Friday, April 5, 2013

முதல் அமைச்சரின் கவனத்துக்கு ஆசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு முற்றிலும் புறக்கணிப்பு!


முதல் அமைச்சரின் கவனத்துக்கு ஆசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு முற்றிலும் புறக்கணிப்பு!


உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!

தமிழர் தலைவர் விடுத்துள்ள சமூகநீதிக்கான முக்கிய அறிக்கை
ஆசிரியர்களின் தகுதித் தேர்விலும் பணி நியமனத்திலும் இடஒதுக்கீடு அறவே புறக்கணிக்கப் பட்டுள்ளது. முதல் அமைச்சர் இதில் தலையிட்டு சமூகநீதி முடிவுகள் அறவே புறக்கணிக்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு களை ரத்து செய்து, வகுப்புவாரி யான தனித்தனி தகுதி மதிப்பெண் களை நிர்ணயித்து, புதிய தேர்வு முடிவுகளை வெளியிடுவதோடு, தமிழ்நாட்டில் சட்டப்படி நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டின் விகிதாச்சாரப்படி மறு பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழக ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஆசிரியர்களுக்கான இரு தகுதித் தேர்வுகளிலும்,  ஆசிரியர்களுக்கான பணி நியமனங்களிலும் NCTE வகுத்துள்ள சமூகநீதி தொடர்பான வழிகாட்டுதலும் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 சதவிகித இடஒதுக்கீடு முறையும் அறவே புறக்கணிக்கப்பட்டுள்ளன.
இதுபற்றிய விவரங்கள் வருமாறு:
1) தமிழகத்தில் நடைபெற்ற இரண்டு "ஆசிரியர் தகுதித் தேர்வுகளிலும்", (2012 ஜூலை 12 மற்றும் அக்டோபர் 14) சமூக நீதி அறவே பின்பற்றப்படவில்லை.
2) 2895 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் 27-7-2012 அன்று வெளியிடப்பட்டது. இதில் பொதுப்போட்டியில் வெற்றி பெற்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவினரை பொதுப் போட்டிக்கான இடங்களில் நிரப்பாமல், அவரவர் சார்ந்த இடஒதுக்கீட்டு இடங்களில் நிரப்பி, பொதுப்போட்டி இடங்கள் என்பது முற்றிலும் முன்னேறிய சமூகத்தினருக்கான இடங்களாக ஆக்கப்பட்டிருந்தன.
3) இதனை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தீர்ப்பு அளித்த நீதியரசர் நாகமுத்து, ஆசிரியர் தேர்வு ஆணையத்தின் பட்டியலை முற்றிலுமாக ரத்து செய்ததோடு, தனது கடுமையான கண் டனத்தையும் பதிவு செய்தார்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் திரு.சுர்ஜித் சவுத்ரி நீதிமன்றத்தில் அளித்த விளக் கத்தை அடுத்து, அது முற்றிலும் தவறு எனக் கூறிய நீதியரசர், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அனைத்துப் பட்டி யல்களையும் திரும்பப்பெறவும் உத்தரவிட் டார். (WP 21170 of 2012 dt: 1.10.2012).
அரசு சார்பில் ஆஜரான அடிஷனல் அட்வகேட் ஜெனரல், இனி இதுபோல் நடைபெறாது என நீதிமன்றத்தில் உறுதி அளித்தார்.
01.10.2012 அன்று வெளிவந்த இந்த தீர்ப்பின்படி, கடந்த 24-08-2012 அன்று வெளியிடப்பட்ட, ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் பட்டியலும் நீதிமன்ற ஆணையால் செல்லாததாக ஆக்கப்பட்டுவிட்டது.
தகுதி மதிப்பெண்கள் எங்கே?
4) தேசிய ஆசிரியர் கல்விக்கழகம் (NCTE) வகுத்துள்ள சட்ட திட்டங்களின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வுநடத்தப்பட வேண்டும். அதன்படி, பொதுவாக 60%-ற்கு (அதாவது மொத்த மதிப்பெண்கள் 150-க்கு 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள்) ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள். பள்ளி நிர்வாகங்கள் (அரசு உள்ளாட்சி, அரசு உதவி பெறும், அரசு உதவி பெறாத) அவரவர் பின்பற்றும் இடஒதுக்கீட்டுக் கொள்கைகளுக்கேற்ப எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி, மாற்றுத் திறனாளிகள் போன்ற அனைத்து வகையான இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் தகுதி மதிப்பெண்களில் தளர்வுகளை வழங்கிக் கொள்ளலாம்.
5) இத்தேர்வில் வெற்றி பெற்றவர்தான், ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க முடியும். (தனியார் பள்ளிகள் உட்பட)
6) தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கவும் இத்தகுதிச் சான்றிதழ் அவசியம். தற்போது நடைபெற்ற தேர்வில் 19,000 மட்டுமே தேர்வு என்று அறிவிக்கப்பட்டதால், மீதமுள்ளோர் எந்த பள்ளியிலும் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தக் குளறுபடியான தகுதித் தேர்வு முறையினால் ஆசிரியர் பயிற்சி பெற்ற ஆறரை லட்சம் பேர்கள் (தாழ்த் தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கிராமப்புரத்தைச் சேர்ந்தோர்) தனியார் பள்ளிகளில் கூட ஆசிரியர் பணியில் சேர முடியாத பெருந்தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
7) தேசிய ஆசிரியர் கல்விக் கழகம் (NCTE) வகுத்துள்ள சட்ட திட்டங்களின்படி, பிற மாநிலங்கள் இட ஒதுக்கீட்டுப் பிரிவினர்க்கு தனி மதிப்பெண்களை நிர்ணயம் செய்து தேர்வு நடத்தியுள்ளன.
எடுத்துக்காட்டாக,
ஆந்திரா        OC 60%, OBC 50%, SC/PH 40%,
அஸ்ஸாம்      OC 60%, Others 55%, (OBC, SC/ST/PH)
பீகார்            OC 60%, Others 55%,
ஒரிசா       OC 60%, Others 50%,
8) ஆனால் தமிழ்நாட்டில் பொதுப்போட்டிக்கு நிர்ணயம் செய்யப்பட்ட 60  விழுக்காடு மதிப்பெண்களை,  அனைத்துப் பிரிவினரும், மாற்றுத் திறனாளிகள் உட்பட பெறவேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டது.  தமிழக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட இரண்டு "ஆசிரியர் தகுதித் தேர்வுகளிலும்”, (TNTET) சமூகநீதி முறை அடிப்படையிலான தனித்த தகுதி மதிப்பெண்கள் முறை பின்பற்றப்படவில்லை.
9) தகுதித் தேர்வு அடிப்படையில் நேரடியாக பணி நியமனம் செய்ய முடியாது. ஆனால், அதன் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டு, சட்டப்படி அறிவிக்கப் பட வேண்டிய வகுப்புவாரியான காலிப் பணியிடங்கள் பற்றிய விவரங்கள் கொண்ட அறிவிக்கையை வெளியிடா மலேயே மூன்றே நாட்களில் கலந்தாய்வு நடத்தப்பட்டு, 19000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
10) ஆனால், பட்டியலின் முழு விவரம் அதாவது பொதுப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள், இடஒதுக்கீட்டின் அடிப் படையில் வெற்றி பெற்றவர்கள் என எந்தவொரு பட்டியலும் வெளியிடப்படாமல் இந்த பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது.
பணி நியமன இடஒதுக்கீட்டில், BC, MBC, SC, ST தவிர்த்து BC Muslim, SCஅருந்ததியர் மற்றும் அனைத்துப் பிரிவி னரிலும் மகளிருக்கு இடஒதுக்கீடு உண்டு.
கைம்பெண்கள், மாற்றுத் திறனாளிகள், தமிழ் வழியில் பயின்றோர் ஆகியோ ருக்கும் இடஒதுக்கீடு உண்டு. இவை எல்லாம் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
11) இந்த நியமனப் பட்டியலில் பொதுப் போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக் கப்பட்டுள்ள உயர்ஜாதியினரைக் காட்டிலும் அதிக மதிப்பெண்களும், பதிவு அடிப்படையில் மூப்பும் பெற்ற இடஒதுக் கீட்டுப் பிரிவினர், பொதுப்போட்டியில் இடம் பெறாமல், இடஒதுக்கீட்டு இடங் களில் நிரப்பப்பட்டுள்ளனர். இதன் கார ணமாக, பல இடஒதுக்கீட்டுப் பிரிவினர் தங்கள் வாய்ப்பை இழந்துள்ளனர். 12) பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு கணிதம், விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட முடிவுகளில் முதல் மதிப்பெண் 142 பெற்ற சித்ரா என்பவர் பிற்படுத்தப்பட்டவர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். 107 மதிப்பெண் பெற்ற சுந்தரி என்பவர் முன்னேறிய சமூகத்தவர், பொதுப் பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதுபோல் 130 மதிப்பெண் களுக்கு மேல் பெற்ற பலரும், இடஒதுக்கீட்டு இடங்களுக்குத் தள்ளப்பட்டிருக்க, வெறும் 90 மதிப்பெண்கள் பெற்ற பலரும் பொதுப் போட்டியில் வெற்றி பெற் றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள் ளனர்.
இதே போன்ற மோசடி, பதிவு மூப்பு அடிப்படையில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் பணிநிய மனத்திலும் நடைபெற்றிருக் கிறது. சான்றாக, மூப்பு அடிப் படையில் தேர்வு செய்யப்படும் இடைநிலை ஆசிரியர் நியமனத்தில், 13.11.2002-இல் பதிவு செய்தவர் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும், 15.2.2010-இல் பதிவு செய்த முன்னேறிய வகுப்பினர் பொதுப்பட்டிய லிலும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பட்டதாரி ஆசிரியர்களைப் பொறுத்த வரை, அதிர்ச்சிகரமான விதத்தில் மதிப்பெண்கள் குறிப்பிடப்படா மலேயே, தகுதிப் பட்டியல் தயாரிக்கப் பட்டுள்ளது.
தீர்ப்புக்குப் பிறகும்கூட
13) இவை அனைத்தும், முதுநிலைப் பட்டதாரிகள் பணி நியமனம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் நாகமுத்து அவர்களின் கடுமையான தீர்ப்புக்குப் பிறகும்கூட துணிந்து செய்யப் பட்ட மோசடிகள்! மேலும் நீதியரசர் நாகமுத்து அவர்கள் தனது தீர்ப்பில், ஆசிரியர் தேர்வுக் கழகம் எவ்வாறு இடஒதுக்கீட்டை அளிக்க வேண்டும் என விரிவாக  எடுத்துக்காட்டி உத்தர விட்டதற்கு மாறாக இந்த 19000 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்  நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.
முதுநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ஏற்கெனவே வெளியிட்ட பட்டியலை முழுவதுமாக ரத்து செய்ததோடு, புதிய பட்டியல், இடஒதுக்கீட்டு கொள்கை அடிப்படையில் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் புதிய பட்டியலை ஆசிரியர் தேர்வு ஆணைய இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் கூறப்பட்டது. வேறுவழியின்றி முறையான கட்-ஆப் மதிப்பெண் களை மட்டும் வெளியிட்ட தேர்வு வாரியம், அதன்படி திருத்தப்பட்ட தேர்வுப் பட்டியலை வெளியிட வில்லை.
கட்-ஆப் மதிப்பெண்களை வெளியிட்ட பின்னும் நீதிமன்ற உத்தரவுக்கு விரோதமாக பணி நியமனப் பட்டியலில் பொதுப் போட்டியில்  இடம் பெற வேண்டிய தகுதி வாய்ந்த தாழ்த்தப்பட்டோர், இடஒதுக்கீட்டுப் பிரிவிலேயே  (SC) 
சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆய்வு செய்யப்பட வேண்டும்
நிகழ்ந்திருக்கக்கூடிய நிகழ்வு களையும், ஆதாரங்களையும் வரிசைப்படுத்திப் பார்க்கிறபோது, தமிழக ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியத் தலைவர் திரு.சுர்ஜித் சவுத்ரியின் திட்டமிட்ட, இந்த மோசடிகளை வெளிக் கொணர வேண்டுமானால், திரு.சுர்ஜித் சவுத்ரி இல்லாத நேர்மையான அதிகாரிகளைக் கொண்ட குழுவை நியமித்து, இதுவரை நடைபெற்றுள்ள அனைத்துப் பணி நியமனங்களையும் ஆய்வு செய்ய முதலமைச்சர் உத்தர விடவேண்டும்.
தேவை புதுப்பட்டியல்
14) அதனுடன், உடனடியாக NCTE விதிப்படி இடஒதுக்கீட்டுப் பிரிவினர் அனைவருக்கும் உரிய தகுதி மதிப் பெண்களை தமிழக அரசு அறிவித்து, அதன்படி முன்பு நடந்த இரு தகுதித் தேர்வுகளுக்குமான புதிய மதிப்பெண் பட்டியலை வெளியிட வேண்டும்.
15) கடந்த ஆண்டு செய்யப்பட்ட இந்த 21,000 பணி நியமனங்களையும் (முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் உள்பட) நிறுத்தி வைத்து, ஆசிரியர் பணி நியனமங்கள் தொடர்பான வகுப்புவாரி யான காலிப் பணியிட விவரங்களைக் கொண்ட முறையான அறிவிக் கையை வெளியிட்டு, உயர்நீதிமன்றத் தீர்ப்பில் (01.10.2012) அறிவுறுத்தப்பட்டபடி முறையான இடஒதுக்கீட் டின்அடிப்படையில் வகுப்புவாரி யான கட்ஆப் மதிப்பெண்களை அறிவித்து, பணி நியமனத்திற் குரிய கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். கட்-ஆப் மதிப்பெண் களும், கட் ஆப் தேதியும் தான் இடஒதுக்கீட்டை, முழுமையாக வும் முறையாகவும் பின்பற்றுவ தற்குரிய மிகச்சரியான நடை முறையாகும்! இப்படித்தான் டி.என்.பி.எஸ்.சி உள்பட மற்ற எல்லாத் துறைகளிலும் நடந்து வருகிறது.
ஆனால், நீதிபதி நாகமுத்து அவர்களின் உத்தர வைப் பார்க்கும்பொழுது திரு. சுர்ஜித் சவுத்ரி இதுவரை கட்-ஆப் மதிப்பெண்களையே வெளி யிடாமல் பணியிடங்களை நிரப்பி, மோசடியான முறையில் கடந்த காலத்தில் பல்வேறு பணிநிய மனங்களையும் மேற்கொண் டுள்ளார்.
16) 69 சதவிகித இடஒதுக்கீட்டை எதிர்த்து 10 மாணவர், மாணவிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப் பட்ட வழக்கில் தமிழ்நாடு சார்பில் தெளிவான திட்டவட்டமான கருத்துகள், தகவல்கள் கூறப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் 87 விழுக்காடு உள்ளனர் என்றும் 1921 முதல் தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு தொடர்பான பெரிய வரலாறு இருக்கிறது என்றும், வளர்ந்து வரும் மக்களின் தேவைக்கு ஏற்ப இந்த 69 விழுக்காடு இடஒதுக்கீடு மிகவும் அவசியம் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அத்தகைய தமிழ்நாடு அரசின் அண்மைக்கால ஆசிரியர் பணி நியமனம் இடஒதுக்கீடுக்கு விரோதமாக நடை பெற்று இருப்பது அதிர்ச்சியை அளிக்கக் கூடியதாக உள்ளது என்பதையும் தமிழ்நாடு அரசு முதல் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.
முதல் அமைச்சர் தலையிட வேண்டும்
17)   தந்தை பெரியார் பிறந்த  சமூகநீதி மண்ணில்  இவ்வளவு பெரிய சமூக அநீதி நடைபெற்றுள்ளது. முதல் அமைச்சர் அவர்கள் உடனடியாக இதில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். 69 சதவிகித இடஒதுக்கீடு சட்ட ரீதியாக உறுதி செய்யப்பட அந்தக் கால கட்டத்தில் முதல் அமைச்சராகவிருந்த ஜெயலலிதா அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கை யையும் (1993-1994) இந்த நேரத்தில் நினைவூட்டி, அவசர கதியில் இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர், 
திராவிடர் கழகம்
சென்னை
2.4.2013


நீதியரசர் நாகமுத்து அவர்களின் ஆணைக்குப் பிறகும் அதே தவறுகள்!
நீதியரசர் நாகமுத்து அவர்களின் ஆணைக்குப் பிறகும் அதே தவறுகள்!

“After the order was delivered in open court, the learned Additional Advocate General, made a request to this Court to withdraw the remarks made in paragraph No.230 against the Teachers Recruitment Board. He would submit that in future Teachers Recruitment Board will not commit any such error and since this was the first occasion such kind of examination was conducted, inadvertently those errors have occurred. In view of the said submission made by the learned Additional Advocate General, the remarks made against the Teachers Recruitment Board in the beginning or paragraph No.230 of this order are withdrawn.” (W.P. 21170 of 2012 dt. 1.10.2012)

நீதிமன்றத்தில் நீதியரசர் நாகமுத்து அவர்கள் 1.10.2012 அன்று வழங்கிய தீர்ப்புக்குப் பிறகு, கூடுதல் அட்வகேட் ஜெனரல், நீதியரசர் அளித்த தீர்ப்பில் பாரா எண் 230-இல் உள்ள குறிப்பிட்ட சில கண்டனங்களை திரும்பப் பெறக் கோரி வேண்டுகோள் விடுத்தார். மேலும் இத்தேர்வு முறை முதன்முறையாக இம்மாதிரி நடத்தப்பட்டதால், தெரியாமல் சில தவறுகள் நடைபெற்றுள்ளன. இனி ஆசிரியர் தேர்வுக் கழகம் இது போன்ற தவறுகளை வருங்காலத்தில் செய்யாது என்று தெரிவித்ததை தொடர்ந்து நீதியரசர் பாரா 230-ல் முதலில் குறிப்பிட்ட அந்த  வாசகங்கள் திரும்பப் பெறப்பட்டன. இவ்வளவும் நடந்ததற்குப் பிறகும் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தேர்விலும் நியமனத்திலும் அதே தவறுகள் நடந்துள்ளது எப்படி? இதனை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? பொறுத்துக் கொள்ளத்தான் முடியும்?

நீதியரசர் நாகமுத்து அளித்த தீர்ப்பிலிருந்து சில பகுதிகள்

In the result, the writ petitions are allowed in the following terms:

1)     The valuation conducted and the mark lists published for alll subjects are quashed.

2)     The select lists of candidates for all posts (both challenged and non-challenged) under this Notification are quashed.

3)     The Teachers Recruitment Board shall revalue the answer papers of all subjects as per the correct answers declared herein above.

4)     After such revaluation, the marks secured by the candidates shall be published in this official website of the respondent Board.

5)     After such publication, the respondent Board shall call the candidates for certificate verification by strictly following the method of selection for non-resereved category and reserved categories as indicated supra.

6)     It is made clear that candidates to be selected as against the non-resereved category shall not be adjusted against the reserved category.

7) The interse seniority of the candidates selected shall be strictly based on merit namely the marks secured in the selection process and the same shall not be as per the Roster points.

8) After making the selection by strictly following the above procedure, the respondent Board shall publish the list of the selected candidates in its official website. (WP. 21170 of 2012 dt. 1.10.2012)

1) அனைத்து பாடங்களுக்குமான மதிப்பீடும் மற்றும் மதிப்பெண் பட்டியலும் ரத்து செய்யப்படுகிறது.

2) அனைத்து பதவிக்குமான தேர்வு செய்யப்பட்டவர் பற்றிய அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.

3)மேலே தெரிவிக்கப்பட்டுள்ள சரியான விடைகளின்படி அனைத்து பாடங் களுக்குமான விடைத்தாள்களை ஆசிரி யர் தேர்வுக் கழகம் மறு மதிப்பீடு செய்திட வேண்டும்.

4) திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல், ஆசிரியர் தேர்வுக் கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும்.

5) அவ்வாறு பட்டியல் வெளியிட்ட பிறகு சான்றிதழ் சரிபார்த்திட தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்,  பொதுப் பிரிவு மற்றும் இட ஒதுக்கீடு பிரிவுகள் என்ற அடிப்படையில் அழைக்கப்பட வேண்டும்.

6) பொதுப்போட்டி இடங்களுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டோரை, இடஒதுக்கீட்டு கணக்கில் சேர்க்கக் கூடாது என்பதை தெளிவுப்படுத்துகிறோம்.

7)    தேர்ந்தெடுக்கப்பட்டோரின் முறையான வரிசை, அவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும். இன சுழற்சிப் புள்ளிகள் அடிப்படையில் தயாரிக்கக்கூடாது.

8) மேற்குறிப்பிட்ட வழிகாட்டுதலை கண்டிப்பாக நிறைவேற்றி தயாரிக்கப்படும் பட்டியலை, ஆசிரியர் தேர்வுக் கழகத்தின் இணையதளத்தில் வெளியிட வேண்டும்.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...