Thursday, November 29, 2012

ஹிந்து தர்மாவைக் காப்பாற்றுகிறார்களாம்!


- மின்சாரம்
பார்ப்பனர்கள் இன்றைக்கும் எப்படி இருக்கிறார்கள்?
அவர்கள் எப்பொழுதோ திருந்தி விட்டார்கள். அவர்களிடையே எவ் வளவோ மாற்றங்கள் வந்துவிட்டன!
முனியாண்டி ஓட்டலில் மூச்சு முட்ட சாப்பிடுகிறார்கள் _ தண்ணி அடிக்கிறார்கள்; கஞ்சா அடிக்கிறார்கள் என்று சொல்லுவதெல்லாம் மாற்றமா?
மாட்டு நாக்கைத் தேடி வாங்கி சாப்பிடும் சர்.சி.பி. இராமசாமி அய்யர் கூட பார்ப்பனீயத் தன்மையைக் கட்டிக் காப்பதிலும், முட்டுக் கொடுப் பதிலும் முப்புரி நூலை முறுக்கிக் கொண்டு முன் வரிசையில் தானே நின்றிருக்கிறார்.
பல்கலைக் கழகத்திலே தங்க மெடல் வாங்கிய கே.ஆர். நாராயணன் பட்டுச் சட்டை போட்டு வந்தார் என்பதற்காக ஒரு கல்லூரி உதவிப் பேராசிரியர் வேலை கொடுக்க முன் வரவில்லையே! மாறாகக் கிளார்க்கு வேலை இருக்கிறது _ என்ன போறீயா என்று கேட்டவர்தானே?
குடிஅரசு தலைவரான நிலையில் இதுபற்றிக் கூறிப் புலம்பினாரே கே.ஆர். நாராயணன்.
வலைத் தளத்தில் ஒரு செய்தி! சென்னையைச் சேர்ந்த நாகராசன் என்ற ஒரு பார்ப்பனர்; அவர் ஒரு காலத்தில் நாத்திகவாதியாக இருந்து, மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் தெய்வத்தின் குரலைப் படித்துத் திருந்தி விட்டாராம். (அரைகுறை ஆசாமி!)
என்ன திருத்தம்? அங்கேதான் சமாச்சாரமே சத்தம் போடாமல் ஒளிந்து கொண்டிருக்கிறது.
நாகராஜனின் மகள் -வைஷ்ணவி பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் போதே கல்யாணம் கட்டி இருக்கிறார்கள். பிள்ளையாண் டானுக்கும், பெண்ணுக்கும் இடைப் பட்ட வயது ஒன்றும் அதிகம் இல்லை _  பத்தே பத்து தானாம்!
சென்னையில் படித்த பெண்;  நன்றாகப் படித்துக் கொண்டிருந்த பெண்ணுக்குத் திருமணம் ஏற்பாடு _ பள்ளித் தலைமை ஆசிரியை நல்லா படிக்கிற பெண்ணுக்கு இப்ப என்ன கல்யாண அவசரம் என்று கேட்டி ருக்கிறார்.
இல்லை; இல்லை; கல்யாணத்துப் பிறகும் கூட எங்கள் பெண் படிப்பாள் என்று உத்தரவாதம் கொடுக்க, தலைமை ஆசிரியையும் நம்பி ஆசீர் வாதம் பண்ணி அனுப்பி வைத்தாராம்!
பெண்ணின் தாயார் சொல்கிறார் கேண்மின்! சிட்டியில கல்யாணப் பண்ணினா பிரச்சினை ஆகுமுன்னு கிராமத்திலே பண்ணினோம். அந்த நாள் கல்யாணம் பெரியவர் எப்படி சாஸ்திர வார்தமா பண்ணச் சொன் னாளோ அதே மாதிரி நடந்தது விவாகம் என்றார்.
பெண்ணின் தோப்பனாரோ கல்யாணம் சத்தியமங்கலத்தில் நடந்தது என்று கூறுகிறார்.
காஞ்சி  பெரியவாள் கூறியபடி நடத்தினார்களாம். ஹிந்து தர்மாவை கடைப்பிடிப்பதற்காகவே இப்படி செய்தார்களாம்!
பார்ப்பனர்கள் என்னவோ திருந்தி விட்டனர் என்று பார்ப்பனர்களைவிட பத்து மடங்கு அதிகம் பாய்ந்து பார்ப்பனர் அல்லாதார் சிலர் பசப்பு கிறார்களே _ இந்தக் குழந்தைத் திரு மணத்துக்கு என்ன சமாதானம் சொல்லுவார்கள்?
ஹிந்து தர்மாவைக் காப்பாற்ற இவ்வாறு செய்தார்களாம். பெண்ணுக்கு 18 வயதுக்கு முன்பு திருமணம் செய்தால் சட்டப்படி குற்றம்... ஆனால் சாஸ்திரத்தைப்பற்றி கவலைப்படுகிறார் களே தவிர சட்டத்தை மலம் துடைக்கும் காகிதமாக அல்லவா கசக்கி வீசுகிறார்கள்?
பெண்களுக்கு வயது வரம்பை நிர்ணயிக்கும் சாரதா சட்டத்தை எதிர்த்துப் பார்ப்பனத் தலைவர்கள் எப்படி எல்லாம் கூச்சல் போட் டார்கள்?
அரசாங்கம் இந்துக்களுடைய விவாகத்தில் தலையிட்டால் இந்து சமூகமே கெட்டு விடும்; பெண் களுக்கு 10,12 வயதுக்கு முன்னமையே திருமணம் செய்து விட வேண்டும், இல்லையேல் பாவம் வந்து சூழும் என்று பராசரர் எழுதி இருக்கிறார். நாங்கள் பாவத்திற்குப் பயப்படு வோமா? அல்லது உங்கள் சட்டத் திற்குப் பயப்படுவோமா என்று வயது சம்மதக் குழுவின் முன் சாட்சியம் அளித்தாரே திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர்.
இந்து ஏட்டுக்கு மூக்குடைப்பு
இந்து ஏடு வேடிக்கையான வெண் டைக்காய், விளக்கெண்ணெய் பாஷ்யம் செய்தது.
இதுகுறித்து திராவிடன் ஏடு மூக்கை உடைக்கும் வண்ணம் பதிலடி கொடுத்தது.
இந்து பத்திரிகையில்  10 வயதுப் பெண்ணோ அல்லது 12 வயதுப் பெண்ணோ ஒருவனுக்கு கல்யாணத் திற்காக வேண்டும் என்று விளம்பரம் செய்திருந்தது. இதைப் பார்த்து ஒரு சீர்திருத்தக்காரர் இந்துவை ஒரு கேள்வி கேட்டார். அதாவது ஓ! இந்துவே. நீர் சீர்திருத்தக்காரன் என்று முழக்கம் செய்கின்றனயே! இந்தக் காலத்தில்கூட 10 வயது அல்லது 12 வயது பெண் ஒரு மாப்பிள்ளைக்குக் கல்யாணத்திற்காக வேண்டும் என்று விளம்பரம் செய்யலாமோ? என்று கேட்டார். அதற்கு இந்துப் பத்திரிகை சொன்ன பதில் என்ன என்று பாருங்கள்: 10 அல்லது 12 வயது பெண்களை இப்போது விவாகம் செய்வது என்பதாகக் காணப்படு வதானது விவாகச் சடங்கல்ல. அது நிச்சயதார்த்தத்திற்கு ஒப்பானது. பெண்ணையும், மாப்பிள்ளையையும் வீட்டுக்குள் விட்டுக் கதவு சாத்து கின்றோமே அதுதான் விவாகம் என்று அயோக்கியத்தனமாகப் பதில் எழுதிற்று.
இதற்கு அந்தச் சீர்திருத்தக்காரர் என்ன பதில் எழுதினார் என்றால் ஓ இந்துவே! 10 வயதிலும் 12 வயதிலும் கல்யாணம் செய்வதுபோல் கண்ணுக் குத் தெரிவதெல்லாம் கல்யாணம் அல்ல. அது நிச்சயதார்த்தம் என்று சொல்ல வருவாயானால் அந்த 10,12 வயது பெண்களின் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட புருஷன் செத்தால் தாலி அறுபட்டதாக பெயர் செய்து மொட்டையடித்து முக்காடு போட்டு மூலையில் உட்கார வைப்பது ஏன்? அதுகூட உங்கள் நிச்சயதார்த்தச் சடங்கில் சேர்ந்த நிபந்தனையா? என்று கேட்டார். உப்புக் கண்டம் பறி கொடுத்த பார்ப்பனத்திபோல் இந்து இதற்கு ஒரு மறுமொழியும் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டது. (திராவிடன் 13.03.1928 பக்கம் 7)
என்னதான் பார்ப்பனர்கள் படித் திருந்தாலும், பட்டம் பெற்றிருந்தாலும், தங்களின் பாசி பிடித்த பார்ப்பனீய ஆபாச கலாச்சாரத்திலிருந்து வெளியேறிட விரும்புவதில்லை.
எடுத்துக்காட்டாக திருவாளர் சோ. ராமசாமி அய்யரை எடுத்துக் கொள்ளலாம். இன்று வரை மனுதர்ம சாஸ்திரத்திற்கு முட்டுக் கொடுத்து எழுதி எழுதி மாய்கிறார்.
அந்த மனுதர்மம் என்ன கூறு கிறது? நாம் கூறினால் நமக்கு ஒரு முத்திரையைக் குத்தி விடுவார்கள் மறைந்த காஞ்சி மகாப் பெரியவாள் என்று மகாத்மியம் பேசுவார்களே, சந்திரசேகரேந்திர சரஸ்வதி, அவரின் அத்தியந்த சீடர் அன்னியோன்யம் என்று சொல்லுவார்களே _ அந்த அளவுக்குப் பாசக் கயிற்றால் பிணை யப்பட்டவரான அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.
நக்கீரன் இதழில்  எழுதிய  எங்கே போகிறது இந்து மதம்? என்ற தொடர் பெரிய நூலாகவே வெளி வந்துள்ளது.
பால்ய திருமணம் குறித்து மனுகூறுவதை அவரே விசனப்பட்டு எழுதியுள்ளார். அதனை எடுத்துக் காட்டுவதற்குக்கூட, எழுதுவதற்குக் கூட பேனாமுனை வெட்கப்படுகிறது.
இந்த ஸ்மிருதி (மனுஸ்மிருதி) விதியை எழுதுவதற்கு என் பேனா கூசுகிறது. இப்படிப்பட்ட ஒரு கருத்தை சுமந்து கொண்டு இருப்பதற்காக சமஸ்கிருதப் பாஷையே கூச்சப்பட வேண்டும் என்று பீடிகை போட்டே எழுதியுள்ளார்.
அவர் எழுதியதாவது: இக்கால அப்பாக்களுக்கு தெரி யாமல் இருக்கலாம். அக்கால அப்பாக் களுக்கு மநு வகுத்த தண்டனைகள் தெரியும். அதனால் அவர்கள் ஆடிப் போயிருந்தார்கள். அந்தத் தண் டனையை அனுபவிப்பதை அவர் களால் கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை.
அந்த அசிங்கத்தை செய்வதை விடவும் தங்கள் ஆயுளையே முடித்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள் அந்த அப்பாக்கள்; அப்படிப்பட்ட அளவுக்கு அது என்ன தண்டனை?
மாஸி மாஸி ரஸ்தஸ்யஹா
பிதா பிபதி கோனிதம்...
இந்த ஸ்மிருதி விதியை எழுது வதற்கு என்  பேனா கூசுகிறது. இப்படிப்பட்ட ஒரு கருத்தை சுமந்து கொண்டிருப்பதற்காக சமஸ்கிருத பாஷையே கூச்சப்பட வேண்டும். அந்த விதியின் விளக்கத்தை உங்களுக்கு தமிழில் நான் சொல்லும்போது.. தமிழன் தரம் கெட்டுவிடக் கூடாதே என நான் பயப்படுகிறேன்.
அது என்னவென்றால்... அடே கையாலாகாத அப்பா.. உன் பெண்ணை எட்டு வயதிலேயே இன்னொருவனுக்கு நீ பிடித்துக் கொடுக்க வேண்டும். தவறிவிட்டாய், அவள் இப்போது ருதுவாகி விட்டாள்.
ருதுவான பின் மூன்று வருஷத் துக்குள் நீ அவளுக்கு மண முடிக்க வில்லையென்றால்.. அவளாகவே சுயம்வரம் நடத்தி தன் கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனாலும், ருதுவாகும்வரை நீ அவளை உன் வீட்டிலேயே வைத்திருப்பது எப்படிச் சரியாகும்?
அதனால் உனக்கு இதோ தண்டனை. ருதுவாகி கல்யாணமா காமல் அவள் இருக்கும் காலம் வரை... உன் பெண்ணுடைய பஹிஷ்டை காலத்தில் அதாவது மாதவிலக்கு காலத்தில் வெளியேற் றப்படுமே கழிவு அதை அப்பாவாகிய நீ வீணாக்காமல் அருந்த வேண்டும். இப்படியொரு தண்டனையை பெறு கிறோமே என நீ வருந்த வேண்டும். அதற்காகத்தான் இந்தத் தண்டனை!
பெற்ற மகளிடம் அப்பா செய்ய வேண்டிய காரியமாக மநு சொன் னதைத் தெரிந்து கொண்டீர்களா? எழுதி முடித்தபின் என் பேனாவுக்கு குமட்டிக் கொண்டு வருகிறது. மரண தண்டனை விதித்து தீர்ப்பு எழுதிய பேனாவை முனை குத்தி முறித்துப் போட்டு விடுவதைப் போல... இந்த பேனாவையும் தூக்கி எறிந்து விடலாமா என தோன்றுகிறது என்று எழுதியிருப்பவர் விடுதலை ஆசிரியர் அல்லர்; மறைந்த மகா பெரியவாளின்  அத்தியந்த சிஷ்யர் அக்னி கோத்திரம் ராமானுஜ தாத் தாச்சாரியார் _ நினைவில் வையுங்கள்!
பார்ப்பனர்களின் கூவம் கலாச்சாரத்துக்கு மேலும் என்ன சாட்சியம் வேண்டும்?
பத்தாம் வகுப்பில் படித்த பெண்ணை சத்தியமங்கலத்துக்கு அழைத்துச் சென்று அய்ந்து நாள்கள் கல்யாணம் நடத்தியுள்ளனர் - பெரிய சங்கராச்சாரியார் சொன்னதுக்கேற்ப நடத்தி இருக்கின்றனர். ஹிந்து தர்மாவைக் கடைபிடிப்பதற்காகத்தான் இப்படி செய்துள்ளார்களாம். பார்ப்பனர்கள் திருந்தி விட் டார்களா? பதில் உங்கள் முடிவுக்கே!
சட்டம் என்ன செய்கிறது?

15 வயது பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைத்துள்ளனர். சிதம்பரத்தில் தீட்சதர்கள் வீடுகளிலும் பால்ய கல்யாணங்கள் இன்றும் நடந்து கொண்டு தானிருக்கின்றன. அரசு சட்டம் கொட்டாவி விட்டுக் கொண்டு இருப்பானேன்? பார்ப்பனர் சமாச்சாரம் என்றால் சட்டம்கூட பதுங்குக் குழிக்குப் போய் விடுமோ!


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...