Saturday, June 22, 2013

திருமணம் கிரிமினல் குற்றம் என்ற காலம் வரும்!

சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் திரு சி.எஸ். கர்ணன் அவர்கள் கணவன் - மனைவி தொடர்பான வழக்கு ஒன்றில் அளித்த தீர்ப்பினை புரட்சிகரமானது என்று தலைப்பிட்டு விடுதலை தலைப்புச் செய்தியாக வெளியிட்டது.
அதனைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அத்தீர்ப்பினை வரவேற்று சிறப்பான அறிக்கை ஒன்றினை வெளியிட்டார் (விடுதலை 20.6.2013) .
பெண்ணிடம் ஆசை வார்த்தைகளைப் பேசி, உடலுறவு கொண்டு அதற்குப் பின் அந்தப் பெண்ணைக் கைவிட்டு வேறொரு பெண்ணைத் தேடும் ஆண் ஆதிக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கக் கூடிய தீர்ப்பு அது என்பதை முற்போக்குச் சிந்தனையுடைய எவரும் ஏற்கவே செய்வார்கள்.
யதார்த்தமாகவும் பெண்களிடம் ஆசை காட்டி, மோசம் செய்து, பிறகு அவர்கள் வாழ்க்கையையே நாசம் செய்து, புது செருப்புப் போட்டுக் கொள்ள பழைய செருப்பைக் கழற்றி எறிவது போன்ற  அலட்சியத்துடன் மகளிரிடம் நடந்து கொண்டு அவர்கள் கருவுற்ற போதிலும் கூட அதற்குப் பொறுப்பு ஏற்க மறுத்து பேரம் பேசும் அயோக்கியத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து ஆணி அடிக்கும் தீர்ப்பேயாகும் என்று மிகச் சரியாகவே கணித்துச் சொல்லியிருக்கிறார் திராவிடர் கழகத் தலைவர்.
நீதியரசர் திரு. கர்ணன் அவர்கள் அளித்த தீர்ப்பின் நோக்கத்தையும், ஆழத்தையும் புரிந்து கொள்ளாமலோ அல்லது புரிந்து கொண்டாலும் தங்களின் ஆழ் மனத்தில் பதிந்துள்ள இந்துத்துவா குணத்துடன் அணுகிய காரணத்தால் ஆத்திரம் கொண்டு விமர்சிக்கக் கிளம்பி விட்டனர்.
தமது தீர்ப்பின் தன்மை குறித்தும், நோக்கம் குறித்தும் நீதிபதி தெளிவாக விளக்கம் கொடுத் துள்ளார்.
திருமணம் செய்து கொள்கிறேன் என்று பெண் ணிடம் வாக்குறுதி கொடுத்து, பின்னர் உடலுறவு வையும் முடித்துவிட்டு,  அந்தப் பெண்ணை விட்டு விட்டுச் சென்றுவிட்டால், அந்த ஆண்மீது கிரிமினல் வழக்கைச் சம்பந்தப்பட்ட பெண் தொடரலாம்; ஆனால் அந்தப் பெண் நிவாரணம் பெறுவதற்கு சிவில் நீதிமன்றங்களை அணுக முடியாது என்ற அடிப்படை யிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டதாக நீதிபதி கூறி யுள்ளது மிகச் சரியானது தானே!
அதனைப் புரிந்து கொள்ளாமல் வேறு வகையில் விமர்சிப்பது வேடிக்கையானது.
தாலி கட்டுவது மாலை, மோதிரம் மாற்றுவது, தீக்குழியைச் சுற்றுவது (சப்தபதி) அல்லது அரசு அலுவலகத்தில் போய் பதிவு செய்வது போன்றவை யெல்லாம் மதச் சடங்குகளைப் பின்பற்றி சமுதா யத்தைத் திருப்திப்படுத்துவதற்காகத்தான் பயன் படுத்தப்படுகின்றன. அனைத்து மதச் சடங்கு களையும், பின்பற்றித் திருமணம் செய்த பிறகும் கணவன் மனைவிக்குள் பாலியல் ரீதியான உறவு இல்லா விட்டால் அந்தத் திருமணம் சட்டப்படி செல் லாது என்று நீதிபதி கர்ணன் அவர்கள் கூறியுள்ளார்.
இன்னொரு வகையில் சொல்ல வேண்டும் என்றால் தாம்பத்திய உறவை மறுப்பதன் அடிப் படையில் விவாகரத்துக் கோரலாம் என்று தீர்ப்பே இருக்கிறது.
நீதியரசர் கர்ணன் அவர்கள் அளித்த தீர்ப்பை இதனுடனும் சம்பந்தப்படுத்திப் பார்த்தால், அந்தத் தீர்ப்பின் சட்ட ரீதியான நுட்பமும் நீதியும் நியாயமாகப் புரியும்.
இதன் ஆழத்தைப் புரிந்து கொள்ளாமல், நுனிப்புல் மேயும் தன்மையில், சடங்குகளைப்பற்றி மலினமாகச் சொல்லியிருக்கிறாரே நீதிபதி என்று கோதாவில் குதித்துள்ளனர்.
கலாச்சாரமும், சடங்கும் மாற்றங்களுக்கு ஆளானதேயில்லையா? குடும்ப அமைப்பு முறையில் மாற்றங்களும் ஏற்படவில்லையா? மாற்றம் என்பது மட்டுமே மாறாதது என்ற தத்துவத்தைப் புரிந்து கொண்டால் இப்படியெல்லாம் குறுக்குச் சால் ஓட்ட மாட்டார்கள். இந்துத்துவாவாதிகள் கூறுகிறார்களே - அவர்கள் நம்பும் கலாச்சாரம் என்பதுதான் என்ன? அந்த எண் வகைத் திருமணங்களை ஏற்றுக் கொள்கிறார்களா?
அந்த எட்டில் ஒன்று பைசாசம் என்பது; ஒரு கன்னிகை தூங்கும்போதும், மது மயக்கத்தில் இருக்கும் போதும் அல்லது புத்தி சுவாதீனம் இல்லாதிருக்கும்போதும், அவருடைய மன சம்மதம் இல்லாமலேயே வலுவில் புணர்ச்சி செய்வதாகும்.
இந்து மதத்தில் கூறப்பட்டுள்ள இந்த பைசாச திருமணத்தை ஏற்றுக் கொள்கிறார்களா?
திருமணம் கிரிமினல் குற்றமாக்கப்படும் காலம் வரும் என்றும் தந்தை பெரியார் கூறியுள்ளார். அப்படியொரு காலம் வரத்தான் போகிறது.
இப்பொழுதே திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும்போக்கு (Living Together) வந்து விட்டதே - சட்ட ரீதியாகவும் அதற்கு அங்கீகாரமும் கிடைத்துவிட்டதே!
காலத்தின் வேகத்தையும், மாற்றத்தையும் புரிந்து கொள்ளாமல் மதவாதக் கண்ணோட்டத்தோடு கருத்துச் சொல்பவர்கள் எதிர் காலத்தில் எள்ளி நகைக்கப் படுவார்கள் என்பது மட்டும் உண்மை.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...