Tuesday, October 30, 2012

அண்ணா பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்துவோர் யார்?


அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ ஏடான நமது எம்.ஜி.ஆர். ஏடு விமர் சனத்தை எதிர்கொள்ளும் திராணி யின்றி விழுந்து பிடுங்கும் ஒரு வேலையில் இறங்கி இருப்பது பரிதாபமே (30.10.2012).
மின்சாரத்தைப் பெற பிரதமரை நேரில் சந்திக்க வேண்டுமே தவிர, நீதிமன்றம் பரிகாரமாகாது. நீதிமன்றம் வேறுவித மாகத் தீர்ப்பு அளித்துவிட்டால் - வேறு மார்க்கமே இல்லாத ஒரு நெருக்கடிக்குத் தமிழ்நாடு அரசு தள்ளப்படும் என்ற  கருத்தில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் விடு தலையில் வெளியிட்ட அறிக்கையைப் பற்றி விமர்சனம் செய்யலாம்; அந்தக் கருத்துத் தவறானது என்று எதிர்வாதம் வைக்கலாம்.
அதனை விட்டு, தரக்குறைவான வார்த்தைகளை வாரி இறைப்பது அந்த ஏட்டின், அந்தக் கட்சியின் தரத்தைத் தான் பறைசாற்றும் பந்தை அடிக்கமுடி யாத போது காலை அடிக்கும் ஆட்டக் காரன் போல சரக்கு இல்லாதவர்கள் ஆத்திரத்துக் கொம்பேறி அருவருப்பான வார்த்தைகளைத் தானே வாந்தி எடுப் பார்கள்.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும் என்பது குறள்.
இடித்துச் சொன்னால் எரிச்சலாகத் தான் இருக்கும். இனிப்பு இனிப்பாகப் பேசுபவர்களையும், ஆமாம் வெள்ளைக் காக்கை பறந்தது; நீங்கள் சொல்லுவது சரிதான்! என்று காக்கா பிடிப்பவர்களையும் பக்கத்தில் வைத்துக் கொண்டால் முடிவு பரிதாபகரமாகத்தானிருக்கும் என்பது வரலாறு அடித்துச் சொல்லிக் கொடுக்கும் பாடமாகும்.
அண்ணாவை கட்சியின் பெயரிலும், கொடியின் உருவத்திலும் பொறித்துக் கொண்டு, திராவிட என்ற இனப் பண் பாட்டுப் பெயரையும் கட்சியில் இணைத் துக் கொண்டு, இந்தத் தலைவர்களின் கொள்கைகளுக்கு எதிராகவும், திராவிடர் இயக்கத்தின் அடிப்படைக் கோட் பாடுகளுக்கு முரணாகவும் பூணூல் தத்துவத்தைப் பற்றியும், திருநீற்றின் மகிமை பற்றியும் பெரியார் கருத்தைச் சொல்ல வேண்டியவர்கள் வாரியார் கூறியதை வாந்தி எடுத்ததையெல்லாம் வக்கணையாக வெளியிடுபவர்கள் கருப்புச் சட்டையைப் பற்றியோ, அதன் தலைவரைப் பற்றியோ பேசலாமா? எழுதலாமா? வாரியார் பற்றி அண்ணா எழுதியது பற்றி நமது எம்.ஜி.ஆர். ஏட்டில் எழுதுவோர்க்குக் கடுகளவாவது தெரியுமா? அந்தோ பரிதாபம்! (இது குறித்து எல்லாம் விடுதலை எழுப்பிய அடிப்படைக் கேள்விகளுக்கு விடை சொல்ல முடியவில்லை - பதுங்கிக் கிடக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது).
அண்ணா பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்துவோர் யார்? உண்மையான கொள்கையைப் புரிந்துகொண்ட ஒரே ஒருவர் அ.இ.அ.தி.மு.க.வில் இருந்தா லும் அவருக்கே நன்றாகத் தெரியுமே இந்த உண்மை!
அண்ணா திமுகவா? அக்ரகார திமுகவா? ஆன்மீக திமுகவா? கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய வேண்டாம்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...