Thursday, July 3, 2014

சுகவாசி

திருப்பதி ஏழுமலை யானைத் தரிசிக்க தன் மனைவியுடன் சென்றார் சென்னையைச் சேர்ந்த பக்தர் முத்து கிருஷ்ணன்.

தமிழ்நாடு சுற்றுலாத் துறை மூலம் முன்பதிவு செய்து கொண்டு தன் பயணத்தைத் தொடங்கி னார். திரும்பும்போது ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்து சொகுசாக இல்லை. இந்த நிலையில் நுகர்வோர் நீதிமன்றத் தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

சுவாமி தரிசனத்துக் காகத் தானே சென் றீர்கள்? - அப்படி இருக்கும்போது சொகுசு பேருந்து தேவையா? என்று மாநில நுகர்வோர் தீர்ப்பாய நீதிபதி வழக் குத் தொடுத்தவரைப் பார்த்து கேள்வி ஒன் றைத்  தூக்கிப் போட்டார்.

இந்தச் சேதி இன்று வெளிவந்த அதே தின மலர் ஏட்டின்  (பக்கம் 7) இரண்டாம் பக்கத்தில் இன்னொரு தகவலும் வெளி வந்துள்ளது . தலைப்பு: காசிக்கு ஏசி என்பதாகும். உள்ளே சேதி என்ன தெரியுமா? ஆடி அமாவாசை தினத் தன்று வடக்கே காசி விசு வநாதன் கோயிலுக்குச் சென்று  தரிசித்தால் புண்ணியமாம்.
அதற்காக இரயில்வே துறை ஒரு ஏற்பாட் டினைச் செய்துள்ளது. வரும் 23ஆம் தேதி பெங்களூருவிலிருந்து காசிக்கு முழுக்க குளிர் சாதன வசதி (ஏ.சி.) செய்யப்பட்ட சிறப்பு சொகுசு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுவாமிதரிசனம் செல்லுபவர்கள் சொகுசு களைத் தேடி அலைய லாமா என்று மாநில நுகர்வோர் தீர்ப்பாயம் கேட்கும் கேள்வி, காசிக்கு ஏசி ரயிலில் பயணம் செய்பவர்களுக்கும் பொருந்துமா? பொருந்தாதா?

இன்னொரு கேள்வியையும் பக்தர்கள் நீதிபதியைப் பார்த்துக் கேட்கலாமே! திருப்பதி ஏழுமலையானே இப் பொழுது குளுகுளு வசதி (ஏசி) செய்யப்பட்டுள்ள இடத்தில்தான் இருக் கிறார். கர்ப்பக்கிரகம் முழுவதும் அந்தவசதி செய்யப்பட்டுள்ளது.

ஏழுமலையான் சிலைக்கு வியர்க்குமா? புழுக்கம் இருக்குமா? எதற்கு ஏசி என்று அதிகப் பிரசங்கித்தன மாக யாரும் கேள்வி கேட்கக் கூடாது; கார ணம் இது பகவான்  சம் பந்தப்பட்ட சமாச்சார மாயிற்றே!

ஆனால் , இதற்கு உள் நோக்கம் ஒன்று உண்டு கோயில் கர்ப்பக் கிரகத்தில் பக்தியின் பெயரால் தீவிர சுரண் டல் தொழிலில் ஈடுபட் டுக் கொண்டிருக்கும் அர்ச்சகர்ப் பார்ப்பனர் களுக்குக் குளு குளு ஏசி வசதி தேவைப்படுகிறதே - அது புரியாமல் சாமிக்கு வியர்க்குமா? புழுங்குமா என்ற கேள்விகளைக் கேட்கலாமா?

கொசுறு: கால்நடை யாக (நடந்து) செல்ல வேண்டிய சங்கராச்சாரி களே ஏசி கார்களிலும் விமானத்திலும் அல்லவா பறக்கிறார்கள்! 

- மயிலாடன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...