Thursday, March 20, 2014

ஹிந்து ராஷ்டிரம் வந்தால்...

ஹிந்து ராஜ்ஜியத்தை அமைக்கப் போகிறோம் - அமைக்கப் போகிறோம் என்று சொல்லி வருகிறார்கள் அல்லவா - அந்த ராஜ்ஜியத்தில் மக்கள் தொகையில் கிட்டதட்ட சரி பகுதியாக இருக்கக் கூடிய பெண்களின் நிலை என்ன?

ஆர்.எஸ்.எஸின் தலைவராக இருக்கக் கூடிய மோகன் பகவத் சொன்னதை எடுத்துக் காட்டினாலே போதுமானது. அசாமின் சில்சா நகரில் நடந்த ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்ற அதன் தலைவர் மோகன் பகவத் கூறியதை தினமலர் ஏடு வெளியிட்டிருந்தது.

மேலை நாட்டு நாகரிகத்தில் மயங்கி, இந்துமத பண்பாடு, கலாச்சார பெருமைகளைப் புறந்தள்ளி, கண்டபடி வாழ்பவர்கள் மத்தியில்தான் கற்பழிப்புகளும், பாலியல் வன்முறைகளும் நடக்கின்றன. இந்தியா முன் பாரதமாக இருந்தபோது, இது போன்ற வன்முறை சம்பவங்கள் கிடையாது.

மேலை நாகரிகத்தைப் பின்பற்றி பாரதம் இந்தியா என மாறிய பிறகுதான் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து விட்டன. நகர்ப்புறங்களில் தான் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நடக்கின்றன. கிராமப்புறங்களிலோ, பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளிலோ அத்தகைய குற்றங்கள் அறவே நடப்பதில்லை என்ற கூறியபோது பெரும் சர்ச்சைகள் வெடித்தன. இதற்கு விளக்கம் கூறுவதாக நினைத்துக் கொண்டு மத்தியப் பிரதேசம் இந்தூரில் (16.1.2013) மோகன் பகவத் தெரிவித்த கருத்து பெருமாள் போய் பெத்த பெருமாள் என்ற கதையாகி விட்டது. என்ன கூறினார் பகவத்?

திருமணம் என்பது கணவன் மனைவிக்கு இடையேயான ஒப்பந்தம்; திருமணத்தின்போது, நீ வீட்டை நன்றாகக் கவனித்துக் கொண்டால்  உன் தேவைகளை நான் கவனித்துக் கொள்வேன். உன்னையும் பாதுகாப்பேன் என கணவன் ஒப்பந்தம் செய்கிறான். அந்த ஒப்பந்தத்தை மனைவி மீறும்போது வேறு வழியின்றி மனைவியைக் கணவன் கைவிடுகிறான் என்று பேசினாரே பார்க்கலாம் (தினமலர் 7.1.2013 பக்.12).

குடும்ப வாழ்க்கையில் மனைவி செய்யும் தவறுத லால் தான் கணவன் மனைவியைக் கை விடுகிறான் என் கிறார் அப்படியானால் கணவன் தவறே செய்யாதவனா? இன்னொன்றையும் நுட்பமாகக் கவனிக்க வேண்டும்  இந்தியா பாரதமாக இருந்தபோதெல்லாம் சரியாக இருந்ததாம். இதன் பொருள் என்ன? பாரதம் என்பதற்கு இவர்கள் என்ன பொருளை வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்?
அது புராண மூலத்தைக் கொண்டது என்பதால் அந்த வகையில் திசை திருப்பப் பார்க்கின்றனர்; இவர்கள் கூற்றுப்படியே பார்த்தாலும்  இந்துக்களின் மகா காவியமான பாரதம்கூட பெண்ணை இழிவுபடுத்து வதாகத் தானே உள்ளது! பெண்ணை வைத்துச் சூதாடியது எந்தவகை ஒழுக்கத்தைச் சேர்ந்ததாம்? அந்தப் பெண்கூட அய்ந்து கணவன் போதாது என்று ஆறாவதான கர்ணன்மீது காதல் கொண்டது எந்த வகை ஒழுக்கத்தைச் சேர்ந்ததாம்?

மோகன் பகவத் இந்தூரில் தெரிவித்த கருத்துக்கு சி.பி.எம். பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தாகாரத் நறுக்கென்று இந்துத்துவாவின் மூக்கை வெட்டும் கருத்தினைத் தெரிவித்தார்.

ஆர்.எஸ்.எஸ். தலைவரின் பேச்சு எனக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை. அவர்கள் இந்துகள், இந்துத்துவா, மனுதர்ம சாஸ்திரத்தின்படி நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும் என விரும்பியவர்கள் ஆகவே அவர்களின் கொள்கையை மோகன் பகவத் பிரதிபலித்துள்ளார் என்று அதே தினமலரில்தான் (7.1.2013) வெளியிட்டு இருந்தது.

திருவாளர் சோ ராமசாமி ஒவ்வொரு துக்ளக் இதழிலும் பெண்களை மட்டம் தட்டி எழுதும் போக்கை வழமையாகத்தான் கொண்டுள்ளார்.

கேள்வி: மகளிர் தினத்தன்று யாருக்கு வாழ்த்துச் சொன்னீர்கள்?

பதில்: அடடா? மகளிர் தினம் என்று ஒன்று உண்டா? அது இப்போது வந்து போய் விட்டதா? தெரியாமல் போய் விட்டதே! தெரிந்திருந்தால் உங்களுக்கு வாழ்த்தும் சொல்லியிருப்பேனே! சரி கொஞ்சம் லேட்டாக இப்போது உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் (துக்ளக் 26.3.2014 பக்21).

ஹிந்துத்துவாவில் ஊறிய பாழும் நெஞ்சங்கள் எல்லாம் இந்தவரிசையில்தான் பெண்களைக் காலில் போட்டு மிதிக்கும் நஞ்சினைத்தான் கக்குவார்கள்.

ஹிந்துத்துவா வந்தால் இந்தக் கெதிதான்.

மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரி பகுதி உள்ள பெண் களுக்கு ஆண்களைவிடக் கூடுதல் பொறுப்பும் கவலையும், கடமையும் உண்டு. அதுதான் பிஜே.பி. என்ற அணி எந்தகாரணத்தை முன்னிட்டும் அதிகா ரத்தைக் கைப்பற்றி விடக் கூடாது  அதே போல கொள்கையளவில் பிஜேபியுடன் மறைமுகக் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கும் அ.இ.அ.தி.மு.க.வுக்கும் தேர்தலில் நல்ல பாடத்தைக் கற்பிக்க வேண்டும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...