர் மோடி தலைமையில் உள்ள பா.ஜ.க.
(மத்திய) அரசு தனது நிதிப் பற்றாக்குறைக்காக நல்ல லாபம் தரும் - பொன்
முட்டை இடும் வாத்தைக் கொல்வது போன்று - பொதுத் துறை நிறுவனங்களின்
பங்குகளைத் தனியாருக்கு விற்பதில், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்
ஈடுபட்டு வருகிறது.
மக்களின் சுகாதாரத் திட்டத்திற்காக செலவு செய்வதில் 20 விழுக்காடு வெட்டு!
உயர் கல்வித் துறை வளர்ச்சிக்கான ஒதுக்கீட்டில் 3000 கோடி ரூபாய்க்கு மேல் வெட்டு.
உயர் கல்வித் துறை வளர்ச்சிக்கான ஒதுக்கீட்டில் 3000 கோடி ரூபாய்க்கு மேல் வெட்டு.
வரிமூலம் பறிக்கும் அரசு
பெட்ரோல், டீசல் (ஏழை விவசாயிகளுக்குப்
பாதிப்பு ஏற்படுத்தும் நிலையில்) உலகச் சந்தை விலை சரி பாதிக்கு மேல்
வீழ்ச்சி அடைந்தும், அதன் பயனை நுகருவோரான மக்களைச் சென்று அடையாமல்,
மத்திய அரசு வரி விதிப்பின் மூலம் இடையே பறித்துக் கொள்கிறது!
உரவிலையும் கூடவே விவசாயிகளின் தலையில்
விடிகிறது; சந்தைப் பொருளாதாரத்தின் கொள்ளை லாபக் குபேரர்கள் கொள்ளையடிக்க
ஏதுவாக கட்டுப்பாடுகளை நீக்கி கதவுகள் - திறந்து விடப்படும் கொடுமையும்
நாளும் வளர்ந்துவருகிறது!
மக்களைத் துன்புறுத்தும் இந்த மாய வளர்ச்சியின் உண்மைத் தன்மையை வாக்களித்தவர்கள் உணரத் தலைப்பட்டு வருகிறார்கள்!
கோயில்களில் குவிந்துள்ள நிதியைப் பயன்படுத்தலாமே!
நிதி ஆதாரம் தேடும் மத்திய அரசு, பல
லட்சம் கோடி ரூபாய்களை உள்ளடக்கிய கோயில்களான திருவனந்தபுரம் பத்மநாபசாமி
கோயில், குருவாயூரப்பன் கோயில், திருப்பதி ஏழுமலையான் கோயில் வருமானத்தில்
ஒரு கணிசமான தொகையை பெற்றுக் கொண்டு, அதற்குப் பதிலாக கடன்
பத்திரங்களாக்கி குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு - திருப்பிக்
கொடுக்கலாமே!
மக்கள் பணத்தை முழுமையாக மக்கள் நலத்திற்குச் செலவிடுவதில் என்ன தவறு?
திருப்பதி ஏழுமலையான் கோயில் பட்ஜெட்டைப் பாரீர்!
எடுத்துக்காட்டாக, கடவுள்களிலேயே அதிக
வருவாய் பெறும் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலின் வருமானம் 2014-2015 பற்றிய
ஒரு புள்ளி விவரம் இதோ:
அதன் பட்ஜெட் ரூ.2401 கோடி, ரூ.900 கோடி
உண்டியல் மூலம் வசூல்; வங்கியில் உள்ள டெபாசிட்டுகளுக்கான வட்டி மூலம்
வருவாய் 655 கோடி ரூபாய், பக்தர்களின் மொட்டை - மயிர்மூலம் ரூபாய் 190 கோடி
வருவாய், கட்டட வாடகை மூலம் ரூபாய் ஆண்டு ஒன்றுக்கு ரூ.108 கோடி -
வருவாய்.
செலவு விவரம் பாரீர்!
ஹிந்து தர்ம பிரச்சாரத்திற்கு ரூ.109 கோடி!
மருத்துவமனைகளுக்கு ரூ.55 கோடி
மற்ற பெரும் பகுதி - ஊழியர்கள் சம்பளம்.
இதன் வைப்பு நிதி மூலதனம் 7,000 கோடி ரூபாய்!
மருத்துவமனைகளுக்கு ரூ.55 கோடி
மற்ற பெரும் பகுதி - ஊழியர்கள் சம்பளம்.
இதன் வைப்பு நிதி மூலதனம் 7,000 கோடி ரூபாய்!
இந்து மதப் பிரச்சாரத்துக்கு
ரூ.100 கோடியாம்
ரூ.100 கோடியாம்
மற்ற அறக்கட்டளைகளுக்கு வருமான வரித்
துறையினர் தரும காரியங்களுக்கு எவ்வளவு விழுக்காடு செலவு செய்தீர்கள்
என்று கேள்வி கேட்கும்போது, வெங்கடாஜலபதி கோயிலில் கொழுத்த பார்ப்பனர்
சுரண்டல் எப்படி உள்ளது பார்த்தீர்களா? இவர்கள் ஆண்டுக்கு ரூ.100 கோடியில்
ஹிந்து தர்ம பிரச்சாரமாம்! அதன் விவரத்தை அளிக்கவேண்டாமா?
கிறித்துவர்களின் கல்வித் தொண்டு
மருத்துவத் தொண்டுக்கு முன் இது எம்மாத்திரம்? அரசின் மக்கள் நலப் பணிகள்
மருத்துவம், கல்வி, முதலியவற்றை இவைகளை ஒருங்கிணைத்தாவது செய்தால்
திருப்பதி ஏழுமலையான் கோபித்துக் கொண்டு வெளி நாட்டிற்கா போய் விடுவார்?
மூடபக்தியினால் திருப்பதிக்கு வாரி வழங்கும் பணக்காரர்களும் கொஞ்சம் யோசித்துப் பார்க்கட்டும்.
பக்தி வந்தால் புத்தி போகும்
புத்தி வந்தால் பக்தி போகும்
புத்தி வந்தால் பக்தி போகும்
எனவே - மனிதர்களை வாழ விடுங்கள்.
விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்திட அரசுகள் வழி காணட்டும்!
பெரியார் கூறிய மூன்று வகை முதலாளிகளில்
1) உயிருடன் மூலதனம் போடும் முதலாளிகள்
2) கடவுள் (கல்) முதலாளிகள்
3) பிறவி முதலாளிகளான பார்ப்பனர்
இந்த முதலாளித்துவத்தை எதிர்த்து ஒழித்தால் ஒழிய சமதர்மம் வருமா? சிந்தியுங்கள்.
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
சென்னை
21.1.2015
21.1.2015
No comments:
Post a Comment