Wednesday, June 12, 2013

12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் இலங்கை அகதி மாணவர்கள் சாதனை


தமிழகத்திலுள்ள முகாம் வாழ் இலங்கைத் தமிழ் மாணவர்கள் கல்வியே தங்களது எதிர்காலத்தை சிறப்பானதாக மாற்றும் என்ற எண்ணத்தில் உறுதியுடன் கல்வி கற்று வருகின்றனர். முகாம் சூழ லில் நெருக்கமான இருப்பிடத்தில் எவ்வளவோ கஷ்டங்களுக்கும், இரைச்சலுக்கும் மத்தியில் வாழ்ந் தாலும் சிறப்பாக கல்வி கற்று வரு கின்றனர் என்பது மிகவும் பாராட் டப்பட வேண்டிய ஒன்றாகும்.
அந்த வகையில் இவ்வாண்டு 690 மாணவர்கள் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதி னார்கள். அவர்களில் 88.4ரூ சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள் ளனர். கடந்த ஆண்டைவிட 4ரூ சதவீத தேர்ச்சி விகிதம் அதிகரித் துள்ளது. இம்மாணவர்கள் பெரும் பாலும் ஊர் புறங்களில் அமைந் துள்ள அரசு பள்ளிகளிலேயே படித்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
தேர்ச்சி விகிதம்:
கடந்த ஆண்டு 84 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இவ்வாண்டு 88 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆண்கள் 84 சதவீதம்: பெண்கள் 91 சதவீதம்: தேர்ச்சி பெற்றுள்ளனர்.243 மாண வர்கள் 800-க்கு மேல் மதிப் பெண்கள் பெற்றுள்ளார்கள். கடந்த ஆண்டு 34 மாண வர்கள் 1000க்கு மேல் மதிப் பெண்கள் பெற்றுள்ளார்கள். கடந்த ஆண்டு 34 மாணவர்கள் 1000-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றனர். இவ் வாண்டு 36 மாண வர்கள் 1000-க்கு மேல் மதிப் பெண்கள் பெற்றுள் ளனர் என்பது பாராட்டுக்குரிய தாகும்.
நன்றி கூறல்:
ஏதிலி மாணவர்கள் சிறப்பாக கல்வி கற்று தேர்ச்சி பெற ஊக்க மும், உதவியும் வழங்கி வரும் மாண்புமிகு முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கும், அனைத்து அரசு அலுவலர்களுக் கும், அனைத்து மனிதநேய சேவை யாளர்களுக்கும் எம்மாணவர்கள் சார்பாகவும், ஈழ ஏதிலியர் மறு வாழ்வுக் கழகம் சார்பாகவும் மன மார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், தேர்ச்சி பெற்ற மாண வர்கள் இருக்கின்ற அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி உயர்கல்வியைத் தொடர வேண்டு மென கேட்டுக் கொள்வதோடு கழகத்தின் சார்பாக பாராட்டும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
- தொகுப்பு: இரா.  பத்மநாதன் கல்விப்பகுதி, சென்னை
(சுதந்திரன் ஜூன் 2013)


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...