Wednesday, August 8, 2012

களத்துள் நுழையும் முன்பே களப்பலி!


பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானி தமது சொந்த வலை தளத்தில் எழுதி உள்ள கட்டுரை நாட்டில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. அதற்குப் பல்வேறு உள் நோக்கங்களும் கற்பிக்கப் படுகின்றன.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதமருக் கான வேட்பாளராக பா.ஜ.க. சார்பில் அறிவிக் கப்பட்டவர் அத்வானி. அதில் அவர் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது.
இந்த முறையும் அவர் பெயர் தொடக்கத்தில் அடிபட்டாலும், அண்மைக் காலத்தில் அவர் பெயர் பின்னுக்குத் தள்ளப்பட்டது. குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திர மோடி கொஞ்சம் வெளிச் சத்துக்கு வந்து கொண்டிருந்தார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மிக முக்கிய அங்கம் வகிக்கும் அய்க்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்தவரும், பிகார் முதல் அமைச்சருமான நிதிஷ் குமார் இதனைக் கடுமையாக எதிர்த்தார். பிரதமருக்கான வேட்பாளர் மதச் சார்பின்மைக் கொள்கையில் நம்பிக்கை உள்ளவராக இருக்க வேண்டும் என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டார். குஜராத் மாநிலத்தில் இந்துத்துவா வெறியராக மதம் பிடித்த யானை போல், சிறுபான்மை மக்களைத் துவம்சம் செய்த ஒருவர் எப்படி இந்தியாவின் பிரதமருக்கான வேட்பாளராக இருக்க முடியும் எனும் நியாய உணர்வு நிதிஷ் குமாரின் கேள்வியில் மிகுந்து நின்றது. இது  கொள்கை ரீதியில் சரியான ஒரு பார்வைதான்.
பிகார் மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்குக் கூட நரேந்திரமோடி பிரச்சாரத்துக்கு வரக்கூடாது என்பதிலே தெளிவாகவே இருந்தார் நிதிஷ்குமார்.
இவற்றை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்க்கும் பொழுது, பாரதீய ஜனதாவின் மூத்த தலைவரான அத்வானியின் கணிப்பு மிகவும் சரியானதே!
பி.ஜே.பி. இப்பொழுது ஆட்சியில் இருக்கும் கருநாடகம் போன்ற மாநிலங்களில் கூட பி.ஜே.பி. ஆட்சிக்குக் கடுமையான கெட்ட பெயர்தான். அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி மீது ஊழல் குற்றச்சாற்றை ஏவிவிடலாம் என்று திட்டமிட்டு இருந்தனர். கருநாடக மாநிலத்தில் பி.ஜே.பி. ஆட்சியில் நடைபெற்று வரும் ஊழல் கும்பி நாற்றம் ஊழலைப் பற்றி அக்கட்சி வாயைத் திறப்பதற்கான அடிப்படைத் தகுதியை இழக்கும் படிச் செய்துவிட்டது.
தூய்மையான நிருவாகம் என்ற நரேந்திர மோடியைப் பார்ப்பன ஊடகங்கள் தூக்கிப் பிடித்தன. ஆனாலும் அங்கேயும் ஊழலுக்குப் பஞ்சம் இல்லை.
குஜராத் மாநில நீர்த்தேக்கங்கள் மற்றும் அணைகளிலும் மீன் பிடிப்பதற்கான ஒப்பந்தத்தில் பெரும் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகக் கூறி குஜராத் மாநில அமைச்சர் புருசோத்தம் சோலங்கி மீது இர்ஷத் மாராடியா என்பவர் அகமதாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந் துள்ளார்!
அமைச்சரவையின் முடிவையும் மீறி ஆளுநர் வழக்குத் தொடுக்க அனுமதியும் கொடுத்துவிட்ட நிலையில், சம்பந்தப்பட்ட அமைச்சரை விட பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திர மோடி விழி பிதுங்கிக் காணப்படுகிறார்.
மோடிதான் பிரதமருக்கான வேட்பாளர் என்ற நிலை வந்தால், அதைவிட அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக்கு அனுகூலம் வேறு ஒன்றும் இருக்க முடியாது. சிறுபான்மை மக்களும், மதச் சார்பற்ற சக்திகளும் ஒன்றாக எழுந்து நின்று மோடியையும், அவரைச் சார்ந்த அணியையும் மூழ்க அடித்துத்தான் மறு வேலை பார்க்கும். அதுவும் அல்லாமல் மாநிலத்துக்குள்ளேயே பி.ஜே.பி.க்குள் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
குஜராத்தைத் தாண்டியும் மோடிக்கு எதிர்ப்பு கட்சிக்குள்ளும் உண்டு. கட்சியின் தலைவர் நிதின் கட்காரியே மோடியை ஏற்றுக் கொள்பவர் அல்லர்.
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது அத்வானியின் கணிப்பு சரியானதே என்ற முடிவுக்குத்தான் வர வேண்டியிருக்கும். அத்வானி யின் எழுத்துகளுக்கு என்னதான் பாஷ்யங்களைக் கொடுக்க முனைந்தாலும் களத்துள் இறங்கு வதற்கு முன்பே தோல்வி என்ற நிலைப்பாடு மக்கள் மத்தியில் எழுந்துவிட்டதே! இனி என்ன செய்து என்ன பயன்?


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
அடுத்து >>

1படப் புதிர்
2குறளுக்கேற்ற படம்
3மூளைக்கு வேலை
4பிஞ்சுகளின் சிந்தனைக்கு
5பிஞ்சுகள் பக்கம்
6உலக நாடுகள் அக்ரோட்டிரி மற்றும் தெக்கேலியா
7சுடோகு விடை
8சின்னச் சின்ன செய்திகள்
9துகளிலும் இல்லாத கடவுள்
10அய்ன்ஸ்டினின் இறுதிக் காலம்
11ஆகஸ்ட் மாதத்தில்....
12சூழல் காப்போம் தண்ணீர் தண்ணீர்......!
13சைவமா? அசைவமா?
14விண்ணில்...
15உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நகரம் சிலிகான் பள்ளத்தாக்கு
16மண்ணில்...
17கணிதப் புதிர் சுடோகு
18மனக்கணக்கு 100க்கு X 100
19தெனாலிராமன் கதை விடிய விடிய நீர் இறைத்தும்......
20சின்னக்கை சித்திரம்
21உலகப் புகழ் பெற்றவர்கள் உக்ரைன் நாட்டின் உள்ஓளி தாராஸ் செவ்சென்கோ (TARAS SHEVCHENKO) (1814-1861)
225 ,300 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மி
23வரைந்து பழகுவோம்
24இப்ப புரியும் பாருங்க......
25'விடுதலை' ஆசிரியர் 50
26நினைவு நிலைக்க - மறக்காமலிருக்க

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...