Sunday, October 14, 2012

அறிவியலைப் போல அழியாதது திராவிடர் இயக்கம்!


சென்னை, அக். 13- இயல், நாடக, நூல் வெளியீடு என்று முப்பெரும் விழா வாக 11.10.2012 அன்று இயல் விழாவாக வும், சனிக் கிழமை (13.10.2012) அன்று நாடக விழாவாகவும் அழ கர் சாமியின் குதிரை திரைப் படத்தை திரை யிட்டும் தந்தை பெரியார், அறி ஞர் அண்ணா பிறந்த நாளை பெரியார் நூலக வாசகர் வட்டம் கொண் டாட திட்டமிட்டிருந்தது. அதன்படி முதல் நாள் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் 1930 ஆவது நிகழ்வாகவும் அமைந்த இந்த நிகழ்ச்சி, வியாழன் (11.10.2012) மாலை பெரியார் திட லில் உள்ள அன்னை மணியம்மை யார் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச் சியை, வாசகர் வட்டத் தின் துணைச் செய லாளர் த.சுப்பிரமணியன் அனைவரையும் வரவேற் றுப் பேசினார். தொடர்ந்து அதன் தலைவரான மயிலை நா.கிருஷ்ணன் தலைமை யுரையாற்றினார். முரசொலி நாளிதழின் பொறுப்பாசிரியர் பி.டி.சக்திவேல் தந்தை பெரியார் அறிஞர் அண்ணா இருவரும் இணைந்திருக்கும் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார்.
திரைப்பட பின்னணிக் குரல் கலைஞர்களுக்குப் பாராட்டு
வெள்ளை சுப்பையா, சுப்புலெட்சுமி சிவராமன் ஆகியோர்க்கு சிறப்பு...
பின்னணியில் இருப் பவர்களை முன்னணிக் குக் கொண்டு வரும் சிந்தனையைத் தூண்டும் வகையில், திரைப்படப் பின்னணிக் குரல் கலை ஞரும் நடிகருமான வெள்ளை சுப்பையா, திருமதி சுப்புலெட்சுமி சிவராமன் ஆகிய இரு வருக்கும் தமிழர் தலை வர் பரிசு வழங்கிச் சிறப் பித்தார்.
நீண்ட ஆயுளுக்கான உணவு முறைகள்
பரிசளிப்பைத் தொடர்ந்து, அவர்களால்  வாசகர் வட்டத்தில் ஆற்றிய உரை நூலாக தொகுக்கப்பட்டு தமிழர் தலைவர் அவர்களால் வெளியிடப்பட்டது. அவர் தமதுரையில், பரிசு பெற்ற அனைவரையும் பாராட்டிப் பேசிவிட்டு, பெரியாரையும், அண் ணாவையும் சுட்டிக் காட் டிப் பேசினார். அப்பொழுதுதான், திராவிடர் இயக்கம் அறி வியல் போன்றது. அதனை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது என்று பலத்த கைதட்டலுக் கிடையே குறிப்பிட்டார்.
பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் செயலாளர் கி.சத்தியநாராயணன் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். பொருளாளர் கு.மனோகரன் இணைப் புரை வழங்கி சிறப்பித்தார். நிகழ்ச்சியில், திராவிட இயக்க மூத்த ஆய்வாளர் கு.மனோகரன் க.திருநாவுக் கரசு, புலவர் வெற்றிய ழகன், திரைப்பட நடிகர் குமரி முத்து, முன்னாள் மேயர் சா.கணேசன் மற்றும் திராவிட இயக்கச் சிந்தனையாளர்கள் பலரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
பெரியார் 1000 வினா விடை போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு
சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் நடத்தப் பட்ட பள்ளி மாணவர்களுக் கான பெரியார் 1000 வினாடி வினா எழுத்துத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு 11-10-2012 அன்று நடைப் பெற்ற விழாவில் தமிழர் தலைவர் அவர்களால் பரிசு வழங்கப் பட்டது.
சென்னையில் நடைபெற்ற  பெரியார் 1000 வினாடி வினா போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு. கடைசி படம்: வேலம்மாள் பள்ளி மாணவி யாழினி நாகம்மையார் இல்லத்துக்கு ரூ.ஆயிரம் நன்கொடை அளித்தார்.
முதல் பரிசு  ரூ. 5000/- கலிகி அரங்கநாதன் மாண்ட் போர்ட் பள்ளி யைச் சார்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஆர். பத்மநாபன் பெற்றார். இரண்டாம் பரிசு  ரூ. 3000/- கலிகி அரங்கநாதன் மாண்ட் போர்ட் பள்ளி யைச் சார்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி த.கிறி டினா ஜுலி பெற்றார். மூன்றாம் பரிசு  ரூ. 2000/- கிரேஷ் மெட்ரிகுலேஷன் பள்ளியைச் சார்ந்த ஆறாம் வகுப்பு மாணவி இரா.சுவேதா பெற்றார்.
முதல் பரிசினை கரிகாலன் அவர்களும், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரி சினை ஆதம்பாக்கத்தைச் சார்ந்த தோழர் சபேசன் அவர்களும் வழங்கினர். இருவரை யும் தமிழர் தலைவர் அவர்களால் பயனாடை போர்த்தி சிறப்பித்தார்.
வேலம் மாள் மெட்ரிக்குலேசன் பள்ளி யில் பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவி யாழினி, தான் பெற்ற பரிசுத் தொகை யான ரூ.ஆயி ரத்தை நாகம்மையார் குழந்தை கள் இல்லத்திற்கு தமிழர் தலைவரிடம் அளித்து மகிழ்ந்தார்.
நிகழ்வில் வட சென்னை மாவட்ட பகுத் தறிவாளர் கழகத்தின் தலைவர் இரா. தமிழ்ச் செல்வன், செயலாளர் கோவி.கோபால், துணைத் தலைவர் வெங்கடேசன், தென் சென்னை மாவட் டச் செயலாளர் திரா விடப் புரட்சி மற்றும் பலர் கலந்து கொண்டனர். போட்டியில் அதிக மாணவர்களை கலந்து கொள்ளச் செய்த கலிகி அரங்கநாதன் மாண்ட் போர்ட் பள்ளி ஆசிரியை டெய்சி மணியம்மை அவர் களும் கலந்து கொண்டார்.



இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...