Thursday, October 18, 2012

1. புனித கங்காஜலம் பற்றி....!


நதிகளைப் புனிதம் என்று கருதி அதில் நீராடினால் மோட்சம் என்ற கூற்றை இந்துமதம் என்ற பார்ப்பன - வேத மதவாதிகள் கற்பித்து, அதனையும் தங்கள் வருவாய் ஊற்றுக்களாக மாற்றி ஏமாந்த மக்களைச் சுரண்டி, சுகபோகம் அனுபவிக்கின்றனர்.
அப்படிப்பட்ட இந்திய நதிகளில் முதன்மையானது கங்கைதான்! இந்தப் புனித கங்கையைப் பற்றி இன்று ஒரு செய்தி.
புற்றுநோய் பற்றிய ஆய்வுப் பதிவு நிகழ்வுகளில் ஒன்றாக, கங்கைக் கரையோரம் உள்ளவர்களுக்கு மற்றப் பகுதி வாழ் மக்களைவிட புற்று நோய் வர அதிக வாய்ப்புள்ளது என்று கண்டறிந்துள்ளனர்!
புனித கங்கைக் கரையோரத்திற்கு இப்படி ஒரு சிறப்பா?
காரணம் கங்கையில் உள்ள அசுத்தங்கள், பிணங்களைக்கூட அப்படியே தள்ளிவிடும் பழக்கம் அங்கே உண்டு என்பது கங்கைக்குப் போய் வந்தவர்கள் கண்ட காட்சிகள் ஆகும்!
புனித கங்கை கங்கா ஜலம், தீபாவளியன்று கங்காஸ்நானம் ஆச்சோ? என்ற ஆச்சார அனுஷ் டானக் கேள்வி ஒரு பக்கம்; இங்குள்ள கோயில் கோபுரங்களில் ஜீரணத்தோரண பூரணகும்பா பிஷேகத்தின்போது, கும்பங்கள் மேல் கங்கா ஜலம் ஊற்றும் பழக்கம் உண்டு!
புனித கங்கையைச் சுத்தப்படுத்த அந்தத் திட்டத்தின் கீழ் இப்போது 2000 கோடி ரூபாய் ஒதுக்கி செலவழிக்கிறார்கள்!  (Ganga Action Plan I & II) கங்கை ஆற்றுப்படுகை ஆணையத்திற்கு வரும் 10 ஆண்டுகளுக்குச் செலவழிக்க ரூ.15,000, (பதினைந்து ஆயிரம்) கோடி பணத்தை ஆறாகக் கொட்டி சுத்திகரிக்கப் போகிறார்களாம்!
இப்படி ஒரு மோசமான நோய்த் தீர்த்தமான கங்கையை, புனித கங்கை (Holy Ganges) என்று அழைக்கலாமா? அதன் நீரை தீர்த்தம் என்று வாங்கிக் குடித்து நோய்க் கிருமிகளை உடலுக்குள் செலுத்திக் கொள்ளலாமா? மூடத்தனம் அல்லவா?
பக்தி வந்தால் புத்தி போகும்
புத்தி வந்தால் பக்தி போகும் என்ற
தந்தை பெரியாரின் அறிவுரைதான் எப்படிப்பட்ட உண்மை என்பது இப்போதாவது புரிகிறதா?
முன்பு ஒரு முறை இந்திய - பிரெஞ்சு கலாச்சாரத்தை வலுப்படுத்த இந்திய நதிகளின் நீரை - பிரான்ஸ் நாட்டு நதிகளில் விட முடிவு செய்தார் திரு. இராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது! பியூபுல் ஜெயகர் என்ற அம்மையார் இந்திய கலாச்சார அமைப்பின் தலைவராக இருந்தபோது இந்த அரிய (?) ஆலோசனையை வழங் கினார். கங்கை நீர் வருகிறது என்று கேள்விப்பட்ட பிரெஞ்சு அரசு  - பாரீசில் ஓடும் சேன் (Seine) நதியில் கங்கை நீரை ஊற்றிச் சுற்றுச் சூழலுக்குக் கேடு செய்து விடக் கூடாது என்று தடை போட்டு, தங்களை சுகாதாரக் கேடு என்ற அவலத்திலிருந்து காப்பாற்றிக் கொண் டார்கள்! தொற்றுநோய்கள் இந்த நீரின் வழியே வரும் என்ற அறிவியல் உண்மைகளை அறிந்தும்கூட படித்த முட்டாள்கள் வரை கங்கையை புனித நீர் என்று கூறு கிறார்களே! வெட்கம்! மகா வெட்கம்!!
- ஊசி மிளகாய்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...