Monday, January 7, 2013

கபடி - பல்லாங்குழி விளையாட்டா?


கேள்வி: உலகக் கோப்பை கபடிப் போட்டி யில் பாகிஸ்தானை வீழ்த்தி, இந்தியா மூன் றாவது முறையாகச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளதே?
பதில்: ரொம்ப மகிழ்ச்சி. இதுபோல எப் படியாவது கஷ்டப்பட்டு பெண்கள் போட்டியில் பல்லாங்குழி ஆட்டத் தைச் சேர்த்து விட்டோ மேயானால், அதிலும்கூட இந்தியாதான் முதலிடத் தில் வரும்; சேம்பியன் பட்டத்தைப் பெறும். நாம் மீண்டும் சந்தோஷப்பட் டுக் கொள்ளலாம். (துக்ளக் 9.1.2013 பக்கம் 29)
எதிலும் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் பார்வையா? இதுதான் தி.க.வின் வேலையா என்று சில அதிமேதாவி ஆசாமிகள் அவசரக் குடுக் கையாக பேசுவார்கள்.
ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்புப் போதையில் அகப்பட்டவர்கள் திரு சோவின் இந்தப் பதிலுக்கு என்ன பதிலைச் சொல்லப் போகிறார்கள்?
கபடி - என்பது பல்லாங் குழி விளையாட்டா?  அப்படிச் சொல்லுகிற கூட்டத்தைச் சேர்ந்த பார்ப்பனர்களில் ஒரே ஒருவரை கபடி ஆடச் சொல்லுங்கள் பார்ப்போம் - பல்லாங்குழியா? பல் காணாமல் போகும் விளை யாட்டா என்பது அப்பொ ழுது தெரிந்து விடுமே!
முட்டாள்கள் விளை யாடுகிறார்கள் - 11 ஆயிரம் முட்டாள்கள் வேடிக்கை பார்க்கிறார்கள் என்று கிரிக்கெட்டைப் பற்றி அறி ஞர் பெர்னாட்ஷா சொன் னதுண்டு.
ஒரே நேரத்தில் இருவர் (விக்கெட் கீப்பரைச் சேர்த்து மூவர் என்றும் வைத்துக்  கொள்ளலாம்) விளையாடுவர்; மற்றவர் களோ மைதானத்தில் பேன் குத்திக் கொண்டு இருப் பார்கள் - இந்த விளை யாட்டுக்குப் பெயர்தான் கிரிக்கெட் (டு).
கபடியோ, கால் பந்தோ அப்படியல்ல; மைதானத் தில் உள்ள அத்தனைப் பேரும்  ஆவேசத்துடன் அதி சுறுசுறுப்புடன் விளை யாடியே தீர வேண்டிய வர்கள். கிரிக்கெட் சோம் பேறிகளின் கூடாரமாக இருப்பதால்தான் அந்த விளையாட்டைப் பார்ப் பனர்கள் தேடிக் கொண்டு விடுகிறார்கள். அதுவும் இல்லாமல் அது பணம் காய்ச்சி மரம். கொட்டிக் கொண்டே இருக்குமே!
தேர்வுக் குழுவிலும் பார்ப்பனர்கள் (பி.சி.சி.அய்) என்பதால் தோளைத் தட் டிக் கொடுத்து, பூணூலைத் தடவிப் பார்த்து தேர்வு செய்வார்கள்.
பல்லாங் குழியோடு கபடியை ஒப்பிட்டுச் சொல் கிறாரே திருவாளர் சோ. இதுவரை ஒரே ஒரு பார்ப்பனர் சடுகுடு பக்கம் தலை வைத்துப் படுத்ததாக எடுத்துக்காட்டுக்குகூடச் சொல்ல முடியுமா?
நாலு பேர் அமுக்கிப் பிடிப்பான் ஆவேசமாக; புளியோதரைகள் தாக்குப் பிடிக்குமா? ஏனிந்த வீண் வம்பு? நமக்குத்தான் இருக் கவே இருக்கு - கிரிக்கெட் என்னும் சோம்பேறி விளையாட்டு - பணம் கொட்டும் பிழைப்புக்கு வசதி இருக்கும்போது கால் முறியுமோ, கை முறியுமோ, விலா எலும்பு முறியுமோ என்னும் ஆபத்தான விளை யாட்டை வரித்துக் கொள்ள அவாள் என்ன பைத்தியக் காரர்களா?
ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர், சச்சின் டெண் டுல்கர், ராகுல் டிராவிட், சவ்ரவ் கங்குலி, ஜவகர் சிறீநாத், வெங்கடேஷ் பிரசாத், அணில்கும்ளே, வி.வி.எஸ். இலட்சுமணன், கிருஷ்ணமாச்சாரி சிறீகாந்த், சுனில் ஜோஷி, மனோஜ் பிரபாகர், அஜீத் அகர்கர், ரோஹித் சர்மா, இஷாத் சர்மா,  சிறீகாந்த்,   ரவீந்திர அஷ்வின், சடகோ பன் ரமேஷ், நிலேஷ் குல் கர்னி, சிவராமகிருஷ்ணன், வெங்சர்க்கார் டபுள்யூ வி. ராமன் = இப்படி ஒரு நீண்ட அக்கிரகாரப் பட்டியல். இவர்களையடுத்து இவர் களின் பிள்ளைகளும் களத்தில் இறக்கப்படுவதும் உண்டு. இதில் என்ன வேடிக்கை தெரியுமா? இவ்வளவுப் பார்ப்பனர்கள் இருந்தும் ஒரு கபில்தேவ், ஒரு எம்.எஸ். தோனி என்று பார்ப்பனர் அல்லாதார் (ஏதோ விதி விலக்காக இவர்கள்) அணிக்குத் தலைமையேற்றபோதுதான் உலகக் கோப்பை இந்தியா வுக்குக் கிடைத்தது!
(எம்.எஸ். தோனியை அணித் தலைவர் பதவி யிலிருந்து ஒழித்துக் கட்ட குழிபறிக்கும் வேலையில் பார்ப்பன ஊடகங்கள் இறங்கியுள் ளன).
அணி வெற்றி பெற வேண்டும் என்பதைவிட தன்னலத்தின், அடிப் படையில் விளையாடி பரிசுகளைத் தட்டிச் செல் லுவதும் பார்ப்பனர் களுக்கே உரித்தான ஒன்றாகும்.
விசுவநாதன், ஆனந்த் என்ற பார்ப்பனர்   செஸ்லில் வெற்றி பெற்றால் சோ கூட்டத் திற்கு இனிக்கிறது; நம் பெண்கள் பல்லாங்குழி விளையாடினால் வேர்க் கிறதோ! அதில்கூட பெண்களை மட்டம் தட்டும் மனுதர்மப் புத்தி.
இந்த நுணுக்கங் களை எல்லாம் ஈரோட் டுக் கண்ணாடி போட்டுப் பார்த்தால்தான் துல்லிய மாக விளங்கும்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...