Wednesday, June 19, 2013

மீண்டும் ஹிந்து சாம்ராஜ்ஜியப் பேராசை?

- ஊசி மிளகாய்
ஆர்.எஸ்.எஸ்.சின் ஏடு ஒன்றில் கீழ்க் கண்டவாறு எழுதப்பட்டுள்ளது (21.6.2013).
ஜூன் 21ஆம் தேதி, ஜேஷ்ட, சுக்ல த்ரேயோதசி (ஆனி மாதம் சுக்லபட்சம், த்ரயோதசி திதி) புனித நாளாகும்! இதே நாளில்தான் 1674 ஜூன் 6ஆம் தேதி, சத்ரபதி சிவாஜி ஹிந்து சாம்ராஜ்யத்தின் மன்னனாக முடி சூட்டிக் கொண்டார்.
பிரபல சரித்திர ஆராய்ச்சியாளரான ஸ்ரீ ஜதுநாத சர்க்கார் சிவாஜியைப் பற்றி  எழுதியுள்ளதில் தங்களுக்கு உகந்த சில பகுதிகளை மட்டும் (இதுதான் ஆரியத்தின் கைதேர்ந்த டெக்னிக்குகளில் ஒன்றாயிற்றே!)
...சிவாஜி ஒரு அவதார புருஷரல்ல. நம்மைப் போன்ற ஒருவர்தான் என்பதை நினைப்போம்!
...சிவாஜி மகாராஜாவைப் போலவே சுதந்திரமான ஹிந்து ராஷ்டிரத்தை உருவாக் குவோம் என்று இந்த மங்களகரமான நன்னாளில் விரதமேற்போம் ........என்று முடித்துள்ளார்கள்.
அதே வரலாற்று ஆசிரியர் ஜதுநாத் சர்க்காரின் எழுத்துக்களையும், இன்னும் சில சரித்திர நூல்களையும் ஆதாரமாகக் கொண்டே அறிஞர் அண்ணா அவர்கள், தானே எழுதி நடித்த சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் -
பார்ப்பனர்களின் பக்திச் சுரண்டல்கள், எப்படி சிவாஜியின் கஜானாவையே, யாகயோகம் என்று கூறி மொட்டையடித்தது என்பதை மிகத் துல்லியமாக, தானே ஏற்று நடித்த காகபட்டர் வேடத்தின் மூலமும் அவரது சீடன் கங்குபட்டர் மூலமும் விளக்கி யுள்ளார்களே!
தோனார், புரந்தர், கல்யாண் போன்ற எண்ணற்ற மலைக்கோட்டைகளை வென்ற மலைஎலி என்று புகழப்பட்ட சிவாஜி முடி சூட்டிக் கொள்ள முனைந்த நேரத்தில், அது முடியாத காரியம் என்று தடுத்தது ஹிந்துமத சனாதன சாம்ராஜ்யம் அல்லவா!
சிவாஜி நீ சூத்திரன் - நாலாம் ஜாதிக் காரன் அடிமை வேலையை பிராமணருக்குச் செய்ய ஆண்டவனால் உண்டாக்கப்பட்டவன், நீ எப்படி மன்னனாக முடியும்?
க்ஷத்திரியர்கள் அல்லவோ நாடாளப் பிறந்தவர்கள். நாடாள அவர்கள் ஆசைப்பட்டால் அதுதான் வர்ண தர்மப்படி நியாயமானது; நீ விரும்புவது அதர்மம், என்றவுடன், மனம் வெதும்பி, இதை மாற்ற வேறு மார்க்கமில்லையா குருதேவா? என்று கேட்க, கங்கை நதிப் புரத்திலிருந்து காகபட்டர் என்ற பெரும் பிராம்மண முனிவரை அழைத்து வந்து பெருத்த யாகம் செய்து, அவர் அழைக்கும் ஆயிரக்கணக்கான பிராம்மணர் களுக்கும் பொன்னும், வைரமும், மற்றவை களையும் தானமாக தாராளமாகக் கொடுத்து, 45 நாள் யாகம் தொடர்ந்து செய்தால் உன்னைத் தற்காலிகமாக க்ஷத்திரி யனாக்கி மன்னனாக்கி முடி சூட்டலாம் என்று ஆசைகாட்டி மோசம் செய்யப்பட்ட அந்த சிவாஜி பரம்பரை எப்படி வீழ்ந்து, பார்ப்பன  சாம்ராஜ்யமாகவே - பேஷ்வாக்களே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி பச்சை வர்ணாசிரம ஆட்சியாகியது என்ற வரலாற்றை அருமையாக 3 மணி நேரத்தில் நாடகமாக்கினார் - அறிவு வெளிச்சம் ஏற்பட்டது.
அதில் சிவாஜி ஒப்பனையோடு சிவாஜி யாகவே மாறி சிறப்பாக நடித்த வி.சி. கணேசனுக்கு தந்தை பெரியார்  இன்று முதல் சிவாஜிகணேசன் என்று கூற, அதுவே அவரது பெயராக இறுதிவரை ஆகிவிட்ட கதை சில பேருக்காவது தெரிந்தால் நல்லது.
சிவாஜி கண்ட ஹிந்து ராம்ராஜ்யம் பார்ப்பனர்களின் பகற் கொள்ளை சாம்ராஜ்யம், யாகங்கள் என்ற பெயரால் சோம்பேறிப் பார்ப்பனர்கள் கூட்டம் பொன்னையும், பொருளையும் அள்ளிச் சென்று அக்கிர காரத்தில் ஆட்டம் போட்டு, செல்வச் செழிப்பில் புரண்ட காலம் தான் ஹிந்து சாம்ராஜ்ய வர்ணதர்மக் கொடி பறந்த கொடுமையான காலம்!
அந்த நாடகத்தில் மிக அருமையாக எளிய முறையில் அண்ணா காகபட்டராக நடித்துக் காட்டுவார்! கங்குபட்டர் என்ற ஒரு அப்பாவி சீடன் கேள்வி கேட்பான்.
அவனை வைத்து அருமையான பாடங்களை கூறுவார்.
டேய் கங்கு, நான் எதன்மீது அமர்ந்துள்ளேன் பார்த்தாயா?
ஹம் தெரியாதா - ஆசனத்தில்....
டே - மண்டு அதல்லடா - ஆசனத்தில் எதன்மீது?
புலித்தோல்மீது...!
பார்த்தாயா அந்த புலியை உயிருக்குத் துணிந்து வேட்டையாடியவன் எவனோ?
நான் புலித்தோல்மீது சுகமாய் அமர்ந்துள்ளேன் இதுதாண்டா நம்மவாளின் சாமர்த்தியம் புரிந்ததோ என்பார்.
இப்படி ஆரியத்தின் தோலை உரித்து மறைந்த வரலாற்று உண்மைகளை நாடகமாக்கி சிந்திக்க வைத்து எழுச்சி உண்டாக்கினார் அண்ணா.
சிவாஜிக்கு நல்ல புத்தி கூறிய தளபதி சந்திரமோகனை விரட்டி விட்டான் சிவாஜி ஆரியர் பேச்சைக் கேட்டு.
அதுபோல ஹிந்து சாம்ராஜ்யம் மீண்டும் வர வேண்டுமாம்
எவ்வளவு பேராசை பார்த்தீர்களா?
'' பேராசைக்காரனடா பார்ப்பான்!
பிச்சுப்பணங் கொடு என்றே தீர்ப்பான்?"
- பார்ப்பன பாரதியார்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...