Monday, October 15, 2012

மீன் கொத்திப் பறவை

மீன்கொத்திப் பறவை தமிழில் - ஆங்கிலத்திலே King Fisher இந்தப் பெயரில் விமான நிறுவனம் ஒன்று இருக்கிறது. அது நிதி நெருக்கடி யில் தள்ளாட்டம் போடுகிறது. 4000 பேர் இந்த நிறுவனத்தில் பணி யாற்றுகின்றனர். கடந்த ஆறு மாதங் களாக ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 280 பொறியாளர் கள் இந்த நிறுவனத்தை விட்டு விலகி விட்டனர். ஆறுமாதமாக தமது துணை வருக்குச் சம்பளம் இல் லாமையால் நிதி நெருக்கடியால் மனைவி தூக்கு மாட்டிக் கொண் டார் என்ற சேதிகள் எல்லாம் ஊட கங்களில் ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம் என்ன தெரியுமா? இவ்வளவு நிதி நெருக் கடியால் நாக்குத் தொங்கிப் போனா லும், இந்த நிறுவனத்தின் உரிமை யாளர் மல்லையா என்ன செய்துள் ளார்? கருநாடகாவில் உள்ள சுப்பிர மணியன் கோயிலுக்கு இரண்டரை கிலோ தங்கத்தைக் கொண்டு 80 லட்சம் ரூபாய் செலவில் தங்கக் கதவு செய்து கொடுத்துள்ளாராம்.

கடவுளை மற - மனிதனை நினை என்று தந்தை பெரியார் சொன்ன கருத்து எவ்வளவு உன்னதமானது என்பது இப்பொழுது தெரியவில் லையா?

எங்கும் நிறைந்த கடவுள் - உருவ மற்றவர் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு இன் னொரு பக்கத்தில் கடவுளுக்கு உருவம் கொடுத்து, அதனைக் காப்பாற்ற கதவுகள் - அதுவும் தங்கத்தால் என்றால் இந்தக் கடவுள் நம்பிக்கை மனிதனிடமிருந்து மனித நேயத்தை மீன்கொத்திப் போல கொத்தித் தின்று கடவுள் பொம்மைகள் மீது காருண்யம் காட்ட வைத்துள்ளதே! மனித குலத்துக்கு இந்தக் கடவுள் நம்பிக்கை எத்தகைய எதிரி என்பது இப்பொழுது விளங்குகிறதா - இல்லையா?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...