Wednesday, November 7, 2012

பாரீர், பார்ப்பனரை!


சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும் சரி, எதியோப்பியன் தன் நிறத்தை மாற்றிக் கொண்டாலும் சரி, பார்ப்பான் தன் பிறவிப் புத்தியை மாற்றிக் கொள்ளவே மாட்டான் என்று டாக்டர் டி.எம். நாயர் கூறினாலும் கூறினார். அவர் உயிரோடு இருந்தால் அவர் வாயில் சர்க்கரையை அள்ளிக் கொட்ட வேண்டும்.
பார்ப்பான் தமிழ்மீது கொண்டுள்ள அக்கறை எத்தகையது என்பதை அறிஞர் அண்ணாவும் அழகுபடக் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ்மொழி பயின்றும், தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும், தமிழ்மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும் பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்பு கொள்வதில்லை. அதனைத் தம் தாய் மொழியெனக் கருதுவதில்லை. அவர்களின் எண்ண மெல்லாம் வடமொழியாகிய சமஸ் கிருதத்தின் மீதுதான் (திராவிட நாடு 2.11.1947 பக்கம் 18).
தனித் தமிழ் கேட்டால் மொழி வளம் குன்றும் என்பர்; தமிழ் இசை கேட்டால் சங்கீதக் கலை க்ஷீணமடை யும் என்று கூறுவர். தமிழருக்கு அதிகாரம் வேண்டும் என்று கேட்டால் ஆட்சியிலே திறமை குறையுமே என்று கூறுவர்; தமிழருக்குச் சம உரிமை வேண்டும் என்று கேட்டால், பழங்காலப் பக்குவம் பாழாகுமே என்று பகருவர். தமிழனுக்குத் தனி நாடு வேண்டும் என்று கேட்டால் பாரத மாதா பிரலாபிப்பாளே என்று பசப்புவர். இது அவர்களின் ஆரியர்களின் பழைய பல்லவி! இது இனி பலிக்காது (_ -தமிழரின் மறுமலர்ச்சி -அறிஞர் அண்ணா பக்கம் 35)
அண்ணாவின் இந்த அளவு கோலையும் வைத்து ஆர்.எஸ்.எஸ். காரரான திருவாளர் வைத்திய நாதய்யரை ஆசிரியராகக் கொண்ட தினமணி ஏட்டில் (20.10.2012 பக்கம் 8) வெளி வந்துள்ள திருவாளர் லா.சு. ரங்கராஜன் என்பார் எழுதிய கோயில்களில் தமிழ் காந்திஜி கூறியது என்ன? என்ற கட்டுரையைப் படித்துப் பார்த்தால், அறிஞர் அண்ணா இன்று இருந்தால் அவர் வாயிலும் சர்க்கரையைக் கொட்டலாம் தான்.
தங்களுக்குத் தேவைப்படும்போது -_ ராமராஜ்ஜியத்தை உண்டாக்குவது தான் எனது இலட்சியம் எனது ஆசை என்று காந்தியார் சொன்ன பொழுது மகாத்மா காந்தி என்று பறை சாற்றிய அதே பார்ப்பனர்கள் நான் சொல்லும் ராமன் வேறு _ இராமா யணம் கூறும் ராமன் வேறு என்று காந்தியார் சொன்ன பொழுது, துப்பாக்கி ரவைகளால் எமலோகத் துக்கு அனுப்பியவர்கள் அல்லவா பார்ப்பனர்கள்.
அதே முறையில் தான் காந்தி யாரையும் இப்பொழுது இழுத்துக் குளிர் காயப் பார்க்கிறார்கள்
இந்தியா பூராவும் ஹிந்து சமயச் சடங்குகளிலும் சமஸ்கிருதம் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று காந்தியார் கூறி விட்டாராம். எனவே இதில் வேறு கண்ணோட்டம் கூடா தாம் -_ தமிழில் வழிபாடு என்ற பேச் சையே எடுக்கக் கூடாதாம்.
காந்தியார் என்ன தமிழை கரைத்துக் குடித்தவரா? ஏதோ தென்னாப்பிரிக்காவில் ஒரு தமிழர் தமிழில் கையொப்பம் போட கற்றுக் கொடுத்ததாலேயே காந்தியார் அத்துப்படியானவர் என்று பொருளா?
அப்படியே பார்க்கப் போனாலும் தமிழ்நாட்டுக்காரர்கள் எல்லாம் ஹிந்துக்களா? ஹிந்து என்பதை தமிழ் நாட்டில் உள்ள தமிழ் அறிஞர்கள் கா.சு. பிள்ளையோ, மறைமலைஅடிகள் போன்ற மேதைகளோ ஏற்றுக் கொள்ளவில்லையே.
ஹிந்து என்ற சொல் தமிழ்ச் சொல்லா? தமிழர்களே ஹிந்து இல்லாதபோது, தமிழ்நாட்டுக் கோயில்களில் சமஸ்கிருத இருமல் மொழிக்கு ஏது இடம்?
காந்தியார் இதை மட்டுமா சொன் னார்? தமிழ் நாட்டுக் கோயில்களைப் பார்த்துவிட்டு, இன்னொன்றையும் சொல்லியுள்ளாரே _ அது வசதியாக மறந்து போய் விட்டதா?
இந்தக் கூட்டத்தில் (கானாடு காத்தானில்) நகரத்தார்களுக்குக் கசப்பாகத் தோன்றக் கூடிய தம் கருத்து ஒன்றையும் காந்தியார் சொன்னார்.
ஆலயங்களை நிர்மாணிப்பதில் நீங்கள் தாராளமாகப் பணத்தைச் செலவிடுகிறீர்கள் என்று அறிகிறேன். ஆலயம் என்று ஒரு கட்டடத்தைக் கட்டி விட்டால் மட்டும் கடவுள் அங்கு இருக்கிறார் என்று எண்ணு வது மூடநம்பிக்கை. தாசி வீட்டில் எந்த அளவு இறைவன் இருப் பாரோ, அந்த அளவே அவர் இருக்கும் ஆலயங்கள் பலவற்றை நான் அறிவேன்
(தமிழ்நாட்டில் காந்தி பக்கம் 533)
என்று காந்தியார் சொல்லி இருக் கிறாரே - தினமணி ஏற்றுக் கொள் கிறதா?
விபச்சார விடுதியாக கோயில் ஆகி விட்ட பிறகு  -_ அங்கு சமஸ்கிருதம் பேசுவதுதான் சரியாக இருக்கும் என்று காந்தியார் கருதி இருப்பாரோ என்னவோ!
பண்டைய தமிழ் மன்னர்கள் தாங்கள் எழுப்பிய ஆலயங்களில் முழுக்க முழுக்க தமிழ் வழிபாட்டு முறை மட்டுமே வேண்டும் என்று முயற்சி செய்ததில்லை. ஏன் எனில் அவர்களில் பலருக்கு இவ்விரு மொழிகளிலும் புலமையும், ஈடுபாடும் இருந்தன
சங்க காலத் தமிழ்ப் புலவர்களோ சைவ சமயத்திருக்குரவர்கள் நால்வர்களோ அல்லது வேறு யாருமோ வடமொழி வேறுபாட்டை ஆட்சேபித்ததாகக் கூட தகவல்கள் இல்லை. பிற மாநிலங்களில் தாய்மொழி அபிமானிகளான மலையாளிகளோ, கன்னடியர்களோ, தெலுங்கர்களோ கூட  தாய்மொழியில்தான் வழிபாடு வேண்டும் என்று வாதாடவில்லை. தமிழ்நாட்டில் சென்ற நூற்றாண்டு இறுதிவரை இத்தகைய பிரச்சினை எழவில்லை.
மக்களுக்குப் புரியாத வடமொழி எதற்கு? என்று கேட்கிறார்கள். பழந்தமிழ் இலக்கியப் பாடல்களைப் படித்துக் காட்டினால் இப்போதுள்ள தமிழனுக்குப் புரிய வில்லை என்பதற்காக அந்தச் சங்க காலப் பாடல்களை இனி மறந்து விடலாம் என்றால் எவ்வளவு சரியோ, அவ்வளவு சரி வடமொழியை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் என்று நீட்டி முழங்கித் தள்ளியுள்ளார் திருவாளர் லா.சு. ரங்கராஜன் அய்யர் வாள்!
தொடக்கத்திலேயே ஒன்றை ஒப்புக் கொண்டுள்ளார். பண்டைய தமிழ் மன்னர்கள் தாங்கள் எழுப்பிய ஆலயங்களில் முழுக்க முழுக்க தமிழ் வழிபாட்டு முறை மட்டுமே வேண்டும் என்று முயற்சி செய்ததில்லை என்று எழுதுகிறாரே -_ இதன் பொருள் என்ன?
தமிழில் வழிபாடு இருந்தது என்று ஒப்புக் கொண்டு இருக்கிறாரா _ இல்லையா?
தமிழில் வழிபாடு இருந்தது என்பதை ஒப்புக் கொண்டபின் - இந்தக் கட்டுரைக்கு அவசியம் எங்கிருந்து வந்தது?
தமிழகக் கோயில்களில் வடமொழி செல்வாக்கு பெற்றது எப்பொழுது? பிற்கால சோழ மன்னர்கள் காலத்தில் தானே? அதற்கு முன் தமிழ்நாட்டில் கோயில்களே கிடையாதா? அப் பொழுது தமிழர்கள் பூசை செய்ய வில்லையா? தமிழில் அதனை நடத்தவில்லையா!
ராஜராஜன் காலத்திலும் அதன் பின்னர் நாயக்கர், மராட்டியர் என்று தமிழைத் தாய் மொழியாகக்  கொள்ளாதவர்களின் ஆட்சியில் கோயில்களில் எந்த மொழியில் வழிபாடு இருந்தால் என்ன என்று அலட்சியமாக இருந்தனர் என்பது தானே உண்மை.
மலையாளிகளோ, கன்னடர்களோ, தெலுங்கர்களோ சமஸ்கிருதத்தை எதிர்க்கவில்லையென்றால் அதற்குக் காரணம் அம்மூன்று மொழிகளும் பெரும்பாலும் சமஸ்கிருதமயமாக்கப்பட்டதுதான்: தமிழ் அந்நிலைக்கு ஆளாகவில்லை என்பது நினைவில் இருக்கட்டும்.
பழந் தமிழர் இலக்கியப் பாடல்கள் புரியவில்லை என்பதற்காக அதனை மறந்துவிட முடியுமா என்று திறமை யாகக் கேள்வியை எழுப்புகிறாராம்.
சங்கத் தமிழ்ப் பாடல்களின் மூலத்தைப் புரிந்து கொள்ள முடியா விடினும், அதன் பொழிப்புரைகள் மூலம் புரிந்து கொள்ள முடியும்.
வடமொழி அப்படி அல்லவே! அதைச் சொல்லுகிறவர்களுக்கும் பொருள் புரியாது என்று இதே கட்டு ரையில் ரங்கராஜன் கூறியுள்ளாரே
அர்ச்சனை செய்கிற அர்ச்ச கனுக்கே புரியாத ஒரு மொழியை ஏன் பயன்படுத்த வேண்டும்?
கடவுள் என்று சொல்லும் பொழுது வடமொழியில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்றால், கடவுள் கூட வடமொழி வெறியர்தானா? அல்லது அவருக்கு அந்த ஒரு மொழிதான் தெரியும் என்றால் - அவர் என்ன சர்வ சக்தி வாய்ந்த கடவுள்?
சைவ சமயக்குரவர்கள் நால்வரும் கோயில் கோயிலாகச் சென்று தமிழில் பாடியதெல்லாம் வெறும் குப்பைகள் தானா? அவற்றைக் கடவுள் ஏற்றுக் கொள்ளவில்லையா? அதையாவது தினமணி கூட்டத்தார் வெளிப் படையாகச் சொல்லட்டும் பார்க்கலாம்.
அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக என்றார் தூமறை பாடும் வாயார் - என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறியதாக எழுதி வைத்துள்ளனரே! இதன் பொருள் என்ன? இறைவன்! நீ தமிழில் பாடு, தமிழே நமக்கு அர்ச்சனை என்று சொன்னார் இறைவன் என்பது பொருள்.
இதற்கு என்ன பதில்? இதெல்லாம் புரூடா என்று சொன்னாலும் சொல் லும் தினமணிக் கூட்டம். சமஸ் கிருதமா கடவுளா என்றால் சமஸ் கிருதம்தான் என்று சொன்னாலும் சொல்லுவார்கள். யார் கண்டார்?
தை முதல் நாள் என்றால் எதிர்ப்பு -_ தமிழ் செம்மொழி மாநாடு என்றால் குதர்க்கம்; பெங்களூருவில் திருவள் ளுவர் சிலை என்றால் தினாவெட்டான எழுத்து, விளம்பரப்பலகைகளில் தமிழ்  என்றால், மொழி நக்சலிசம் என்ற நக்கல் இவற்றின் ஒட்டு மொத்த வடிவம் தான் பார்ப்பனர்கள். இன் றைக்கும் பிராமணாளாம்; பூணூலாம்! எண்ணிப் பாரீர்!
மீண்டும் ஒருமுறை தொடக்கத்தில் கூறப்பட்டுள்ள அண்ணாவின் கூற்றை படித்துப் பாருங்கள். உண்மை உணர்ச்சிகரமாகவே புரியும்!
தமிழா இனவுணர்வு கொள்!
தமிழா தமிழனாக இரு!
- தமிழர் தலைவர் கி.வீரமணி
- மின்சாரம்-

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...