Friday, June 14, 2013

நீரிழிவு நோயாளிகளுக்கு ஓர் நற்செய்தி!

நீரிழிவு - சர்க்கரை நோயாளி களுக்கு மிக நல்ல செய்தி, நாளேடு களில் வந்துள்ளது.
இன்சுலின் என்பது நமது உடலின் கணையத்தில் சுரக்காததினால்தான் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக, நீரிழிவு Diabetes நோயாக மாறி - பிறகு நாளடைவில் அதுவே உயிர்க் கொல்லியாகவும் மாறி விடுகின்றது!
இன்சூலினும், குளுக்கோனும் கணையத்தில் உற்பத்தியாகின்றன.
இன்சுலினை பீட்டா செல்களும், குளுகோனை ஆஃல்பா செல்களும் உற்பத்தி செய்கின்றன.
கணையம் பாதிக்கப்பட்டாலும் அல்லது கணையத்தின் சுரக்கும் தன்மை குறைந்தாலும் சர்க்கரை நோய் ஒருவரைத் தாக்கக் கூடும்!
அடிப்படையில் நாம் சாப்பிடும் உணவு சர்க்கரையாக மாறி, ரத்தத்தில் உள்ள சர்க்கரை தான் மனிதர்களுக்கு சக்தியை (Energy) அளிக்கிறது!
எஞ்சியுள்ள சர்க்கரை உடலில் தங்கு கிறது. இந்த எஞ்சிய சர்க்கரையைக் கட்டுப்படுத்த உடலில் இன்சுலின் ஹார்மோன் குளுகோன் என்ற இரண்டு சுரப்பிகள் பணியாற்றுகின்றன.
இங்கிலாந்து நாட்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர் ஹோவோர்கா  கடந்த 5ஙூ ஆண்டுக ளாக முயற்சி செய்து வந்தார். தற்போது அவரது ஆராய்ச்சி வெற்றியடைந் துள்ளது!
அவர் ஒரு செயற்கை கணையத்தை உருவாக்கியிருக்கிறார்.
செயற்கை கணையத்தை முதலில்  இரவு நேரங்களில் நான்கு நோயாளி களுக்குப் பொருத்திப் பார்த்தார்கள்; அது வெற்றிகரமாக, சர்க்கரையைக் கட்டுப்படுத்தி இயங்கியது கண்டு மெத்த மகிழ்ச்சியுற்றனர்.
அதனை மேலும் 24 பேர்களுக்கு செயற்கை கணையத்தைப் பொருத்தி யுள்ளனர்!
அதுவும் வெற்றிகரமாகி விட்டால் - பெரிதும்  நீரிழிவு நோய் இல்லாமலேயே ஆகிவிடும் என்று நம்புகிறார்கள்!
இது மிகப் பெரிய மருத்துவ சாதனையாகக் கருதப்படக் கூடும்.
ஏனெனில் சர்க்கரை நோயின் கொடுமை ஒன்று இரண்டல்ல; பல வகைப்பட்டது.
எனவேதான் இதனை ஒரு சந்திப்பு நோய் Diabetes is a Junction disease) என்று சர்க்கரை நோய் தீர்க்கும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிகுமேயானால், அது (Stroke) ஸ்ட்ரோக் - பக்கவாதம், கண்பார்வை இழத்தல், சிறுநீரகப் பழுது, இதய நோயான மாரடைப்பு இவை மூலம் அது உயிரைப் பறிக்கும் நோயாக ஆகி விடுகிறதே!
மருத்துவ விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் எவ்வளவு அதியற்புத சாதனைகளை அனுதினமும் படைத்து வருகின்றனவே!
நீரிழிவு நோய், புற்று நோய் - இந்த இரண்டுக்கும் வெற்றிகரமான மருந்து களும், சிகிச்சைகளும் மருத்துவத் துறையில் வந்து விட்டால், உலக மனித குலம் மேலும் பல்லாண்டு, பல்லாண்டு நல் வாழ்வு வாழுமே!
நண்பர்களே, இந்தக் கண்டு பிடிப்புகள் வந்து விட்டன என்பதால், சாப்பாட்டை ஒரு பிடி பிடித்து விடாதீர்கள்!
எப்போதும் அளவோடு உண்டு
நலமோடு வாழுங்கள் -
இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்று நினைக்கும் போது, இலையில் - தட்டை - விட்டுவிட்டு எழுந்து கை அலம்பி மகிழுங்கள்.
அதுவே நல்ல ஆரோக்கிய முறையாகும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...