Friday, November 16, 2012

நத்தம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட குடியிருப்பு கொளுத்தப்பட்டது - கண்டனத்துக்குரியது


நத்தம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட குடியிருப்பு கொளுத்தப்பட்டது - கண்டனத்துக்குரியது!


அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்!!
தருமபுரி அருகே நத்தம் கிராமத்தைச் சேர்ந்த இரு வேறு ஜாதிகளைச் சேர்ந்த இரு இளைஞர்களுக் கிடையே ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதை ஏற்காமல், நத்தம் தாழ்த்தப்பட்டவர்கள் குடியிருப்புகள் ஜாதிவெறி கொண்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன.
நத்தத்தையடுத்துள்ள கிராமங்களில் உள்ள தாழ்த்தப்பட்டோர் குடியிருப் புகளையும் கொளுத்தியுள்ளனர். உயிர்ப் பலி இல்லை என்றாலும் பெண்கள், குழந்தைகள் உட்பட 35 பேர் தீக் காயங்களுக்கு ஆளாகி தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளனர்.
கலவரம் ஏற்பட்டு நீண்ட நேரத்திற்குப் பிறகு தான் காவல்துறை செயல்பட்டுள்ளதாகத் தெரிகிறது. திருமணம் நடந்து பல நாட்கள் ஆன நிலையில் அங்கு ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து காவல்துறை உளவுத்துறை என்ன செய்தது என்று தெரியவில்லை. செய்தியாளர்கள் கிராமத்திற்குள் செல்ல முடியாது தடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த 2012லும் ஜாதிவெறித்தனத்தோடு நடத்தப் பட்டுள்ள இந்தக் கொடிய செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ஜாதியின் பெயரால் அரசியல், ஜாதி தீவிரவாதப் பேச்சுகள் - ஜாதி மறுப்புத் திருமணத்தைக் கண்டிக்கும் வெளிப்படையான போக்குகள்தான் இவற்றிற்கு முக்கிய மூல காரணமாகும்.
இந்தக் கொடுமைக்குப் பிறகாவது சம்பந்தப்பட்டவர்கள் திருந்த வேண்டும்; சம்பந்தப்பட்ட பகுதிகளில் கழகம் ஜாதி ஒழிப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்ளும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது சட்டப்படியான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
இத்தகைய அநாகரிகமான கலவரங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
- கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
8.11.2012 சென்னை


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...