Sunday, September 23, 2012

ஜனனி அய்யர்! ராணி முகர்ஜியா? (1)


ஜனனி அய்யர்! ராணி முகர்ஜியா? (1)
1. ஜனனி அய்யர் (கதாநாயகி) நடித்த திரைப்படம்: அவன் இவன்
2. அனுஜா அய்யர் (துணை நடிகை) நடித்த திரைப்படம் உன்னைப் போல் ஒருவன்
3. கவுதம வாசுதேவமேனன் (இயக்குநர்) காக்க காக்க, வாரணம் ஆயிரம், வேட்டையாடு விளையாடு, போன்ற திரைப்படங்களை எழுதி இயக்கியவர்.
4. சமீராரெட்டி (கதாநாயகி) நடித்த திரைப்படம்; வாரணம் ஆயிரம்.
5. பூமிகா சாவ்லா (கதாநாயகி) நடித்த திரைப்படம்; ரோஜாக் கூட்டம்.
6. ராணி முகர்ஜி (கதாநாயகி) நடித்த திரைப்பட  (ஹேராம்).
7. நவ்யா நாயர் (கதாநாயகி) நடித்த திரைப்படம்: சிதம்பரத்தில் அப்பாசாமி.
8. கீர்த்திசாவ்லா (கதாநாயகி) நடித்த திரைப்படம்: நான் அவன் இல்லை.
இவை எல்லாம் சினிமாவில் தலை காட்டும் கதாநாயகி கதாநாயகர்களின் பெயர்கள்.
ஒரு கட்டத்தில் ஜாதி பெயர்களில் சினிமாக்களை எடுக்க ஆரம்பித்தனர். கடை விரித்தேன் கொள்வாரில்லை என்பதோடு அவற்றின் கதை முடிந்து போயிற்று.
இப்பொழுது சினிமா நடிகைகள், நடிகர்கள் வெளி மாநிலக்காரர்கள் ஜாதிப்பட்டங்களோடு அரங்கேறிக் கொண்டு இருக்கின்றனர்.
இதில் ஒரு கடைந்தெடுத்த வெட் கக்கேடு பெண்களாக இருக்கக் கூடிய நடிகைகள்கூட தங்கள் பெயர்களுக்குப் பிறகு அய்யர் என்றும் ரெட்டி என்றும், முகர்ஜி என்றும்  ஜாதி வாலை ஒட்ட வைத்துக் கொண்டு இருப்பதுதான்.
பெயர்களுக்குப்பின் பெண்கள் ஜாதிப் பெயர்களை வைத்து கொள்வது கிடையாது. பெண்களைப் பொறுத்த வரை இந்து மதத்தில் அவர்ணஸ் தர்கள்; அதனால் ஜாதி என்ற பேச்சுக்கே இட மில்லை.
பெண்களுக்குப் பூணூல் தரித்துக் கொள்ளும் உரிமையும் கிடையாது. எனவே பார்ப்பனப் பெண்கள்கூட சாஸ்திரப்படி  பிராமணர் ஆகமுடி யாது என்றாலும் அவ்வாறு சொல்லிக் கொள்வதில் மட்டும் குறைச்சல் இல்லை.
சினிமாவில் குதிக்கும் பெண்கள் தங்கள் பெயர்களோடு அய்யர் பட்டத்தை, ஜாதிப் பட்டத்தைப் போட்டே தீர வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்களாம். சினிமா வட்டாரத்தில் அவ்வாறு சொல்லப்படுகிறது.
இது உண்மை என்றால், இதுபற்றி தமிழ்நாட்டு வீதிகளில் மேடைகளில் சர்ச்சைப் புயல்கள் வெடித்துக் கிளம்பும் என்பதில் அய்யமில்லை.
தமிழ் மண்ணுக்கென்று சில குணம், மணம் உண்டு. சினிமா தயாரிப்பாளர்க ளும், இயக்குநர்களும் இதனை அறி வார்கள். வீண் பிரச்சினையைத் தமிழ்நாட்டில் திணிக்க வேண்டாம். ஜாதிப் பெயர்களை ஒட்டிக் கொண்டு, சினிமா மோகத்தில் மயங்கிக் கிடக்கும் தமிழர்களின் அப்பாவி ரசிகர்களின் தொடைகளில் கயிறு திரிக்கலாம் என்று மனப்பால் குடிக்க வேண்டாம்.
எச்சரிக்கை! எச்சரிக்கை!!
ஜாதியைக் காப்பாற்ற நிலை நாட்ட பார்ப்பனீயம் இப்படி ஒரு யுக்தியை மேற்கொள்கிறதோ என்று சந்தேகிக்கவும் இடம் உண்டு.
ஜாதி ஒழிக்கப்பட்டால் தங்களின் உயர் ஜாதித்தனம் ஒழிந்து போய் விடும் என்பது அவர்களுக்குத் தெரியுமே!\
- மின்சாரம்


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
<< முன்புஅடுத்து >>

{youtube}AZSMGp6ZIH8{/youtube}

1 comment:

Pandian R said...

இட ஒதுக்கீட்டுக்காக மாத்திரம் சாதிய சொல்லலாங்களாண்ணா?

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...